| தீபாவளிக்கு "சரக்கு' விற்பனைக்கு அரசு இலக்கு: அதிக ஸ்டாக் வைக்க டாஸ்மாக் கடைகளில் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு "சரக்கு' விற்பனைக்கு அரசு இலக்கு: அதிக ஸ்டாக் வைக்க டாஸ்மாக் கடைகளில் ஏற்பாடு

Updated : அக் 25, 2010 | Added : அக் 23, 2010 | கருத்துகள் (87)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக "டாஸ்மாக்' கடைகளில் தட்டுப்பாடு இன்றி சரக்கு விற்பனை செய்யும் வகையில், 10 நாள் சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சரக்கு சப்ளை பணி, அக்டோபர் 29ம் தேதி முதல் துவங்குகிறது. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் நிர்ணயம் செய்த இலக்கை விட, 50 கோடி ரூபாய் கூடுதல் விற்பனை நடந்ததால், நடப்பாண்டுக்கான, "டாஸ்மாக்' சரக்கு விற்பனை இலக்கு 300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த 2003 நவம்பர் மாதத்தில் இருந்து தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. மது விற்பனை துவக்கப்பட்ட ஓர் ஆண்டில் 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அதுவும் நடப்பாண்டு சாரசரி மது விற்பனை, 18 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 25 சதவீதம் உயர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 7,434 கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வருகிறது.


தமிழகத்தில் மொத்தம் உள்ள, "டாஸ்மாக்' கடைகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இரு மண்டலங்கள் என செயல்பட்டு வருகிறது.ஒரு மண்டலத்திற்கு விற்பனை அடிப்படையில், சராசரியாக ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து, "டாஸ்மாக்' கடைகளிலும் அக்டோபர் 29 முதல் மூன்று நாள் சரக்கு இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 1 முதல் 10 நாட்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக, "டாஸ்மாக்' கடைகளுக்கு வழக்கமாக தினந்தோறும் சப்ளை செய்யப்படும் 50 லட்சம் பாட்டில் சரக்குகள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, ஒரு கோடியே 50 லட்சம் பாட்டில் சரக்குகளை அக்டோபர் 28 முதல் கடைகளின் விற்பனைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 தீபாவளி பண்டிகைக்கு தேவையான சரக்குகள் குறித்து நேற்று முதல் (இன்டன்) வாங்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட, "டாஸ்மாக்' கடைகளுக்கு பிராந்தி, விஸ்கி, பீர், ஒயின் என தேவைக்கு தக்கபடி சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது.கடைகளில் தட்டுப்பாடின்றி மதுபானங்கள் கிடைக்கும் வகையில், விற்பனையை பொருத்து, கடைகளுக்கு சரக்கு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் சரக்கு தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாவட்டத்துக்கு, 10 லாரிகளில் சரக்குளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கு எல்லாம் மேலாக நவம்பர் 1 முதல் நவம்பர் 7ம் தேதி வரை, அனைத்து பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சரக்கு விலை ஏற்றம் செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்காணிக்க, பறக்கும் படை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


 "டாஸ்மாக்' அதிகாரி கூறியதாவது:கடந்த ஆண்டு தீபாவளி நாளில் 200 கோடிக்கு சரக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து இருந்தோம். ஆனால், 250 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை ஆனது. இலக்கை விட அதிகளவில் சரக்கு விற்பனை செய்யப்பட்டதால், நடப்பாண்டு சரக்கு விற்பனையின் இலக்கு 300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இலக்கு உயர்வுக்கு ஏற்றபடி சரக்குகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு தேவையான சரக்குகளில் வேகமாக விற்பனையாகும் சரக்கு, முடங்கி கிடக்கும் சரக்கு, விலை உயர்ந்த சரக்கு, புதிய அறிமுக சரக்கு என, பிரித்து சப்ளை செய்யப்படுகிறது. இதில் வேகமாக விற்பனையாகும் சரக்குகளின் சப்ளை 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளி நாளில் பல கடைகளில் சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் சரக்குகள் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக, தமிழகம் முழுவதும் உள்ள "டாஸ்மாக்' கடைகளுக்கு சப்ளை செய்யவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் அந்தந்த மாவட்ட குடோனுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சரக்குகளை கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.இந்த ஆண்டு தீபாவளி தினத்தில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு "டாஸ்மாக்' அதிகாரி கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் - 


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ragavendra - Bangalore,இந்தியா
30-அக்-201013:39:40 IST Report Abuse
Ragavendra if mr karnanidhi wants remain real leader , and thinks about middle class and poor people's then he should ban Alcohol if u do this we can so many childrens future , can able to give happiness to crores of fmly which are suffering from this disease , today alcohol is the no -1 disease to be cured with out doing this , even if you give 75% resevation we can lift the poor people. if mr kalignar does this before the end of is era ,he can get free from all his sins with poor people blessing, only gujrat chief minister Mr modi' is done in india and taking gujrat to most developed state in india and remains as role model to all the cm's of india
Rate this:
Share this comment
Cancel
G.S.Rajan - chennai,இந்தியா
30-அக்-201008:22:56 IST Report Abuse
G.S.Rajan தீபாவளிக்கு புதுத்துணி எடுத்து,பட்டாசு வெடித்து,ஸ்வீட் மற்றும் பலகாரங்களை குழந்தைகள் மற்றும் மனைவியோடு ,பெரியவர்களிடம் ஆசி பெற்று குதூகலமாக கொண்டாட வேண்டிய தீபாவளியை பாடுபெற்று சம்பாதித்த காசை கொடுத்து மது குடித்து ,புழுதியில்புரண்டு மது மயக்கத்தில் கொண்டாட வைக்க தமிழக அரசு எடுத்துள்ள முயற்சியை பாராட்ட வார்த்தைகளே வரவில்லை. ஏழைகளை,நடுத்தர மக்களை.பள்ளி.கல்லூரி மாணவ,மாணவிகளை குடிகாரர்கள் ஆக்கி அவர்கள்குடும்பத்தை சீரழித்து நடுதெருவிற்கு கொண்டுவருவதன் பாவம, அதனால் அவர்கள் குடும்பம் வயிறு எரிந்துவிடும் சாபம் ஆள்பவர்களை கட்டாயம் சும்மா விடாது என்பது மட்டும் உறுதி. ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
vengat - singapore,சிங்கப்பூர்
27-அக்-201018:32:43 IST Report Abuse
 vengat டாஸ்மாக் என்ன தமிழ் பெயரா.தமிழக அரசுக்கு இது தெரியாதா
Rate this:
Share this comment
Cancel
shanmuganathan - dubai,இந்தியா
27-அக்-201017:32:20 IST Report Abuse
shanmuganathan இதுலாம் கேட்குரதுக்கு ஆள் இல்லையா
Rate this:
Share this comment
Cancel
D Thirulogasankar - thiruvannamalai,இந்தியா
27-அக்-201014:36:46 IST Report Abuse
D Thirulogasankar தலைவா.... எங்க ஊருக்கு ஒரு கிளை வேண்டும்....... பக்கத்துக்கு ஊருக்கு எங்க ஊருக்கும் வாய்கா தகறாரு எங்கள் ஓட்டு தலைவருக்கு
Rate this:
Share this comment
Cancel
27-அக்-201010:18:43 IST Report Abuse
மாற்றம் விரும்பும் tamilan குடிகார நாய்களே, மன்னிக்கவும் மக்களே, டாஸ்மாக் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும்.. வார இறுதி நாட்களில் மட்டும் கிடைக்குமாறு செய்யலாம்.ஆறு மாதங்களில் அதையும் நிறுத்தலாம், விவசாயத்தில் புரட்சி செய்து விலை வாசியை குறைக்கலாம். செய்யுமா இந்த மானங்கெட்ட, மக்கள் விரோத கருணாநிதி அரசு.
Rate this:
Share this comment
Cancel
தனுஷ் - விருதுநகர்,இந்தியா
27-அக்-201009:28:03 IST Report Abuse
தனுஷ் வரும் தேர்தலில் கலைஞரின் இலவச 'சரக்கு' திட்டம் அல்லது வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரேசனில் 'சரக்கு' வழங்கும் திட்டம் அமல்படுத்துவதற்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறதாம்.
Rate this:
Share this comment
Cancel
ச.நித்தியானந்தம் - mauritius,மொரிஷியஸ்
26-அக்-201022:33:26 IST Report Abuse
ச.நித்தியானந்தம் தமிழ் இனி ( இனம் ) மெல்ல சாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
Rate this:
Share this comment
Cancel
கோட்டர் கோவிந்த் - கோட்டர்பாளையம்,இந்தியா
26-அக்-201019:17:48 IST Report Abuse
கோட்டர் கோவிந்த் ஒரு கோட்டருக்கு ஒரு டம்ளர் ஒரு தண்ணி பாக்கெட் இலவசமா கொடுங்க அடுத்த தேர்தலில் உங்களுக்கே ஒட்டு போடுறேன்
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - வெள்ளகோவில்,இந்தியா
25-அக்-201013:40:52 IST Report Abuse
தமிழன் சியர்ஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை