ஒபாமா வருகை முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானது: பா.ஜ., புகார்| Dinamalar

ஒபாமா வருகை முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானது: பா.ஜ., புகார்

Added : நவ 06, 2010 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஒபாமா வருகை முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானது: பா.ஜ., புகார்

புதுடில்லி; "அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை, முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டது' என,  பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.


அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று மும்பை தாஜ் ஓட்டலில் பேசினார்.  அப்போது, மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து நேரடியாக எதையும் தெரிவிக்கவில்லை என, பா.ஜ., புகார்  கூறியுள்ளது.  இதுதொடர்பாக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி நிருபர்களிடம் கூறியதாவது: மும்பையில் தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தான் மண்ணில் திட்டமிடப்பட்டு இங்கு அரங்கேற்றப்பட்டது. இது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தெரியும். ஆனால், பாக்., பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்தவொரு கருத்தையும் ஒபாமா தெரிவிக்காதது பா.ஜ.,வுக்கு அதிருப்தி அளிக்கிறது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் இன்று நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், ஒபாமாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் விவாதிக்கவுள்ள பொருட்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.


ஒபாமா இந்தியாவிற்கு வரும் முன், இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் விடுத்த அறிக்கைக்கும், ஒபாமா தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கைக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஒபாமாவின் வருகை அமையும் என, ராவ் தெரிவித்திருந்தார்.  ஆனால், ஒபாமாவின் பயணமோ, முழுக்க முழுக்க வர்த்தக ரீதியில் அமைந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இந்தியா  மற்றும் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. பிரதமரும், இந்திய தூதரக அதிகாரிகளும் இந்திய மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.


அதேபோல், அதிபர் ஒபாமா நாளை பார்லிமென்டில் உரை நிகழ்த்தும் போது, அதை புறக்கணிக்கப் போவதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சிவானந்த திவாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ""இது எனது தனிப்பட்ட விருப்பம்; கட்சி மேலிடத்திடம் இது பற்றி ஆலோசிக்கவில்லை. கட்சி வேறுபாடின்றி மற்ற கட்சி உறுப்பினர்களும் ஒபாமா உரையை புறக்கணிக்க வேண்டும்,'' என்றார். 


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெங்கட்ராமன் - chennai,இந்தியா
07-நவ-201019:44:11 IST Report Abuse
வெங்கட்ராமன் கண்டிப்பாக நம் நாடு வல்லசி அடைய வேண்டும் என்றால் மூத்த அரசியல்வாதிகளிடம் உள்ள பதவி ஆசை ஒழிய வேண்டும் நிச்சயமாக இது ஒழிந்தால் கண்டிப்பாக இந்திய ௨௦௨௦இல் அல்ல இன்றே வல்லரசு தான்
Rate this:
Share this comment
Cancel
பர்தி - லக்ஷ்மாங்குடி,இந்தியா
07-நவ-201013:41:41 IST Report Abuse
பர்தி தங்களது பெயரும் பத்திரிகையில் வரவேம்டும் என்பதற்காக அறிக்கை விடும் அரசியல்வாதிகள் என்றுதான் திருந்துவார்களோ ! அன்றுதான் நம் நட்டு வர்த்தகம் விரிவடைந்து நமது நாடும் முன்னேறும் .
Rate this:
Share this comment
Cancel
பூசைதுரை - bahrain,இந்தியா
07-நவ-201010:56:50 IST Report Abuse
பூசைதுரை காந்திய கொள்கையை பின்பற்றி வளர்ந்த உலகமக்கள் தலைவரை தாமரை மலர் தூவி வரவேற்பம். பொருளாதாரம்,சமுகம் மற்றும் அரசியல் பிரசனைபற்றி அதிகம் சர்சைசெய்ய இந்த பயணம் தேவேயில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X