வரதட்சணை கொடுமை : பல் டாக்டர் மீது வழக்கு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய பல் டாக்டர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(28). இவர் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் ஆசிரியர் பயிற்றுனராக உள்ளார். இவருக்கும், திண்டுக்கல் வேதாத்திரி நகரை சேர்ந்த சதீஷ்குமாருக்கும்(29) திருமணம் நடந்தது. பல் டாக்டரான இவர் திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் அருகில் கிளினிக் நடத்தி வருகிறார். திருமணத்தின் போது 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. சதீஷ்குமார் திண்டுக்கல்லில் நடத்தி வரும் பல் ஆஸ்பத்திரியை விரிவு படுத்த, ரூ.5 லட்சம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். மாமனார் ஜெயராமன்(61), மாமியார் கலாவதி(59) உடந்தையாக இருந்துள்ளனர். தன்னை வீட்டில் அடைத்து வைத்து கணவன் உட்பட அனைவரும் கொடுமைப்படுத்தியதாக உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அனார்கலி வழக்குபதிவு செய்தார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
குமரி ராஜேஷ் - nagarcovil,இந்தியா
17-நவ-201008:00:42 IST Report Abuse
குமரி ராஜேஷ் அந்த மனைவிக்கு எதிராக கொடுமை நடந்திருந்தால் கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டியது. கணவர் கோரியதாக கூறியுள்ள தொகையும் திருமணத்தின் போது பெண்ணிற்கு பெண்வீட்டார் வழங்கிய ஆபரணங்களின் மதிப்பும் அப்பெண்ணிற்கு சேரவேண்டிய தந்தை மற்றும் தாய் வழி சொத்து மதிப்பிற்கு உட்பட்டிருப்பின் வரதட்சணை வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும். கணவன் சொத்தை ஆண்டு அனுபவிக்கும் மனைவி, மனைவி சொத்தின் உதவியோடு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த கணவன் முனைவதை திசை திருப்பி சட்டத்தை தவறாக பயன்படுத்தி கணவன் குடும்பத்தை பழி வாங்க முனைவதற்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்