ராமசுந்தரம் விருப்ப ஓய்வு: பொதுப்பணி செயலராக தனவேல் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமசுந்தரம் விருப்ப ஓய்வு: பொதுப்பணி செயலராக தனவேல் நியமனம்

Added : நவ 27, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரம், இம்மாதத்துடன் விருப்ப ஓய்வு பெறுவதால், வருவாய்த் துறை செயலர் தனவேல், பொதுப்பணித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரம் விருப்ப ஓய்வு கொடுத்துள்ளதால், அவர் இம்மாதம் 30ம் தேதியுடன் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வருவாய்த் துறை செயலர் தனவேல் அங்கிருந்து மாற்றப்பட்டு, பொதுப்பணித் துறை செயலராக நியமிக்கப்படுகிறார்.வணிக வரிகள் துறை கமிஷனர் ஜெயக்கொடி அங்கிருந்து மாற்றப்பட்டு, வருவாய்த் துறையின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயலர் எஸ்.எஸ்.ஜவகர் வசம், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்படுகிறது. இதுவரை இப்பொறுப்பை கூடுதலாக சிவகுமார் கவனித்து வந்தார்.போக்குவரத்துத் துறை துணைச் செயலர் லில்லி அங்கிருந்து மாற்றப்பட்டு, உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X