மதுரையில் சரக்கு அனுப்புவது திடீர் நிறுத்தம் | Dinamalar

மதுரையில் சரக்கு அனுப்புவது திடீர் நிறுத்தம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை : ஒரே மாதிரி சுங்கவரி வசூலிக்க வலியுறுத்தி, டிச.,5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுகின்றனர். இதற்காக மதுரையில் நேற்று முதல் வடமாநிலங்களுக்கு சரக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது. அங்கிருந்து மதுரைக்கு சரக்கு கொண்டு வருவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது : தற்போது மதுரையில் இருந்து 500 கி.மீ., தூரத்தில் உள்ள வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்திற்குள்ளும் மட்டும் சரக்குகளை அனுப்பி வருகிறோம். டிச.,3 முதல் சரக்கு அனுப்புவது படிப்படியாக குறைக்கப்படும். இதனால் 12 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும். ஏற்கனவே மத்திய அரசின் உறுதிமொழியை நம்பி, மூன்று முறை வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இம்முறை எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நிச்சயம் வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்