| மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா; சமூக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா; சமூக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு

Updated : டிச 17, 2010 | Added : டிச 17, 2010 | கருத்துகள் (22)
Advertisement

திருப்புவனம்: மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொகரம் தினத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே நடந்தது.இந்த கிராமத்தில் நான்குதலைமுறையாக இந்த விழா நடந்துவருகிறது. திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள முதுவன்திடல் ஊராட்சியில் 500 இந்துகுடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வசித்ததால் இங்கு பாத்திமா நாச்சியார் தர்கா, பள்ளிவாசல் உள்ளது. காலப்போக்கில் முஸ்லீம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால், இந்துக்குடும்பங்களை சேர்ந்தோர் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலை கோவிலாக வழிபடுகின்றனர்.

கிராம காவல்தெய்வமாகவும், வேண்டுதல் நிறைவேற்றும் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். இதற்காக இந்துக்கள் முறைப்படி மொகரம்பண்டிகையையொட்டி, காப்புக்கட்டி 10நாள் விரதமிருந்து தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.அமாவாசை முடிந்து மூன்றாம்நாளில் பிறைதெரிந்தவுடன் காப்புக்கட்டுதலுடன் தீமிதி திருவிழா துவங்குகிறது. 9நாள் முடிவில் அதிகாலையில் மொகரம்பண்டிகையன்று தீமிதிக்கின்றனர்.


எடுத்து உடலில் கொட்டுகின்றனர்: வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் செலுத்தும் பெண்கள், "பூமொழுகுதல்' என தீக்கங்குகளை, ஈரத்துணியால் உடல் முழுவதும் போர்த்தி உட்காருகின்றனர். அவர்கள்மீது குழியில் கிடக்கும் "நெருப்பாய்' இருக்கும் தீக்கங்குகளை "பாத்திமா, பாத்திமா' என்ற கோஷத்துடன் மண்வெட்டியில் எடுத்து உடலில் கொட்டுகின்றனர்.


"பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை : இக்கிராமத்தினரின் காவல்தெய்வமான பாத்திமாநாச்சியாருக்கு முதல்காணிக்கை செலுத்துவதும், எந்த விளைபொருள் விளைந்தாலும் முதலில் படைப்பதும் இன்றளவும் தொடர்கிறது. இங்குள்ள கபாடி, கிரிக்கெட், வாலிபால் குழு, மகளிர் குழுக்கள் பெயரையும் "பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை சூடுகின்றனர். இந்து,முஸ்லீம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் இந்த தீமிதி திருவிழாவைக்காண வெளிநாடு மற்றும் பல மாநிலங்களிலிருந்து வருகின்றனர். 


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lax - dubai,இந்தியா
18-டிச-201012:27:59 IST Report Abuse
lax very gud
Rate this:
Share this comment
Cancel
K.RAJAMOHAN - chennai,இந்தியா
17-டிச-201023:23:05 IST Report Abuse
K.RAJAMOHAN இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமையையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருவிழா. ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற கனியன் பூங்குன்றனாரின் வாக்கினை நிறைவேற்றுவதுபோல் உள்ளது. இது போன்ற விழாக்கள் தொடரட்டும். மனிதநேயம் வளரட்டும். வெளி உலகுக்கு கட்டிய தினமலருக்கு நன்றி .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - trichy,இந்தியா
17-டிச-201022:16:33 IST Report Abuse
தமிழ் இது மக்களின் அறியாமை .
Rate this:
Share this comment
Cancel
ஆக்கூர் நஜுமுதீன் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201021:56:46 IST Report Abuse
ஆக்கூர் நஜுமுதீன் இறைவன், மனிதனை உடலால் வருத்தி வணங்க சொல்லாத ஒன்றை மனிதன் எற்படுத்தி செய்கிறான்,மனிதனுக்கு மனிதன் உதவி செய்தல் போதும் ..
Rate this:
Share this comment
Cancel
arul - Nigeria,இந்தியா
17-டிச-201021:42:48 IST Report Abuse
arul ella pugallum eraivanuke
Rate this:
Share this comment
Cancel
நல்லவன் - ஜுபைல்,சவுதி அரேபியா
17-டிச-201020:58:16 IST Report Abuse
நல்லவன் தீ மிதிப்பதே ஒரு மூட நம்பிக்கை. ஒரு பயனும் இல்லாத அர்த்தமற்ற நடவடிக்கை. இதை முஹர்ரம் பண்டிகையின்போது செய்தால் நல்லிணக்கம் என்ற அடைமொழி வேறு! இஸ்லாத்தில் மூட நம்பிக்கைக்கு இடமேதும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
பரட்டை - தேக்கனம்பட்டி,இந்தியா
17-டிச-201020:52:45 IST Report Abuse
பரட்டை நாசமா போச்சு ....இதுல ஒற்றுமையா காட்டி நாங்க எல்லா காட்டுவாசின்னு proof செஞ்சிட்டங்கயா முடியல....ஆப்ரிக்கா நாடு கூட தேவலை....ஹூம் ....
Rate this:
Share this comment
Cancel
தாவூத் - கும்பகோணம்,இந்தியா
17-டிச-201020:48:06 IST Report Abuse
தாவூத் இந்த தீ மிதிக்கும் கூட்டதிருக்கும் முஸ்லிமுக்கும் சம்மந்தமே கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Muja - Mumbai,இந்தியா
17-டிச-201020:05:47 IST Report Abuse
Muja அடே மடையன் கலா உங்களுக்கு அறிவு இல்லை bloddy non sense people ..
Rate this:
Share this comment
Cancel
நூருல் - தொண்டி,இந்தியா
17-டிச-201020:01:34 IST Report Abuse
நூருல்     இஸ்லாமியர்களிடையே இப்போது தர்கா வழிப்பாடு குறைந்துவிட்டது மகிழ்ச்சிதான்.எல்லோரும் ஓர் இறைய்கொல்கயை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் (அல்ஹம்துலில்லாஹ் )ஆனாலும் தர்காவை அப்படியே போட்டுவிடாமல் அதை பள்ளிகூடமாகவோ அல்லது திக்கற்றோர் வசிப்பிடமாகவோ பயன்படுத்தலாம்.மற்றவர்கள் அதை வழிப்பட்டு அவர்கள் அறிவீனத்திற்கு நாமும் உடந்தையாக கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை