இந்திய விமானப்படை ரொம்ப 'வீக்' Dinamalar
பதிவு செய்த நாள் :
இந்திய விமானப்படை ரொம்ப 'வீக்'

வாஷிங்டன்:சீனா மற்றும் பாகிஸ்தானை ஒப்பிடும் போது, இந்திய விமானப்படை, பலம் குன்றி நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக, அமெரிக்க ராணுவ ஆய்வு நிபுணர் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படை  ரொம்ப 'வீக்'

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான,

ராணுவம் தொடர்பான ஆராய்ச்சி நிபுணரான, ஆஷ்லே டெலிஸ் கூறியதாவது:கடந்த, 1975 ல் இருந்தே, சீனா, விமானப்படையை மிகப்பெரிய அளவில் நவீனப்படுத்தி வருகிறது.

சமீபகாலமாக, பாகிஸ்தானும், தன் விமானப்படையில், நவீன விமானங்களை சேர்த்து வருகிறது. இவ்விரு நாடுகளையும் ஒப்பிடும் போது, இந்திய விமானப்படையின் பலம் குன்றியே உள்ளது. பழைய ரஷ்ய விமானங்கள் தான், அதிக அளவில், இந்தியாவிடம் உள்ளன.

இன்னும், 10ஆண்டுகளில், சீனாவிடம், அதிநவீன, 400 விமானங்கள் இருக்கும். ஆனால் அப்போது, இந்தியாவிடம், அதிநவீன விமானங்கள், 200 என்ற அளவில் தான் இருக்கும். இந்தியாவின் ராணுவ

Advertisement

பட்ஜெட் ஒதுக்கீடு குறைவதும், மற்ற பல விஷயங்களில் அந்நாட்டு தலைவர்கள் ஆர்வம் காட்டுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-மார்-201619:47:47 IST Report Abuse

Kasimani Baskaranஅமெரிக்கா சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது... ஓட்டை உடைசல் விமானங்கள் பராமரிப்பில்லாமல் பல காலம் இருந்தவை... கொள்முதலில், புதிதாக இந்தியாவில் இராணுவ தளவாடங்கள் உருவாக்குவதில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் பல முன்னேற்றங்கள் தெரிகிறது... சீனாவின் இராணுவ செலவை ஒப்பிட்டுப் பார்த்தால் அமெரிக்க அறிக்கை சொல்வது 100% உண்மை என்பது புரியும்...

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
29-மார்-201615:08:41 IST Report Abuse

Sampath Kumarவீக்கா இருக்கலாம் லீக்கா ஆகாம பார்த்து கொள்ளவும். நான் விமானத்தை சொன்னேன் ஹி ஹி ஹி

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-மார்-201614:06:44 IST Report Abuse

மலரின் மகள்நம் வைகோ சொல்வதையும் யூத் கோவன் சொல்வதையும் நம்பினாலும் நம்பலாம் இந்த அமெரிக்கர்களை நம்பவே கூடாது. தேளுக்கு மூணு முழம், பாம்புக்கு 10 முழம், யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி இருக்க வேண்டும் என்று சொன்ன மூதுரை, மேலும் ஒன்று சொல்கிறது தீயவர்களின் கண்ணில் படவே கூடாது என்று. அமெரிக்கர்களின் ரேடாரில் கூட நாம் படக்கூடாது. பிரான்சிலிருந்து ரஷ்யாவிடமிருந்து எல்லாம் வாங்குகிரோமாம், இவர்களிடமிருந்து வாங்குவதில்லையாம். கெஞ்சி பார்ப்பார்கள், கொஞ்சிப்பார்பார்கள், மிரட்டிப் பார்ப்பார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் நாம் 30 லட்சம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் வாங்கப் போகிறோம் என்றவுடன், ஒபமா ஓடிவந்தாக, கேமர்ரோன் ஓடிவந்தாக, பிரான்ஸ் அதிபர் வந்தாக, நியூகிளியர் 123 கு மண்டைய ஆட்டினாக. எல்லாம் வியாபாரம். MIG போர்விமானங்கள் உயர்ந்தவைகள். என்ன சிரமம், விமானி திறமை யானவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கு நிறைய செலவழிக்க வேண்டும்.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X