சிரத்தையுடன் மரம் வளர்ப்போருக்கு தங்க நாணயம் பரிசு முன்னோடி திட்டத்தை முன்வைத்த கான்சாபுரம் கிராமம்| Dinamalar

தமிழ்நாடு

சிரத்தையுடன் மரம் வளர்ப்போருக்கு தங்க நாணயம் பரிசு முன்னோடி திட்டத்தை முன்வைத்த கான்சாபுரம் கிராமம்

Added : ஜூன் 08, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வத்திராயிருப்பு: உலக வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில் அவற்றை செயல்படுத்த முன்னோடி திட்டத்தை வகுத்துக்கொடுத்து அதை தானும் செயல்படுத்தி வருகிறது கான்சாபுரம் கிராமம். சிறந்த முறையில் மரம் வளர்ப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்க ஊராட்சி முடிவு செய்துள்ளது. வத்திராயிருப்பு யூனியனை சேர்ந்தது கான்சாபுரம் கிராமம். மக்கள் தொகை 15 ஆயிரம். மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை போர்த்தும் திட்டத்தை செயல்படுத்த அவ்வூர் ஊராட்சி மன்றம் முடிவு செய்தது. இதற்காக ஊரில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்க்க இலக்கு நிர்ணயித்தது. மக்கள் இன்றைக்குள்ள மன நிலையில் சொன்னால் கேட்கமாட்டார்கள் என்பதால் மரங்களை வளர்ப்பவர்களுக்கு பரிசு திட்டத்தை அறிவித்தது. அதன்படி 100 மரங்களுக்கு ஒரு செயலாளர் வீதம் 10 ஆயிரம் மரங்களுக்கு 100 செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் தாங்கள் பகுதியில் மரக்கன்றுகளை வளர்க்கவும் பாதுகாக்கவும் ஏற்படும் செலவுகளை ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற் கும். ஒரு கன்றுகூட வாடிவிடாமல் பாதுகாப்பதும், பராமரிப்பதும் செயலாளர்களின் பணி என வகுக்கப்பட்டுள்ளது. தங்க நாணயம் பரிசு: இருமாதங்களுக்கு ஒருமுறை செயலாளர்கள் குழுவும், ஊராட்சி கவுன்சிலர்கள் குழுவும் பார்வையிட்டு சிறந்த முறையில் மரம் வளர்ப்பவர்களுக்கு தங்க நாணயம், சமூக சேவகர் விருது, மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மரங்களை வளர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவி ஆவணிநாச்சியார் கூறியதாவது: ஒரு மரம் வளர்க்க பரிசு, பராமரிப்பு செலவு என 3 ஆயிரம் ரூபாய் ஆகிறது. ஆனால் மரம் கொடுக்கும் லாபத்தை கணக்கிட்டால் இதெல்லாம் மிக மிக சாதாரணம். இதற்கான செலவுகளை ஒருசில வசதிபடைத்தவர்களிடம் கூறினேன் அவர்களும் மனமுவந்து ஏற்றுக்கொண்டதால் பராமரிப்பு, பரிசு போன்ற செலவினங்களுக்கு கூட அரசு நிதியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே சமயம் இங்கு நடப்படும் கன்றுகளில் 99 சதவீதம் மரமாகிவிடும் என்பதுமட்டும் நிச்சயம் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X