ஈரோடு கோவிலில் கோபுர கலசம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு கோவிலில் கோபுர கலசம் திருட்டு

Added : ஜூன் 09, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது.


திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.


இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை