இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம்| Dinamalar

தமிழ்நாடு

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம்

Added : ஜன 06, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. இக்கூட்டத்தில், போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ பங்கேற்கிறார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் இன்று துவங்குகிறது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.


போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8,9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். "மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X