30 ஆண்டுகள் இழுத்தடித்த பின்85 வயது தாத்தாவுக்கு விவாகரத்து| Dinamalar

30 ஆண்டுகள் இழுத்தடித்த பின்85 வயது தாத்தாவுக்கு விவாகரத்து

Added : ஜன 14, 2011 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:முப்பது ஆண்டுகளாக நடந்த வழக்கில் 85 வயது முதியவருக்கு அவரின் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்துள்ளது. டில்லி ஐகோர்ட் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.டில்லியைச் சேர்ந்தவர் ஜே.எம்.கோக்லி. இவர் 1953ம் ஆண்டில் விமலா என்ற பெண்ணை மணந்தார். 1979ம் ஆண்டில் விமலாவின் சகோதரர், முனிர்கா என்ற இடத்தில், டில்லி மேம்பாட்டு நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைப் பெற்றார். அதற்கான பணம் முழுவதையும் செலுத்தும்படி, கணவர் கோக்லியை விமலா கேட்டுக் கொண்டார். அவரும் அதன்படியே செய்தார். பின்னர் தன் மகளுடன் விமலா அந்த வீட்டில் குடியேறினார்.


சில நாட்களில் விமலாவுக்கும், கோக்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1979ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறினார் கோக்லி. தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, 1982ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். இவர்கள் இருவருக்கும் கீழ் கோர்ட், 1994ம் ஆண்டில் விவாகரத்து வழங்கியது. இதன்பின் உஷா என்ற பெண்ணை கோக்லி மணந்தார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.ஆனால், கீழ்க்கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் மனு செய்தார். அதில், விவாகரத்து வழங்கும் முன்னர் கீழ்க்கோர்ட் தனது தரப்பு கருத்தை கேட்கவில்லை எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோக்லிக்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கீ


ழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த டில்லி ஐகோர்ட் நீதிபதி கைலாஷ் கம்பீர், ""நீண்ட நாட்களாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதால், வழக்கில் தொடர்புடையவர்கள் தங்களின் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாமல் போய் விட்டது. அவர்கள் தங்களின் வாழ்க்கையில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை கோர்ட்டுகளுக்கு அலைவதிலேயே செலவிட நேரிட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற விவாகரத்து வழக்குகளை இனியாவது விரைவாக விசாரித்து கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் வழக்கில் தொடர்புடையவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட முடியும்,'' என்றார். கோக்லிக்கு தற்போது 85 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Mohamed Ismail - Madurai,இந்தியா
15-ஜன-201114:37:22 IST Report Abuse
N.Mohamed Ismail சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போனால் இன்னும் எவ்வளவு நாளாகுமோ? குறைந்த காலத்தில் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, நிறைய சுப்ரீம் கோர்ட்டு கிளைகள், நிறைய ஹைகோர்ட்டு கிளைகள் நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.அல்லது, எல்லா கேசுகளையும் அப்பீல் செய்ய அனுமதிக்கக் கூடாது. அப்பீலுக்கு உகந்த கேசுகளைத் தரம் பிரிக்க வேண்டும். மதுரையில் ஒருவருக்கு உண்டாகும் சாதாரண வியாதிக்குக்கூட டெல்லியிலுள்ள AIIMS அல்லது PGI CHANDIGARH தான் என்ன மருத்துவம் கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும் என்பதைப்போலுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Cumbum P.T.Murugan - trichy,இந்தியா
15-ஜன-201111:33:56 IST Report Abuse
Cumbum P.T.Murugan நீதி, வேகமாக செயல்பட்டுள்ளது! ஆமாம், பாட்டி இது குறித்து என்ன சொல்கிறார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை