தாலுகா கிரிக்கெட் போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா கிரிக்கெட் போட்டி

Added : ஜன 19, 2011
Advertisement

வத்திராயிருப்பு : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கிளை சார்பில் தியாகி வெங்கடசாமி நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் வத்திராயிருப்பில் நடந்தது. முதல்பரிசு, கோப்பையை குன்னூர் இளைஞர் அணி கைப்பற்றியது. இரண்டாம் பரிசை கான்சாபுரம் லெவன் புல்லட் அணி, மூன்றாம் பரிசை ஆகாசம்பட்டி ஹீரோ குழு அணி பெற்றன. பின்னர் பரிசளிப்பு விழா அழகர்சாமி தலைமையில் நடந்தது. ராமசாமி எம்.எல்.ஏ., கோப்பையையும், வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் கொண்டம்மாள் இரண்டாம் பரிசையும், ஒன்றிய நிர்வாகி பாஸ்கரன் மூன்றாம் பரிசையும், மின் தொழிலாளர் சங்க தலைவர் மாயாண்டி சிறந்த பந்துவீச்சாளர் பரிசையும், மாத்தூர் ஊராட்சி தலைவர் ராமதாஸ் பேட்ஸ்மேன் பரிசையும் வழங்கினர். பேரூராட்சி துணை தலைவர் முருகேசன், இந்திய கம்யூ. நகர செயலாளர் கோவிந்தன் சான்றிதழ் வழங்கினர். நகர நிர்வாகி இன்பநாதன் நன்றி கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X