வீரன்சுந்தரலிங்கம் சிலை திறப்பு பிரச்னை எம்பி., உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரன்சுந்தரலிங்கம் சிலை திறப்பு பிரச்னை எம்பி., உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஜன 20, 2011
Advertisement

ஓட்டப்பிடாரம் : தெய்வச்செயல்புரம் அருகே அரசு தடை விதித்திருந்த சுதந்திரப்போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கம் சிலையை திறந்த உபி.,பகுஜன் சமாஜ் எம்பி., உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புளியம்பட்டி அருகேயுள்ள காசிலிங்கபுரம் கிராமமக்கள் சார்பில் கடந்த ஐந்தாண்டிற்கு முன் வீரன் சுந்தரலிங்கம் சிலை நிறுவப்பட்டது. சிமெண்டால் ஆன இந்த சிலையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதனை மீறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தேவேந்திரகுல இயக்கங்கள் சிலையை திறக்க முயற்சி செய்தன. இதனையடுத்து அச்சிலையை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இந்நிலையில் பொங்கல் விழாவிற்காக இந்த கிராமத்திற்கு வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி ராஜ்யசபா எம்பி.,பிரமோத்குரில் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அச்சிலையை திறந்துவைத்தார். அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலை திறக்கப்பட்டது குறித்து சிங்கத்தாகுறிச்சி விஏஓ.,பேச்சிமுத்து புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக பிரமோத்குரில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலசெயலாளர் ஜீவன்குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் இளைஞர் செயலாளர் குபேந்திரன் உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் திறக்கப்பட்ட சிலையை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் துணிபோட்டு மூடப்பட்டது. மீண்டும் சிலைக்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பசுபதிபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மண்சிலையை அகற்றிவிட்டு வெண்கல சிலை வைத்தால் அனுமதி தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X