சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் விருத்தாசலம் மாப்பிள்ளை தாலி கட்டினார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் விருத்தாசலம் மாப்பிள்ளை தாலி கட்டினார்

Added : ஜன 24, 2011 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் விருத்தாசலம் மாப்பிள்ளை தாலி கட்டினார்

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கண்மணி நகரைச் சேர்ந்தவர் ராஜவேல் - மலர்கொடி தம்பதியினர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமார் டிப்ளமா எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.


அதே நிறுவனத்தில் சீன நாட்டின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டத்தைச் சேர்ந்த லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் தம்பதியின் ஒரே மகளான லியூயிங், விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நிறுவனத்தின் பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற போது ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்கினர்.தங்கள் காதலை பெற்றார்களிடம் கூறி சம்மதம் பெற்றனர். அதைத் தொடர்ந்து இரு வீட்டார் விருப்பத்துடன் விருத்தாசலம் ராஜா மகால் திருமண மண்டபத்தில் இந்து ஐதீக முறைப்படி மந்திரம், மேளதாளம் முழங்க நேற்று திருமணம் நடந்தது. மணமகள் லியூயிங் கழுத்தில் மணமகன் செந்தில்குமார் தாலி கட்டினார். திருமண விழாவில், லியூயிங் பெற்றோர் வேட்டி, சேலை அணிந்து திருமண சடங்குகளை ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்தது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


மணமகள் லியூயிங் கூறுகையில், "முதலில் செந்தில்குமார் தான் காதலை வெளிப்படுத்தினார். என் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மொழி மட்டும் தடையாக இருக்கிறது. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்' என்றார்.மணமகளின் தந்தை லியூ ஹாங்க்யூ கூறுகையில், "எனக்கு எனது மகள் முக்கியம். அவளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது எனது கடமை. என் மகளுக்கு நல்ல தமிழ்க் குடும்பம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ak Gopal - chennai,இந்தியா
24-ஜன-201121:55:03 IST Report Abuse
Ak Gopal "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் " உங்கள் மண வாழ்க்கை சீரும் சிறப்புடன் விளங்க எம் தமிழ் குலத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
rahman khan - riyadh,சவுதி அரேபியா
24-ஜன-201115:18:30 IST Report Abuse
rahman khan வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
qwqwqwq - wewe,புர்கினா பேசோ
24-ஜன-201113:16:46 IST Report Abuse
qwqwqwq நம்ம அரசியல் சானகியன் கருணாநிதிக்கு தெரியபடுதுவும் , அவர் இந்த திருமணத்துக்கு ஒரு புதிய பெயர் வைப்பார்
Rate this:
Share this comment
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
24-ஜன-201110:19:01 IST Report Abuse
ngopalsami இரண்டு மனங்களும் ஒன்று சேர்ந்தபின், ஜாதி,மதம்,இனம்,மொழி,நாடு,கலாச்சாரம் என்றவற்றிற்கு இடமே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. உங்களின் மன வாழ்க்கை முற்றிலும் வெற்றிபெற அன்பான வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை