இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்படுகிறோம்.


சட்ட நடவடிக்கைகள் :

சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில் எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல் நாங்கள் பாடக்கூடாது. தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.
‛எஸ்பிபி 50' என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய வேண்டும்.


ரசிகர்களுக்கு வேண்டுகோள்:

இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது. ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால், மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளேன். அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (198)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-மார்-201709:50:30 IST Report Abuse
Malimar Nagore இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் தான் மனிதன். அதை விட்டு விட்டு ஏன் இப்படி பணத்தாசைப் பிடித்து அலைகிறாய்?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201700:50:54 IST Report Abuse
தமிழ்வேல் பாடலைப் "இன்னொருவர்" அமைத்த இசையை "வேறொருவரை" வைத்து பாடலாம். அதனால், பலன் பெறலாம். ஆனால், இசையமைப்பாளர், அல்லது கவிதையை எழுதியவர் அதை பாட முடியாது பலனடைய முடியாது. இன்னொன்று " இசையால் வசமாகா இதயம் எது ....."
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
20-மார்-201700:22:49 IST Report Abuse
p.manimaran அப்பா இளையராஜாவுக்கு வணக்கம். நீங்கள் போட்ட பிச்சை தான் இவளவு பாடல்கள் யார் பாடினால் என்ன பொறுத்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
19-மார்-201723:23:53 IST Report Abuse
Suresh இளையராஜா ஒரு சிறப்பான இசையமைப்பாளர் அதில் மாற்று கருத்து இல்லை. படத்திற்கு இசையமைக்க வாய்ப்புக்கொடுத்தால் இவரே ஒரு படத்திற்கு ஒரு பாடலையும் வாசித்து தன்னுடைய குரலின் கண்றாவியை மக்களை கேட்க வைப்பார் அதிலும் இவர் சிறந்தவர். தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையை கோர்ட் தலையிட்டு உடனே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இல்லையெண்டால் இறந்த இசையமைப்பாளர்கள் கூட இதேபோல் நோட்டீஸ் அனுப்புவார்கள். அடித்த இசைக்கு நல்ல துட்டும் வாங்கி விட்டு தன்னுடைய பின் புத்தியை காட்டிவிட்டார்....
Rate this:
Share this comment
momtey - yanbu,சவுதி அரேபியா
20-மார்-201701:36:38 IST Report Abuse
momteyஆஹா பாலு பின்னிட்டார்.அவரின் முற் போக்கு குணம் ஓகோ சூப்பர்.பாலு சார் ஒன்னு மட்டும் உருத்திக்கிட்டே இருக்கு இதை டுவிட் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது? விளம்பரமா? அல்லது நான் ராஜாவை விட்டு பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் என்கிற கர்வமா? எதற்க்காக ஒரு சென்சிடிவ் விஷயத்தை விஷமாக்கினீர்கள்? பார்த்தீர்களா இதனை நாட்கள் இசைஞானி என்று போற்றியவர்கள் ஒரு நொடியில் மாற்றி தூற்றுகிறார்கள்.உங்கள் வேலை நலமுடன் முடிந்து விட்டது நன்றி. அன்றைய கால கட்டத்தில் பின்தங்கி இருந்த மலேசியா, தீபன், அருண்மொழி மற்றும் சைலஜா ஜென்சி சொர்ணலதா போன்ற பாடகர்களை தூக்கி விட்டு இசைக்கு அலங்காரம் செய்தவர் ராஜா. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திற்கு இசை நிகழ்ச்சி நடத்தி நன்கொடை வழங்கியது வரலாறு. என்ன நடந்தது என்று தீர விசாரித்து இரு மனசுக்குள் பொதி வைக்க வேண்டிய விஷயத்தை போட்டு உடைத்து காயப்படுத்தியது முறைதானா? உங்களுக்கு பணம் பண்ண ஆயிரம் வழிகள் இருக்கும் போது மென்மையாக நடந்து கொள்வதாக நினைத்து ஏன் இப்படி ரசிகர்களை காயப்படுத்தினீர்கள் ?...
Rate this:
Share this comment
momtey - yanbu,சவுதி அரேபியா
20-மார்-201701:37:42 IST Report Abuse
momteyஇளையராஜா அவர்கள் சரியான முறையில் intellectual property rights அணுகியுள்ளார்.. வாழ்த்துக்கள் raja sir...
Rate this:
Share this comment
Cancel
RamRV -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201723:21:53 IST Report Abuse
RamRV இளையராஜா தன்னுடைய தொழிலில் நிலைபெற்ற பிறகு தயாரிப்பாளர்களுடன் ராயல்டி ஒப்பந்தம் செய்து கொள்ளத் துவங்கினார். இந்த விஷயத்தில் அவர்தான் தமிழ்த் திரை உலகின் முன்னோடி. அதன்படி அவர் அமைத்த இசையை அந்தப் படத்துக்கு தவிர வேறெதற்காவது லாப நோக்கில் பயன்படுத்தினால் அதற்கு உரிய தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று சட்டபூர்வமான உரிமையை அவர் வைத்திருக்கிறார். இசையமைப்பதற்காக அவர் போடும் ஒப்பந்தத்தில் இது ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் பல லட்சங்கள் தருகிறோம் ராயல்டி எதற்கு என்று பட முதலாளிகள் கேட்டாலும் அதை ஒப்புக் கொள்ளாமல் தனது நிலையிலிருந்து சற்றும் மாறாமல் இருந்தார். மேலை நாடுகளில் இவை மிகவும் கடுமையாக மதிக்கப் படுகிறது மற்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்தியர்கள் இது போன்ற சட்டங்களை அவ்வளவாக மதிப்பதில்லை. எஸ்பிபி, தான தர்மத்துக்காகப் பாடவில்லை. அவருடைய மகனால் நடத்தப் படும் வணிக ரீதியான ஒரு நிகழ்ச்சியில் பணம் சம்பாதிப்பதற்காகத் தான் பாடுகிறார். அதில் அவர் உபயோகப் படுத்தும் மற்றவர்களுடைய பொருட்களுக்கு அதற்கான பங்கைக் கொடுக்க வேண்டியது நியாயமான கடமையாகும். இளையராஜா இந்தப் பாடல்களுக்கு உரிமையுள்ளவர். அந்த உரிமையை தனது சம்பளத்தின் ஒரு பகுதியாக சட்டபூர்வமாக வாங்கியுள்ளவர். தயவு செய்து நாம் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-மார்-201723:17:30 IST Report Abuse
K.Sugavanam காசேதான் கடவுளடா...
Rate this:
Share this comment
momtey - yanbu,சவுதி அரேபியா
20-மார்-201701:22:31 IST Report Abuse
momteyபாலுவும் பணம் சம்பாதிக்கத் தானே பாடுகின்றார் . அதில் ஒரு பகுதியை இளைய ராஜ கேட்க்கின்றார் . இதில். தவறு இருப்பதாகத் தெரியவில்லை...
Rate this:
Share this comment
momtey - yanbu,சவுதி அரேபியா
20-மார்-201701:23:50 IST Report Abuse
momteyமைக்கேல் ஜாக்ஸன் பாடலையோ, மடோனா பாடலையோ, முறையான உரிமம் பெறாமல் எங்கும் உபயோகிக்க முடியாது... அதையேதான் ராஜாவும் செய்கிறார்.., காப்பிரைட் சட்டத்தின் அடிப்படை கூட தெரியாதவர்கள் வேண்டுமானால் ராஜாவை எதிர்க்கலாம்.... இளையராஜா சொல்வது என் பாடலை மேடையில் பாடாதே என்று அல்ல.... அதைப் பாடி சம்பாதிக்காதே என்று தான்.,... கட்டணம் வசூலிக்காமல் இசை நிகழ்ச்சி நடத்து, யார் ராஜாவின் பாடலை பாடினாலும், இசைராஜா அதை எதிர்க்க/மறுக்க மாட்டார்....
Rate this:
Share this comment
momtey - yanbu,சவுதி அரேபியா
20-மார்-201701:27:44 IST Report Abuse
momteyகாப்புரிமை... தனிமனித உரிமை... இவை குறித்தெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாத நமது சமூகத்துக்கு இதெல்லாம் ஷாக்கிங் நியூஸ்தான்......
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
19-மார்-201723:05:44 IST Report Abuse
Amma_Priyan SPB Oru aayiram nilavu...MGR கண்ட vaanathu விண்ணிலவு... இளையவர் வெறும் மச்சானை பாத்திங்களா...டும் டும் டும்... அம்மா இருந்தவரை வாலை சுருட்டி வைத்துக்கொண்டு இப்போ என்ன தாம் தூம் என்று ஆட்டம் ...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-மார்-201723:04:15 IST Report Abuse
K.Sugavanam உயர்உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது..ஊர்க்குருவிதான்..
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
19-மார்-201722:44:46 IST Report Abuse
jagan இளையராஜா மற்றவர் பாட்டை பாடி முன்னேறியவர் என்று கூறும் அறிவு ஜீவிகளுக்கு...இப்பவும் ராஜா தெருவில், கல்யாணத்தில், கோவிலில் பாடி சம்பாதிக்கும் சாதாரண மக்களை குறிவைக்கவில்லை...SPB /சித்ரா மாதிரி டிக்கெட் விலை $75,100,150 (எல்லாம் அமெரிக்க டாலர்) என்று ஊரு ஊராய் போய் மில்லியன் கணக்கில் கல்லா கட்டுபவர்களை தான்....Let them cough up the royalty money....No pity for these guys.
Rate this:
Share this comment
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
20-மார்-201700:26:37 IST Report Abuse
Rameshஉண்மை...
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
19-மார்-201722:43:39 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இதுல பெரிசா ஒண்ணுமேயில்ல இத போய் பெரிசாக்குறீங்களே .... என்ன இனிமேல் எஸ் பி பி ,ஜேசுதாஸ் ஜானகி ஆகியோர் இளைய ராஜா இசை இல்ல்லாமல் அவர்களது பாடலை பாடினால் மக்கள் ரசிப்பார் எனவே இனி மேல் இளைய ராஜ தனது இசையை மட்டுமே பயன் படுத்தவோ விற்கவோ உரிமை உள்ளது அதில் வரும் பிணணிப்பாடகரின் குரலையே பாட்டையோ உரிமை கொண்டாட ராய்லட்டி கொடுக்கவேண்டும் அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்