கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் : தப்பிய ஓடிய போது கார் மோதியதில் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் : தப்பிய ஓடிய போது கார் மோதியதில் படுகாயம்

Added : ஜன 28, 2011 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தர்மபுரி : தர்மபுரி அருகே, மது அருந்தி விட்டு, கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை, போலீசார் எனக் கூறி மர்ம நபர்கள் துரத்திய போது, கார் மோதி படுகாயம் அடைந்தார்.


தர்மபுரி அடுத்த பழைய பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (26). நாதஸ்வர வித்வானாக உள்ளார். சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கனஅள்ளியைச் சேர்ந்த முருகனை, பத்து ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே, அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அப்போது, தனலட்சுமிக்கு, பென்னாகரம் தாலுகா இண்டூர் ராஜகொல்ல ஹள்ளியைச் சேர்ந்த வினோத் (23) என்பவருக்கும், இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தனலட்சுமி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த விழாவில், நாதஸ்வரம் வாசித்து விட்டு திரும்பினார். வரும் போது, மது பாட்டில் வாங்கி வந்தார். தர்மபுரி வந்த தனலட்சுமி, தன், கள்ளக்காதலன் வினோத்துடன், தர்மபுரி - சேலம் சாலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள இடத்தில், மது அருந்தி விட்டு, இரவு உல்லாசமாக இருந்தனர்.


அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர், தங்களை போலீசார் எனக் கூறி, கள்ளக் காதலர்களை மிரட்டினர். பீதி அடைந்த தனலட்சுமி, சேலம் சாலையில் தப்பி ஓடினார். அப்போது, சேலம் நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியதில், தனலட்சுமி பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தார். மது மயக்கத்தில் இருந்த அவரை சிலர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. தர்மபுரி எஸ்.பி., சுதாகருக்கு, வக்கீல் ஒருவர் போன் செய்து, பெண்ணை சிலர் கடத்திச் சென்று கொலை செய்வதாக தகவல் தெரிவித்தார். போலீசார், தனலட்சுமியை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மது மயக்கத்தில் இருந்த தனலட்சுமி, தன்னை போலீசார் துரத்திப் பிடித்து கற்பழித்ததாக கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தான் கூறியது பொய் என, மறுத்துப் பேசி வருகிறார். தன்னை, கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். தன் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என, மருத்துவமனை ஊழியர்களிடம் புலம்பி வருகிறார். காதலன் வினோத்தை, தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். போலீசார் எனக் கூறி துரத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.v.purushotham tamilnadu. - dubai,இந்தியா
29-ஜன-201119:37:48 IST Report Abuse
k.v.purushotham  tamilnadu. ''''''''பெண் புத்தி பின் புத்தி''''''' என்பார்கள். அது இந்த பெண்ணுக்கு ''மட்டும் தான்'' பொருந்தும்...!!!!
Rate this:
Share this comment
Cancel
fardhikan - lakshmaangudi,இந்தியா
29-ஜன-201112:12:43 IST Report Abuse
fardhikan விலங்கிரும். இவதான்டா பத்தினி தூ சீ .......
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
29-ஜன-201102:08:29 IST Report Abuse
GOWSALYA சுத்தம்!!!!!மிக மிக சுத்தம்!!!!!....நாதஸ்வரம் என்ற புனித வாத்தியம் வாசிக்கும் இவளுக்கு எல்லாம் எதற்காக இந்தக் கேவலமான தொழில்?????ஆமாம்!!!!இதெல்லாம் தமிழ் நாட்டில் தானா நடக்கிறது? இல்ல பத்திரிகை செய்தி பிழையோ என எண்ணத் தோன்றுகிறது??????...ஒருபுறம் திருமணமாகாமலே,கருக்கலைப்பு...சிறுமியர் விபச்சாரம்......இப்படிப் பல பல.......பெரியவர்கள் எல்லாம் பதவியில் இருந்துகொண்டு பாலம் கட்டவும்,அரிசி டி.வி.கொடுக்கவும்...ஒருவரை ஒருவர் போட்டி போடவும் தான் இருக்கார்களே தவிர...இவற்றை எல்லாம் வாசிக்கவோ,நடவடிக்கை எடுக்கவோ முன் வரமாட்டார்களா?
Rate this:
Share this comment
appu - madurai,இந்தியா
29-ஜன-201112:41:24 IST Report Abuse
appuapdi podunga ammiyaa sariyaa soneeka ponga....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை