கள்ளக் காதலை தட்டிக் கேட்ட மனைவி கொலை : கணவருக்கு வலை; கள்ளக்காதலி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக் காதலை தட்டிக் கேட்ட மனைவி கொலை : கணவருக்கு வலை; கள்ளக்காதலி கைது

Added : ஜன 28, 2011 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர் : அடுத்தவர் மனைவியுடன் ஏற்பட்ட தொடர்பை, தட்டிக் கேட்ட மனைவியை கொலை செய்த கணவரை ,போலீசார் தேடுகின்றனர். கள்ளக் காதலியை கைது செய்தனர்.


திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேசன். ரயில்வே ஊழியர். இவரது மனைவி செஞ்சு(29). இவர்களுக்கு வரலட்சுமி(8) என்ற மகளும், தனபிரியன்(6) என்ற மகனும் உள்ளனர். நேசனுக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி பவானி(28) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த செஞ்சு, பவானியை கண்டித்துள்ளார். பவானி கேட்கவில்லை.நேற்று முன்தினம் பவானியும், நேசனும் பல இடங்களுக்கு சென்று விட்டு, நள்ளிரவில் வீடு திரும்பினர். இதையறிந்த செஞ்சு, பவானியுடன் தகராறில் ஈடுபட்டார். இதை, தனது காதலன் நேசனிடம் பவானி கூறினார். ஆத்திரமடைந்த நேசன், நேராக வீட்டுக்கு வந்து தனது மனைவி செஞ்சுவின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார். செஞ்சு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தடுக்க வந்த செஞ்சுவின் சித்தப்பா, சித்தி, அவரது மகன் ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். திருவள்ளூர் தாலுகா போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக் காதலி பவானியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நேசனை தேடி வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - Chennai.,இந்தியா
29-ஜன-201101:22:24 IST Report Abuse
Kunjumani சாமான்யன் செய்தால் கள்ளக்காதலி...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை