திருமணத்திற்கு பின்னும் கள்ளத்தொடர்பு : தங்கையை வெட்டிக் கொன்ற சகோதரர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணத்திற்கு பின்னும் கள்ளத்தொடர்பு : தங்கையை வெட்டிக் கொன்ற சகோதரர்கள்

Added : ஜன 28, 2011 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: திருமணத்திற்குப் பின்னர் வேறொருவருடன் வாழ்க்கை நடத்திய தங்கையை, அண்ணன்களே வெட்டி கொலை செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள கட்டுடையார்புரத்தைச் சேர்ந்த சுந்தரம் மகள் உஷா(26). இவருக்கும் பாளையங்கோட்டை ராஜாக்குடியிருப்பை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருக்கும் திருமணம் நடந்து, 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், கமலக்கண்ணனைப் பிரிந்த உஷா, ஜங்ஷன் சி.என்.கிராமம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பாலு என்பவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார். உஷாவின் அண்ணன்கள் சீனி, கார்த்திக் நேற்று பிற்பகல் பாலுவின் வீட்டில் இருந்த உஷாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். நெல்லை ஜங்ஷன் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் தேடிவருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-201106:13:21 IST Report Abuse
Ajaykumar நல்ல தீர்ப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை