தாயுடன் கள்ளக்காதல் : வாலிபர் அடித்துக் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயுடன் கள்ளக்காதல் : வாலிபர் அடித்துக் கொலை

Added : ஜன 28, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்தவரை, அடித்துக்கொன்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கன்னிவாடி அருகே உள்ள சுரக்காபட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(32). மூன்று ஆண்டுகளுக்கு முன், மனைவியை பிரிந்து வந்து, பழநியை அடுத்துள்ள ஆண்டிபட்டி பூஞ்சோலை கிராமத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது பார்த்தசாரதிக்கும், இதே ஊரை சேர்ந்த அய்யாவு மனைவி வள்ளி(55)க்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. பார்த்தசாரதியும், வள்ளியும் வேறு ஊருக்கு ஓடி விட்டனர். நேற்று முன் தினம் வள்ளியின் தந்தை முருகன் இறந்து விட்டார். இந்த செய்தி கேட்டு இருவரும் பூஞ்சோலை வந்தனர். நேற்று மாலை ஊருக்கு திரும்பும் போது மயிலாடும் பாறை என்ற இடத்தில் வள்ளியின் மகன்கள் மாரிமுத்து(24), அய்யனார்(21), இவர்களது உறவினர் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பார்த்தசாரதியை உருட்டு கட்டையால் தாக்கியதில் பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே பலியானார். பழநி தாலுகா போலீசார் கொலையாளிகள் மூவரையும் தேடி வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை