முத்துமல்லா ரெட்டியார் நூற்றாண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முத்துமல்லா ரெட்டியார் நூற்றாண்டு விழா

Added : ஜன 30, 2011

கடலூர் : கடலூர் சுப்ராயலு ரெட்டியார் மண்டபத்தில் நேற்று நடந்த முத்துமல்லா ரெட்டியார் நூற்றாண்டு விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார். மதுராந்தகம் அருகே கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமல்லா ரெட்டியார் கடந்த 1911ல் பிறந்தார். அவரது நூற்றாண்டு வழா கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி இண்டகரா சாப்ட்வேர் மேலாண் இயக்குனர் ஸ்ரீராம் சுப்ரமண்யா வரவேற்றார். விழாவில் பொள்ளாச்சி மகாலிங்கம் "தலைமுறை வழிகாட்டி' என்கிற புத்தகத்தை வெளியிட அதனை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் பெற்றுக்கொண்டார். முத்துபாபு ரெட்டியார் குடும்ப காலண்டரை வெளியிட அதனை சென்னை முருகப்பா குழுமம் சீதா முத்தையா பெற்றுக் கொண்டார். புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், முத்துமல்லா ரெட்டியாருக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார். உழைக்கும் மக்கள் மாமன்றம் தலைவர் குசேலர், முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன், புதுச்சேரி ராமனாதன், எம்.எல்.ஏ., அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.புலம்பாக்கம் முத்துகுமரப்பா ஏற்புரை வழங்கினார்.பேராசிரியை ராதிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X