குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு| Dinamalar

குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு

Added : பிப் 03, 2011 | கருத்துகள் (20)
Advertisement
குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு

பாரிஸ் : ""குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சந்தேகத்திற்குரியவர்களை கண்டறியவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சர்வதேச போலீசின் உதவியை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. "இன்டர்போல்' என்னும் சர்வதேச போலீஸ் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிகிறது. ரெட் கார்னர் நோட்டீசின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது. குற்றவாளிகளை கண்டறியவும், அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவும், நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச போலீசார் மூலம், ஒரு குற்றவாளி பற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் போது, அந்த குற்றவாளி எளிதில் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையே உலவிட முடியாது.


ரெட் கார்னர் நோட்டீஸ் ஒரு சர்வதேச கைது வாரன்ட் இல்லை என்றாலும், அதன் மூலம் ஒருவரை கைது செய்யும்படி, உலக நாடுகளை குறிப்பிட்ட நாடு கேட்டுக் கொள்ள முடியும். குற்றவாளியைப் பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம். சர்வதேச போலீசின் தலைமையகம் பிரான்சில் உள்ளது. சர்வதேச போலீஸ் தன் திறனை மேம்படுத்தவும், உலக அளவில் அதன் பலம் அதிகரிக்கவும் இந்தியா மேலும் பல உதவிகள் அளிக்க வேண்டியது அவசியம். போலீசாரின் திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே, திட்டமிட்ட குற்றங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி தொடர்பான உயர் தொழில்நுட்ப குற்றங்கள் போன்றவற்றிலும் சர்வதேச போலீசுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். சர்வதேச போலீசுக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடு. அவ்வப்போது திறமையான அதிகாரிகளை அனுப்பி வைக்கிறது. அவர்களும் சர்வதேச போலீசில் திறமையாகச் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நிபுணர்களின் கூட்டம் நடக்கும் போதெல்லாம், அதில், இந்தியாவும் பங்கேற்கிறது. இவ்வாறு ரொனால்டு கே.நோபிள் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu - thanjor,இந்தியா
05-பிப்-201100:08:24 IST Report Abuse
prabhu ரோனல்ட் சார் இந்த பெருமை எல்லாம் கேப்டன் சாருக்கு போய் சேரணும்
Rate this:
Share this comment
Cancel
anand - coimbatore,இந்தியா
04-பிப்-201122:55:12 IST Report Abuse
anand ஏன்னா நாங்க ரெம்ப ஈசியா குற்றவாளிகளை எங்க நாட்டிலிருந்து தப்ப விட்டுருவோம். அப்புறமா உங்க கிட்டே கேப்போம்.
Rate this:
Share this comment
Cancel
T.G.Prasanna - Chennai,இந்தியா
04-பிப்-201121:01:32 IST Report Abuse
T.G.Prasanna உண்மையில் எங்கள் சி.பி.ஐ. மிகத்திறமையாக துப்பறியும், இல்லையெனில் வெறும் ஒரு காமிரா வைத்து ராஜீவ் கொலைக்கு காரணகர்த்தாவை பிடித்திருக்க இயலுமா? ஆயினும் அங்கும் அரசியல் செய்வோர் ஆதிக்கம் உண்டு. அங்கு இங்கு என்றல்லாமல் எங்கும் அரசியல் தலையீடுகள் எங்கள் நாட்டில்.
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
04-பிப்-201116:17:30 IST Report Abuse
appu அய்யா இனொரு உண்மை சொல்லிக்கணும் இங்கே.உள் நாட்டுல குற்றவாளிய அப்டியே கண்டும் காணாம விட்ருவோம் பல சமயத்துல.
Rate this:
Share this comment
Cancel
P.Sathiyamurthi - Pollachi,இந்தியா
04-பிப்-201116:05:24 IST Report Abuse
P.Sathiyamurthi பாராட்டுறதுக்கு முன்னாடி நல்ல விசாரிச்சுட்டு பாராட்டுங்க சார், அப்பத்தான் அந்த பாராட்டு மேல ஒரு மரியாதை இருக்கும்....... இங்க கேடிங்க லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெருசு, ஆனா என்னெத்த கிழிச்சாங்க? கைது மட்டும் பண்ணுவாங்க (சின்ன கேடிகளை மட்டும்), ஆனா நடவடிக்கை மட்டும் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai ,இந்தியா
04-பிப்-201116:05:13 IST Report Abuse
krishna நாங்கள் எங்கள் கடமையை நன்றாக உணர்ந்து செய்வோம்.சட்டங்கள் சரியில்லை என்றால் அதற்க்கு நாங்கள் போருப்பள்ளவே!-காவல் துறை.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
04-பிப்-201115:57:38 IST Report Abuse
Rangarajan Pg நம் நாடு ஜனத்தொகை மிகுந்த நாடு. அதனால் குற்றங்களின் எண்ணிக்கையும் மிகுதியாக தான் இருக்கும். அந்த எண்ணிக்கையில் ஒரு 40 % கண்டுபிடித்து விட்டாலே நம் போலிஸ் மற்ற எல்லா நாட்டினுடைய போலிசை விடவும் அதிகம் குற்றங்களை கண்டுபிடித்தவர்கள் போல தெரிவார்கள். ஆனால் இன்டெர் போல் போலிசுக்கு தெரியாது நம் போலிஸ் குற்றவாளிகளை கண்டு பிடித்தாலும் அதில் பாதி பேர் கூட தண்டனை அடையாமல் விடுதலை ஆகி விடுவார்கள். அப்படியே தண்டனை அடைந்தாலும் நமது அரசியல்வாதிகள் அண்ணா, பெரியார், ஆகியோரின் பிறந்த தினத்தில் அவர்களை விடுதலை செய்து விடுவார்கள். நம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் அதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும் அதிகமாக தெரிகிறது. அதற்காக நமது நாட்டு போலிசை மிகவும் இந்த அளவிற்கு புகழ்வது not desirable .
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan R - Chennai,இந்தியா
04-பிப்-201115:49:54 IST Report Abuse
Karthikeyan R அட விடுங்கப்பா , இன்னும் FIR போடாத கேசு லட்ச கணக்குல இருக்கு இதுக்கு போய்,...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-பிப்-201114:52:42 IST Report Abuse
villupuram jeevithan என்னங்க இது! குற்றவாளி இல்லாதவரை கைது பண்ணி இருக்கிறார்கள், என்கிறார் கலைஞர்.
Rate this:
Share this comment
Cancel
rameshrackson - அல்வா நகரம் ,இந்தியா
04-பிப்-201113:59:57 IST Report Abuse
rameshrackson இன்னும் எங்க இந்தியா பத்தி தெரியல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை