திருப்பூர்:இடுவாய், சீரங்ககவுண்டன்பாளையம், ஸ்ரீவீரமாத்தியம்மன் கோவிலில் இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீவீரமாத்தியம்மன் கோவிலில் கடந்த 5ம் தேதி முதல்கால யாக பூஜை துவங்கியது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. இன்று காலை 6.00 மணி முதல் நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, திரவியாஹூதி, பூர்ணாஹூதி, யாத்ராதான சங்கல்பம் மற்றும் கலசங்கள் யாக சாலையில் இருந்து மூலாலயம் புறப்படுகிறது. காலை 9.00 மணி முதல் 9.30 மணிக்குள், ஸ்ரீவீரமாத்தியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 10.00 மணிக்குள், ஸ்ரீவீரமாத்தியம்மன் மற்றும் பரிவார ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், காலை 10.00 மணிக்கு மேல் அபிஷேகம் நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.