ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வலுப்படுத்த திட்டம்: தமிழகத்தில் 20 ஆயிரம் தொண்டர்கள் பிரசாரம்| Dinamalar

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வலுப்படுத்த திட்டம்: தமிழகத்தில் 20 ஆயிரம் தொண்டர்கள் பிரசாரம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வலுப்படுத்த திட்டம்: தமிழகத்தில் 20 ஆயிரம் தொண்டர்கள் பிரசாரம்

காங்கிரசின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, 20 ஆயிரம் தொண்டர்கள் வீடு, வீடாகச் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக, ஐந்து லட்சம் கையேடுகள், 30 லட்சம் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன.


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், சமீபகாலமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். கடுமையான விமர்சனங்களுக்கும் பதிலளித்துள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், காங்கிரசுக்கு எதிரான பதிலடி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் ஐந்து லட்சம் கையேடுகள் அச்சிடப்பட்டு மக்களுக்கு வீடு, வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த 16 பக்க கையேட்டில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தோற்றம்; சேவைகள்; ஆர்.எஸ்.எஸ்., குறித்த தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.,சை கடுமையாக விமர்சித்துள்ள அகில இந்திய இளைஞர் காங்., பொதுச்செயலர் ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. "இவற்றை படிக்கும் மக்களே, "எது சரி?' என்ற முடிவுக்கு வாருங்கள்; எங்களோடு இணைந்து பணியாற்றுங்கள்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பலப்படுத்துவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரசாரத்துக்கு, "மக்கள் தொடர்பு இயக்கம்' என பெயரிட்டுள்ள தமிழக ஆர்.எஸ்.எஸ்., கடந்த 6ம் தேதி முதல் வரும் 20ம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று மக்களை சந்திக்குமாறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பணித்திருக்கிறது.

"மக்கள் தொடர்பு இயக்கம்' பிரசாரத்தில், தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம், தாலுகா வாரியாக பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவுக்கு 4, 5 பேர் வீதம், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரத்தின் போது மக்களுக்கு வினியோகிக்க ஐந்து லட்சம் கையேடுகள், 30 லட்சம் துண்டுபிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக வழங்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தமிழக செய்தி தொடர்பாளர் சடகோபன் கூறுகையில், ""மக்கள் தொடர் இயக்கம்' முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. முழு நேர பிரசார பணியாகவும், பகுதி நேர பணியாகவும் தொண்டர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ""சாதாரண மக்கள் முதல் சமூகத்தில் அந்தஸ்து மிகுந்த நீதிபதிகள், டாக்டர்கள், வக்கீல்கள் என பல தரப்பினரையும் சந்தித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சேவை, நோக்கம் குறித்து விவரிக்குமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது; இந்த இயக்கம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது; இதன் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., மேலும் வலுப்பெறும்,'' என்றார்.

- நமது நிருபர் -


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhandapani - nagercoil,இந்தியா
08-பிப்-201122:41:52 IST Report Abuse
Dhandapani நல்ல செய்தி தொடருட்டும் ஆர் எஸ் எஸ்சின் பணி
Rate this:
Share this comment
Cancel
Srinivasan - Al-khobar,சவுதி அரேபியா
08-பிப்-201122:14:30 IST Report Abuse
Srinivasan Good work by RSS and hats off for them
Rate this:
Share this comment
Cancel
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
08-பிப்-201120:34:46 IST Report Abuse
RAMASWAMY S CONGRATES DO IT IMMEDITELY
Rate this:
Share this comment
Cancel
veeratamilan - chennai,இந்தியா
08-பிப்-201118:17:29 IST Report Abuse
veeratamilan RSS ஒரு தேசிய அமைப்பு. நாட்டுக்காக விளம்பரம் இல்லாமல் பல தியாகங்கள் சேவைகள் செய்த செய்யும் அமைப்பு. அது மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gandhi - bangalore,இந்தியா
08-பிப்-201117:47:48 IST Report Abuse
Gandhi ஆர்எஸ்எஸ்ஸின் பணி மிகவும் மெச்சத்தக்கது. காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சிகள் ஆர்எஸ்சை விமர்சிக்கும் தகுதியற்றவர்கள். தமிழகத்தில் காங்கிரஸ் அழிவது தமிழகத்திற்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
rocket raja raam - kualalumpur,மலேஷியா
08-பிப்-201117:15:39 IST Report Abuse
rocket raja raam மக்கள் தொடர் இயக்கத்திற்கு என் வாழ்த்துக்கள் .....ஜெய்ஹிந்த் .
Rate this:
Share this comment
Cancel
பா. ரெங்க - Chennai,இந்தியா
08-பிப்-201114:43:03 IST Report Abuse
பா. ரெங்க உருப்படியாக ஒரு தமிழ் டி.வி. சேனலை பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதே ஆரம்பித்திருந்தால், இப்படி வீடு வீடாக ஏறி இறங்கி தொண்டர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டி வந்திருக்காது. துரதிஷ்டவசமாக, அறிவு உள்ள தலைவர்கள் யாரும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அமைவதில்லை. பா. ரெங்கதுரை
Rate this:
Share this comment
Cancel
vishnu - hamadtown,பஹ்ரைன்
08-பிப்-201112:25:24 IST Report Abuse
vishnu ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி விமர்சிக காங்கிரஸ் அமைபினருக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை ( காங்கிரஸ் உலக புகழ்பெற்ற ஊழல் அமைப்பு நாட்டு மக்களின் பணத்தை தின்று ஏப்பம் விடும் ஊழல் அரசியல் முதலைகளை கொண்ட அமைப்பு. ஆனால் ஆர்.எஸ்.எஸ் இலைஜர்கள் மனதில் இந்திய நட்டு பற்று ,நல்ஒலூகம், நேரம் தவறாமை, மனிதனுக்கு தேவையான நல் நடத்தையை தருகிறது, அதுமட்டும் இல்லாம உடல் நலம் காக்கும் வகையில் உடற்பயீர்ச்சி தருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபடுகின்ற அனைவரும் நல்வழி படுத்துவர் நாட்டின் நலனை பற்றி எண்ணம் kondavargal
Rate this:
Share this comment
Cancel
Murugadoss - Vengaalore,இந்தியா
08-பிப்-201109:47:29 IST Report Abuse
Murugadoss இங்க இருக்குற சனியன்கள்ல நீங்க எவ்வளவோ பரவாயில்ல. ஓரளவுக்கு வேலை செய்யறீங்க.
Rate this:
Share this comment
Cancel
sangkar - chennai,இந்தியா
08-பிப்-201108:20:25 IST Report Abuse
sangkar RSS போன்ற நாட்டு பற்று மிக்க இயக்கங்கள் இருப்பதால் தான் என்னை போன்ற இளைஞர்களுக்கு நம் நாட்டின் மீது பாச உணர்வு உள்ளது. RSS சின் வெற்றி நடை மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள். வாழ்க என் உயிரினும் மேலான பாரதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.