| கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது: நிதியமைச்சர் பெருமிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது: நிதியமைச்சர் பெருமிதம்

Updated : பிப் 11, 2011 | Added : பிப் 09, 2011 | கருத்துகள் (151)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை : ""கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது. மேலும் கடன் வாங்கப்படும்,'' என, நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:


* சிவபுண்ணியம் - இந்திய கம்யூனிஸ்ட்: நிதிப் பற்றாக்குறை, கடன் சுமையில் தமிழக அரசு உள்ளது. 13வது நிதிக்கு வரையறைக்கு உட்பட்டதாக கடன் சுமை உள்ளதாக அரசு கூறுகிறது. கடன் சுமை அதிகரிப்பதற்கு தீர்வு என்ன? திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதே நேரத்தில் கடன் சுமை ஏறுகிறது. இந்த கடன் சுமையை யார் தலையில் சுமத்தப் போகிறீர்கள்.


* நிதியமைச்சர் அன்பழகன்: ஒரு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்குகிறது. கடன் வாங்கி தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இலவச திட்டங்களுக்கு கடன் வாங்குவதில்லை. வாங்கிய கடன் அனைத்தும், மூலதனச் செலவுக்காக தான். கட்டுமானம் அல்லது வேறு தொழில்களுக்காக இந்த கடன் பயன்படுத்தப்படுகிறது. இந்த கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது.


* சிவபுண்ணியம்: புதிய விளக்கத்தை அமைச்சர் தந்துள்ளார். கடன் தான் வாழ வைக்கிறது என்றால், அந்த கடன் அழிவை ஏற்படுத்தி மூழ்கிவிடும்.


* நிதியமைச்சர்: கடன் வாங்குவது வளர்ச்சியின் அடையாளம். அதற்காக மேலும் கடன் வாங்கப்படும். பெற்ற கடனை திருப்பி தரும் வல்லமை நமக்கு இருக்கிறது.


* பீட்டர் அல்போன்ஸ்: உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்கா தான் அதிகளவு கடன் வாங்கியுள்ளது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் நாடுகள் அனைத்தும் கடன்கள் மூலம் தான் உலகில் வெற்றி சரித்திரத்தை பதித்துள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவையே, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தான் அமைக்கப்பட்டுள்ளன. கடனை திரும்ப கட்டக் கூடிய சக்தியை பெற்றிருப்பது தான் அரசின் வெற்றி. எனவே, கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற உண்மைக்கு மாறான பிரசாரத்தை திரும்ப பெற வேண்டும்.


* அமைச்சர் துரைமுருகன்: எவனும் கேட்டவுடன் கடனை தூக்கி கொடுத்து விட மாட்டான். திருப்பி செலுத்தும் சக்தி இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுப்பான்.


* சிவபுண்ணியம்: மத்திய அரசின் உலகமயமாக்கல் கொள்கை தான் இதற்கு காரணம். இந்த கொள்கையால் தான் மாநில அரசும் பாதிக்கப்பட்டு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. கடன் பெற்றது பற்றி எனக்கு தெளிவுபடும் வகையில் விளக்கம் அளிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளில் திருப்பி செலுத்தியிருந்தால் எப்படி ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் வந்திருக்கும். எப்போது இந்த கடனை திருப்பி செலுத்த போகிறீர்கள். இது பற்றி எல்லாம் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இலவச திட்டங்களுக்கு கடன் வாங்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஒரு தொகை, ஒரு நிதி ஒதுக்காமல் எப்படி இலவச திட்டம் செயல்படுத்த முடியும். ஆறு மாதங்களில் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை உயரும் போது, காய்கறி போன்றவற்றின் விலை உயருகிறது. இதற்கு எல்லாம் தெளிவான கொள்கை இல்லாதது தான் காரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எடுத்து கொண்டால், கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து தொடருகிறது. இதற்கு மையமாக இருக்கும் காரணங்களை அரசு ஆராய வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் குற்றவாளிகள் எப்படி தைரியமாக வெளியில் உள்ளனர். அரசியல் பின்னணி இல்லாமல் இதுபோன்ற காரியங்களை அவர்களால் செய்ய முடியாது. குற்றங்களை தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தெளிவான பார்வை அரசிடம் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Chandrasekaran - Noida,இந்தியா
14-பிப்-201111:09:20 IST Report Abuse
Balaji Chandrasekaran கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அறிக்கை வாசிக்கும் நமது அமைச்சர் வாழ்க !!
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
12-பிப்-201111:46:05 IST Report Abuse
manoharan அதேபோல் விவசாயிகளுக்கும் பட்டணத்திற்கு புறம்பே இருப்பவர்களுக்கும் கடனையும் மானியத்தையும் வாரி வழங்குங்கள். அவர்கள் வறுமையினால் தங்கள் நிலங்களை விற்று விடுகிறார்கள். வருங் காலங்களில் உணவு பற்றா குறை கடுமையாக இருக்க போகிறது. விவசாயிகளுக்கு அளவே இல்லாமல் மானியம் கொடுங்கள். அவர்களை பணக்காரர்களாக ஆக்குங்கள். பம்ப்களை இலவசமாக கொடுப்பதுபோல் தண்ணீர் கிடைக்கவும் மிச்சபடுத்தவும் மானியத்தில் அந்த கருவிகளை தாருங்கள். மின்சார வெட்டை அடியோடு நீக்குங்கள். வசதியான வீடு கட்ட மானியம் கொடுங்கள். கிராமங்கள் மத்தியில் தரமான தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவ ஊக்குவியுங்கள். பட்டினங்களுக்கு மட்டும் வசதிகளை பெருக்கி முன்னேற செய்யாமல், கிராமங்கள் மத்தியில் சிறு பட்டனங்களை சகல வசதிகளுடன் உருவாக்குங்கள். அங்கு தொழில் தொடங்க மானியம் மற்றும் தள்ளுபடி கொடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
desertlava - manama,பஹ்ரைன்
10-பிப்-201122:53:38 IST Report Abuse
desertlava நல்ல வாழ்க்கை. காவல்துறை, ராணுவம், ரவுடிசம், எல்லாம் கைக்குள் வைத்துவிட்டு மக்களை தினம் தினம் வேதனை படுத்துவது போதாது என்று; திமிர் பிடித்து என்ன ஆட்டம் போடுகின்றார்கள்
Rate this:
Share this comment
Cancel
Nelpandiyar Thiru - chennai,இந்தியா
10-பிப்-201120:08:46 IST Report Abuse
Nelpandiyar Thiru என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் !அரசிடம் எராளமான வளங்கள் இருக்கிறது , ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதை விளம்பரபடுத்த நீங்கள் செய்யும் செலவு அந்த திட்டத்தின் மதிப்பை விட அதிகமாய் இருக்கிறது அதுவும் உங்கள் தொலைகாட்சியில் மட்டுமே விளம்பர படுத்துகிரிர்கள் .
Rate this:
Share this comment
Cancel
tamilan - Delhi,இந்தியா
10-பிப்-201119:37:33 IST Report Abuse
tamilan ரூம் போட்டு யோசிப்பாங்களோ ........ எப்படி முட்டாள் ஆக்கலாம்னு ...
Rate this:
Share this comment
Cancel
ayya - mdu,இந்தியா
10-பிப்-201119:31:16 IST Report Abuse
ayya Can someone tell me, peter Alphonse from which constituency. I want to give a call to min of 1000 people during election and tell, please don't vote for him. Who knows using Spectrum looting, these people can divert the call message to something else. since these are scientific robbers. Only solution to get freedom from these robbers, start thinking. Since we need to overcome big group so called Govt Servants during election. This is not their mistake. Everything polluted by DMK Gov.
Rate this:
Share this comment
Cancel
kkn.kumaresan - Palani,இந்தியா
10-பிப்-201119:03:43 IST Report Abuse
kkn.kumaresan வாங்கிய கடன் எவ்வளு என்ன செஞ்சாங்க ?........
Rate this:
Share this comment
Cancel
Venkateswaran.C - Thiruvananthapuram,இந்தியா
10-பிப்-201118:53:27 IST Report Abuse
Venkateswaran.C கடன் பட்டர் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் - ராமாயணம் துஷ்டனாக கூறும் ராவணன் அறிந்த மரபு கூட மறந்து மானம் இழந்து இன்று மார்தட்டுகிறான் தி மு க வின் ______ தமிழன் அன்பழகன்
Rate this:
Share this comment
Cancel
kkn.kumaresan - Palani,இந்தியா
10-பிப்-201118:36:32 IST Report Abuse
kkn.kumaresan என்னப்பா நீங்க முதல்வர் குடும்பம் அன்பு குடும்பம் அமைச்சர் குடும்பம் எல்லாம் வாழவேண்டாம பாவம் அவங்க எல்லாம் பிச்சை எடுக்கருங்கள துதுது....... கடன் வாங்கறதுக்கு பேசாம நாங்கெல்லாம் பட்டினி கேடப்போம்
Rate this:
Share this comment
Cancel
Mahendran Mahe - Xiamen,சீனா
10-பிப்-201117:50:21 IST Report Abuse
Mahendran Mahe நிதி இருக்கா இல்லையா என்று நிதி அமைச்சரிடம் கேக்காமலே ... எல்லா திட்டத்தையும் மனசுக்கு நினைச்ச நேரத்துல நிறைவேற்ற சொல்லி முதல்வர் சொன்னார் ...அதான் கடன் வாங்கவேண்டியதா போச்சு ? இதுதான் உண்மையான பதில் ... இத சொன்னா தலைவர் கட்சிய விட்டு நீக்கி ஆணை போடுவார் ...நட்பு பாதிக்கும் ... இதுதான் உண்மையான நிலைமை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை