| 1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்

Updated : பிப் 13, 2011 | Added : பிப் 12, 2011 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலைக் கல்லூரியில் நடந்த விழாவில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புடைய 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை "ஜீரோ' என்ற கேள்விக்கு சரியான பதிலளித்த மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கீழக்கரை அருகே உள்ள முத்துப்பேட்டை கவுசானல் கலை கல்லூரி நிறுவன தின விழா, கல்லூரி செயலாளர் ஜெயராஜ் தலைமையிலும், முதல்வர் ஞானப்பிரகாசம் முன்னிலையிலும் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை ஆடிட்டர் ஜெரால்டு எபினேசர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நகைச்சுவையுடன் பேசினார். அப்போது அவர் ,"" 1.76 லட்சம் கோடி ரூபாயில் எத்தனை ஜீரோக்கள் உள்ளது, என்பதை தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக,'' கூறினார்.

இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டாலும், நீண்டநேரமாக யாரும் பதிலளிக்கவில்லை. அப்போது மாணவி ஆனந்தி ,"10 ஜீரோ,'' என , பதிலளித்தார். பலத்த கரகோஷங்களுக்கிடையே மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய ஆடிட்டர், "" கடந்த சில நாட்களுக்கு முன் "தினமலர் ' இதழின் முதல் பக்கத்தில் இதற்கான பதில் தெளிவாக வெளியிடப்பட்டதாக,'' தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rravi - coimbatore,இந்தியா
15-பிப்-201115:20:03 IST Report Abuse
rravi கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர, வருடம் அச்சிடப்பட்ட புது நோட்டுகள் வெளி விட பட வேண்டும். அவை அனைத்தும் வங்கிகளின் கணக்குகளில் வழியே மாற்றம் செயப்பட வேண்டும். இந்த உலகம் அடித்துக்கொண்டு சாவதற்குள் இந்த உலகம் சமத்துவ உலகமாக மாற வேண்டும். மக்கள் வியாபாரம் செய்வது கூடாது. அரசே மக்களுக்கு தேவையான வற்றை அளிக்க வேண்டும். அரசே கொள்முதலும் வியாபாரமும் செய்ய வேண்டும். அணைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சி மேற்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Janaki raman Pethu chetti - Trichy,இந்தியா
15-பிப்-201108:56:32 IST Report Abuse
Janaki raman Pethu chetti இப்படி எல்லாம் செய்தால் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் ரோஷம் வந்து விடும் என்று நினைக்கிறார்களா? ரோஷத்துக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
Rate this:
Share this comment
Cancel
Sundar - Bangalore,இந்தியா
14-பிப்-201111:19:00 IST Report Abuse
Sundar சபாஷ் ... கொடுக்க பட வேண்டிய பரிசு ... நம் மக்கள் நிறைய பேருக்கு எத்தனை பூஜ்யம் என்று தெரியாது ...ஏன் எனக்கே சில வாரங்களுக்கு முன்புதான் தெரிந்தது .... இந்த ஊழல் வாதிகள் செய்த ஊழலுக்கு நாம் பாடம் படிக்கிறோம் ... தமிழ்நாடு ... காப்பாற்று தெய்வமே ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை