மனைவி "டார்ச்சர்' தாங்க முடியவில்லை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி "டார்ச்சர்' தாங்க முடியவில்லை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி

Added : பிப் 14, 2011 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: "மனைவியின், "டார்ச்சர்' தாங்க முடியவில்லை' என, கூறி, கலெக்டர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சவுண்டையா தலைமையில் நடந்தது. மதியம் 12.45 மணிக்கு, பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (40), கலெக்டர் அலுவலகம் வந்தார். பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். போலீசார் ஓடிவந்து, செல்வராஜிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். அவரது தலையில் தண்ணீர் ஊற்றி, கைது செய்தனர்.


நிருபர்களிடம் அவர் அழுதுகொண்டே கூறியதாவது: பவானியில் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். 1995ல் எனக்கும், பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் திருமணம் நடந்தது. எங்களது ஒரே பெண் குழந்தை ஆறாவது படிக்கிறாள். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை; மற்றொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இது தொடர்பாக கேட்டால், என்னை, "டார்ச்சர்' செய்வார். சமீபகாலமாக, என் மனைவியும், மகளும் என்னுடன் இல்லை. என்னிடம் ஜீவனாம்சம் கேட்டு, என் மனைவி ஸ்ரீதேவி துன்புறுத்துகிறார். ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். என்னை விசாரித்த போலீசார், சரமாரியாக தாக்கினர். ஜீவனாம்சம் தருவதற்கு என்னிடம் ஏதுமில்லை; எதற்காக என்னை பல ஆண்டுகளாக, "டார்ச்சர்' செய்கின்றனர் என்றே தெரியவில்லை. அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என, அலைகிறேன். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக தெரியவில்லை. இதனால்தான் மன உளைச்சல் அடைந்தேன்; கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ளலாம் என வந்தேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
15-பிப்-201101:18:43 IST Report Abuse
GOWSALYA ஒரு கலெக்டருக்கு இந்தக் கெதியா? மகளிர் போலீஸ்,பெண்கள் கொடுக்கும் புகாரை மட்டும் தான் ஏற்றுக்கொள்வார்களா?....ஆண்களிடம்...[..கணவனிடம்.....].விசாரணை நடத்தமாட்டார்களா?இது மிக விந்தை????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை