நெல்லையில் பாதிரியார் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் பாதிரியார் கொலை

Added : பிப் 16, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருநெல்வேலி : நெல்லையில் பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் கொலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஞானசவுந்தர் மகன் அமலன்(54). கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியாரான இவர், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் "குடும்பநல்வாழ்வு பிரிவு செயலராக' ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிவந்தார்.பாளையங்கோட்டை, சாந்திநகர், குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள தேம்பாவணி தோட்டத்தில், மாடியறையில் தங்கியிருந்தார். கடந்த 14ம் தேதி இவரை கடைசியாக பார்த்துள்ளனர். 16ம் தேதி பிற்பகலில் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற பெண், அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் தெரிவித்தார். உள்ளே சென்று பார்த்த போது, அவர் படுத்திருந்த கட்டிலில் இரண்டு கால்களும் கட்டப்பட்டிருந்தன. கைகள் சேர்த்து கட்டப்பட்டிருந்தன. தலையணையை கொண்டு முகத்தை அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. சம்பவத்தின் போது அவர் லுங்கி அணிந்திருக்கிறார். ஆலய வளாகத்திற்குள் வேறு நபர்கள் யாரும் வரவாய்ப்பில்லை என தெரிவித்த போலீசார், அவரது உடலை பரிசோதனைக்கு, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடும்ப பிரச்னைகள், கணவன், மனைவி பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் போதகராக செயல்பட்ட இவருக்கு அதன் மூலம் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. உடன் பணியாற்றும் பாதிரியார் அருள் புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை