அ.தி.மு.க., வுடன் கூட்டணி மக்கள் விருப்பம்: பண்ருட்டி ராமச்சந்திரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வுடன் கூட்டணி மக்கள் விருப்பம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

Added : பிப் 24, 2011 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க., சார்பில், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர் ராஜன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும், அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாலை 5.30 முதல் 7 மணி வரை நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் கட்சித்தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்குப்பின் அமையும் ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் எதுவும் தே.மு.தி.க.,விடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHANARENGAN SRINIVASAN - Thiruchirappalli,இந்தியா
25-பிப்-201122:01:20 IST Report Abuse
MOHANARENGAN SRINIVASAN என்ன ஒரு ஒற்றுமை பாருங்களேன்! அணைத்து தலைவர்களும் தங்களது கூட்டணியை நிறைவு செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், பின்னர் முடிவுக்கும் வந்தனர்! ஆனால், தேமுதிக தலைவர் தனது கூட்டணி கடவுளுடந்தான் என்றார்! சொன்னது போலவே திருப்பதிக்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார், அதுபோலவே, அதிமுக தலைவரும் சாமுண்டீஸ்வரி சென்று கடவுளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்! இறுதியில் இருவருமே கடவுளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை!
Rate this:
Share this comment
Cancel
MOHANARENGAN SRINIVASAN - Thiruchirappalli,இந்தியா
25-பிப்-201121:52:27 IST Report Abuse
MOHANARENGAN SRINIVASAN தேமுதிக தலைவர் கடவுளுடந்தான் தனது கூட்டணி என்றார்! இப்பொழுது கடவுளுக்கு கூட்டணியில் இடம் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
MOHANARENGAN SRINIVASAN - Thiruchirappalli,இந்தியா
25-பிப்-201121:27:08 IST Report Abuse
MOHANARENGAN SRINIVASAN அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம், என் வழி தனி வழி என்று கூறிதான், திரு விஜயகாந்த் அவர்கள் தனி கட்சியை ஏற்படுத்தினார். பின்னர் தனியாகவும் தேர்தல்களை இதுவரை சந்தித்தார். இந்த முறையும் தனியாக தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் ஒரு திருப்பு முனை ஏற்பட்டிருக்கும். ஆனால், நல்ல சந்தர்பத்தை திரு விஜயகாந்த் அவர்கள் நழுவ விட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணிதான் நல்லது என்றால், தனி கட்சி எதற்கு? இரண்டாவதாக, தேர்தலுக்குப்பின் தனது கூட்டணியை மாற்றிக்கொள்ளமாட்டார் என்பது எப்படி நிச்சயமாகும்? எனவே! அரசியல்வாதிகள் தங்கள் எதிர்பார்ப்புகளை விதைக்கிறார்கள்! மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை புதைக்கிறார்கள்! வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X