அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 24, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

டாட் காம்


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்


காசியில் அன்னபூரணி சத்திர டிரஸ்டில், நாள் தோறும் ஆயிரத்து 500 பேருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. திருப்பதியில் நாள்தோறும் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் நடக்கிறது. உலகில் பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், மூன்றில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். www.bhookh.com என்ற வெப்சைட்டுக்குள் சென்று, நாம் ஒரு முறை கிளிக் செய்தால், ஒருவருக்கு ஒரு வேளை உணவை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் இலவச உணவு வழங்கும் நிறுவனங்களை, இந்த வெப்சைட் பட்டியலிட்டு உள்ளது.


தொடு சிகிச்சை


மாற்று மருத்துவ முறைகளில், தொடு சிகிச்சை தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெய்கியைப் போன்று, "சித்த விஞ்ஞானம்' என்ற தொடு சிகிச்சையும், இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. "சித்த விஞ்ஞானம்' என்பது பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். இதன் தலைமையகம் புனே நகரில் உள்ளது. வித்தியாசமான மாற்று மருத்துவம் குறித்த தகவல்களை, yahoo groupsல் "alternativemedicine' என்ற வெப்சைட் குழுவில் விவாதிக்கலாம்.


அறிவியல் ஆயிரம்


கசப்புத் தேன்


தேன் என்றாலே இனிப்புக்கும், இனிமைக்கும் உவமையாகவும் உருவகமாகவும் சொல்லப் படுகிறது. "தேனே தெள்ளமுதே' என்ற தாலாட்டுப் பாடல், தேனைப் போல குழந்தையும் இனிமை யானது என்பதைக் காட்டுகிறது. ஆனால் மலேசியாவிலோ இந்த நிலைமை முற்றிலும் மாறுபாடானதாக உள்ளது. அவர்கள் தேனை வெறுப்பிற்கும், கசப்பிற்கும் உவமையான தாகக் கூறுவர். முகத்தை சுளிப்பவர்களைப் பார்த்து அவர்கள் "ஏன் இப்படி தேன் குடித்தவனைப் போல இருக்கிறாய்' என கேட்பர். ஏனெனில் மலேசியாவில் கிடைக்கும் தேனோ, மற்ற நாடுகளின் தேனைப் போல இல்லாமல், முழுவதும் வேறுபட்டு கசப்பாக இருக்கும். மலேசியாவில் எங்கு பார்த்தாலும் ரப்பர் தோட்டங் களே மிகுதியாக உள்ளன. ரப்பர் தோட்டங்களில் இருந்து கிடைக்கின்ற தேனும் கசப்பாகத்தான் இருக்கும். கொடிய வயிற்று நோயைப் போக்கும் சக்தி, இந்த மலேசிய கசப்புத் தேனுக்கு உள்ளது.


தகவல் சுரங்கம்


தென் ஆப்ரிக்க சுற்றுலா


ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுலா செல்ல, ஒரு குறிப்பிட்ட பருவம் தான் ஏற்புடையதாக இருக்கும். ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுலா செல்ல, ஓர் ஆண்டில் எல்லா மாதங்களுமே சிறந்ததாக இருக்கிறது.வெளிநாட்டு சுற்றுலா என்றாலே தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று மட்டுமே இல்லாமல், தென் ஆப்ரிக்காவும் இருக்கிறது என்பதை, இந்திய மக்களுக்கு உணர்த்த தென் ஆப்ரிக்க சுற்றுலாத் துறை பரவலான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.தென் அரைக்கோளப் பகுதியில் இருப்பதால், தென் ஆப்ரிக்காவின் கோடை காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். குளிர் காலம் பொதுவாக மே முதல் ஜூலை வரை இருக்கும்.மும்பையில் இருந்து தென் ஆப்ரிக்காவின் தலைநகரான ஜோகனஸ்பர்க்கிற்குச் செல்ல, சவுத் ஆப்ரிக்கன் ஏர்வேஸ் விமானங்கள் இயக்கப் படுகின்றன. எட்டரை மணி நேரத்தில் மும்பையில் இருந்து ஜோகனஸ்பர்க்கை அடையலாம். தென் ஆப்ரிக்காவில் 11 ஆட்சி மொழிகள் இருந்தாலும், ஆங்கிலம் பரவலாக பேசப்படுவதால், தென் ஆப்ரிக்க சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு, மொழிப் பிரச்னைகள் எதுவும் இல்லை.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X