பட்ஜெட்டில் அருண்ஜெட்லி தாராளம் ! ஏழைகள் ,பெண்கள் முன்னேற்ற திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
டிஜிட்டல், விவசாயம், ஏழைகள் முன்னேற்ற திட்டம், பட்ஜெட், ஜெட்லி, பொருளாதாரம்

புதுடில்லி: இன்னும் ஒரு ஆண்டில் தேர்தலை சந்திக்க வேண்டியது இருப்பதாலும், பல்வேறு தரப்பினரும் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதாலும் பா.ஜ., அரசிற்கு நல்ல பெயர் கிடைப்பதற்கு ஏதுவாகவும் பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது அவருடன் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.
நோயால் பாதிக்கப்பட்டோருக்கு 10 கோடி குடும்பத்தினர் பயன் பெறும் வகையில் ரூ. 5 லட்சம் வரை நிதி வழங்கும் ஒரு திட்டத்தை நிதி அமைச்சர் அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டார். இது உலகிலேயே பெரும் தேசிய சுகாதார திட்டம் ஆகும்.
நடுத்தர மற்றும் மாத சம்பளம் பெறுவோர் பயன் பெறும் வகையில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்பதால் இந்த தரப்பினர் திருப்தி அடையவில்லை. பெண்களுக்கான கடன் வழங்குதல், வருங்கால வைப்பு நிதியில் பணியில் முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8 சதவீதம் செலுத்தினால் போதும் என்றும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல், விவசாயம், ஏழைகள் முன்னேற்ற திட்டம், பட்ஜெட், ஜெட்லி, பொருளாதாரம்

இந்த பட்ஜெட் ஏழைகள் , பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட சாமானியர்கள் பயன்பெறும் பட்ஜெட், புதிய இந்தியாவுக்கான 125 கோடி இந்தியர்களுக்கு உதவும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.காங்கிரஸ் ,இடதுசாரி கட்சியினர் இந்த பட்ஜெட்டை குறை கூறியுள்ளனர்.

5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பார்லி.,யில் பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உரையை துவக்கி அவர் பேசுகையில்;
நாடு ஊழலில் மூழ்கி கிடந்தது. பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சவால்களாக இருந்ததாகவும், இருப்பினும் பெரும் முன்னேற்றம் கிடைத்துள்ளது. உலக அளவில் இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று வருகிறது. 2. 5 டிரில்லியன் பொருளாதார மதிப்புடன் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. ஏழைகளையும், விவசாயிகளையும் உயர்த்தும் அரசாக திகழ்கிறது. வரும் 2020 ல் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக உயரும். நேர்மையான, வெளிப்படையான ஆட்சி நடத்தி வருகிறோம். விவசாயம், கல்வியைமேம்படுத்த அரசு செயல்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் 7.5 சதவீதமாக பொருளாதார வளர்ச்சியை பெறுவோம். 8 சதவீத பொருளாதார வளரச்சியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம். கம்பெனியை ஒரே நாளில் பதிவு செய்ய முடியும். அரசியல் ஆதாயம் நோக்கமில்லாமல் உழைத்து வெளிப்படையான, லஞ்ச லாவண்யமற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: * டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு 3, 073 கோடி * 4, 257 ஆள் இல்லா ரயில் நிலையங்கள் அகற்றப்படும் * 18 ஆயிரம் கிலோ மீட்டரில் இரட்டை ரயில்பாதை * அனைத்து ரயில் நிலையங்களிலும் வைபை வசதி * ரயில்வேயில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் * விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்புதிட்டம் * 25 ஆயிரம் ரயில் 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் * ரயில்வே திட்டங்களுக்கு 1. 48 லட்சம் கோடி ஒதுக்கீடு * 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு புதிய நெடுஞ்சாலைகள் * ஸ்மார்ட் சிட்டியில் 90 நகரங்கள் சேர்ப்பு * காய்கறிகளை பதப்படுத்த ரூ. 500 கோடி * 10 சுற்றுலா தள வெப்சைட்டுகள் மேம்படுத்தப்படும் * வேலை வாய்ப்பை உருவாக்க புதிய பயிற்சி திட்டம் * ஏழைகளுக்கான தேசிய சுகாதார திட்டம்

Advertisement

அறிமுகம் * 70 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது * ஒரு குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் * கங்கை தூய்மை பணிக்கு 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு * பள்ளிகளில் பிளாக் ( கரும்பலகை ) போர்டிலிருந்து டிஜிட்டல் போர்டுக்கு மாறுகிறோம்* 1.26 கோடி பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு துவக்கம் * 1 கோடி வீடுகள் கட்டப்படும் * 50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவம் * 24 புதிய மருத்துவ கல்லூரி துவக்கப்படும் * காசநோயாளிகளுக்கு மாதம்தோறும் ரூ. 500 * 3 பார்லி., தொகுதிக்கு ஒரு மருத்துவகல்லூரி * நாடு முழுவதும் 5லட்சம் மருத்துவமையங்கள் அமைக்கப்படும் * நிலத்தடி நீர்ப்பாசன திட்டத்திற்கு 2,600 கோடி * குஜராத்தில் ரயில்வே கழகம் * 4 கோடி ஏழைகளுக்கு கட்டணமில்லா மின் இணைப்பு * 2022 ல் அனைவருக்கும் வீடு * 2 கோடி டாய்லெட்டுகள் கட்டப்படும். * மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு * 8கோடி பெண்களுக்கு இலவச காஸ் விநியோகம் * கால்நடை துறைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு * 275 மில்லியன் டன் நெல், கோதுமை உற்பத்தி * ஒரே நாளில் பாஸ்போர்ட் பெறலாம் * விவசாய கடன் வழங்க ரூ.11 லட்சம் கோடி * ஒரே நாளில் கம்பெனிகள் பதிவு செய்யும் வசதி * சோலார் எரிசக்தியில் முன்னேற்றம் * விளைபொருளின் ஆதார விலை உயர்வு * விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி * நேரடி மானியத்தில் வெற்றி பெற்றுள்ளோம் * விவசாயம், கல்வி நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் * உலக வங்கி ரேங்கிங்கில் 45ம் இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. * ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
02-பிப்-201810:09:44 IST Report Abuse

Kurshiyagandhiரொம்ப டீசண்டா பொய் சொல்லுறீங்க பா ஜா க மக்களே

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
02-பிப்-201809:56:38 IST Report Abuse

Agni Shivaஅருமையான பட்ஜெட். தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு இருக்கும் அறிக்கை என்று karaiyaanputru உட்பட எதிரி கட்சிகள் குறிப்பிடுவதில் இருந்து இது அருமையான பட்ஜெட் என்று உறுதியாகிறது. வேறொரு அடையாளம் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது. கடந்த நான்காம் காலாண்டு GDP கீழாக போகிறது என்று தற்காலிக வீழ்ச்சியை கண்டு வானத்திற்கும் பூமிக்குமாக குதித்தவர்கள் இப்போது அது சீராக இது வரை இல்லாத அளவிற்கு உயர்ந்து தற்போது உலகில் ஐந்தாவது மிகப்பெரும் பொருளாதாரமாக வளர்ந்திருப்பது கண்டு பொறாமை தீயில் வெந்து சாகிறார்கள். வளர்ச்சி இந்த ஆண்டும் 7 .5 என்று ஆக போகிறது. அதுவும் அவர்களை சுட்டு எரிக்கும் செய்தி. இதுவரை ஒதுக்கப்பட்டு இருந்த ஏழைகளின் வளர்ச்சியை, அவர்களின் ஆரோக்கியத்தை வளர்த்தும் பொருட்டு அவர்களுக்கு மருத்துவ செலவிற்காக ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஐந்து லக்ஷம் ரூபாய் என்ற அறிவிப்பு ஏழைகளை வாழ்விக்க வந்த ஒரு அறிவிப்பு. சுமார் பதினைந்து கோடி ஏழைகளின் உயிரை காப்பாற்றும் ஒரு அற்புதம். வசதி படைத்தவர்களை போல தங்களின் உயிருக்கும் விலை இருக்கிறது எண்ண வைத்திருக்கும் ஒரு நெகிழ்ச்சியான அறிவிப்பு. வசதிப்படைத்தவர்களுக்கு மட்டுமே என்று இருந்த தனியார் மருத்துவமனை சிறப்பு சிகிச்சைகளை இனி ஏழைகளும் பெற முடியும். மூன்று பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரி. ஒவ்வொரு சீட்டிற்கும் கோடிகள் என்று வசூலித்த வசூல் ராஜாக்களின் நிலை அம்போ என்று ஆகும். ஏழை மாணவனும் மருத்துவர் ஆக முடியும் என்ற கனவு எளிதாக மெய்ப்படும். எட்டு கோடி ஏழை குடும்பத்திற்கு இலவச காஸ். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அதிக நிதி உதவி, நான்கு கோடி ஏழைகளின் வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு காசநோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் என்று என்று அனைத்துமே ஏழைகளை கருத்தில் கொண்டு போடப்பட்டு அற்புத பட்ஜெட். ஏழையாக இருந்தவனுக்கு தான் ஏழைகளின் வலி தெரியும்..அதன் விளைவு தான் இந்த அற்புத பட்ஜெட்.

Rate this:
Madurai - Madurai,இந்தியா
04-பிப்-201813:41:22 IST Report Abuse

Maduraiடே லூசுப்பயலே எங்க உன் கூட சொம்படிக்கும் தேசநாசனை காணோம் ....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-பிப்-201800:09:18 IST Report Abuse

Pugazh V//மூன்றாண்டுகளுக்கு PF ஐ அரசே கட்டும் எனும் அறிவிப்பு பல வாசகர்களின் கண்ணில்படவில்லை.இதனால் பல புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும்// ஆருர் ரங்.. பி எப் னா என்னன்னாவது தெரியுமா? முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, சர்வீசில் இருந்து ரிடயர் ஆகிறவரை அரசு தன் பங்கு PF தொகையை ஊழியர்களின் கணக்கில் போடணும். சுதந்திரம் கிடச்ச நாள் முதல் இதான் சட்டம் இது நடந்து கொண்டுமிருக்கிறது. PF அரசு கட்டுவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்குமா. ..ஹலோ..என்ன டிசைன் இது?

Rate this:
Kailash - Chennai,இந்தியா
01-பிப்-201823:11:25 IST Report Abuse

Kailashமுக்கியமான சில விஷயங்கள் இங்கே பதிப்பிக்கவே இல்லை... அளவு கடந்த நன்றியுணர்ச்சி இருப்பதால் உண்மை மறைக்கப்படுகிறது... 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பங்குகள் மீதான நீண்ட கால முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மோடிஜி ஆட்சிக்கு வந்தவுடன் பங்கு சந்தை மட்டுமே வளர்ந்தது மற்ற தொழில்கள் முடங்கியது ஆட்சியை விட்டு போகும் போது இந்த பங்குசந்தையும் ஏன் விடுவானேன்.. என்று நினைத்து இவ்வளவு வரி விதித்துள்ளார்.. உழைத்து சம்பாதித்தவர்கள் வரி கட்டியும் மீதி பணத்தை முதலீடு செய்ய வங்கி வட்டி வருமானம் குறைந்துவிட்டது. வருங்காலத்தில் தங்கள் பிள்ளைகளை கல்வி செலவு, திருமண செலவு போன்றவைக்கு ரொம்ப ரிஸ்க் எடுத்து mutual fund , பங்கு சந்தை என்று இப்போதுதான் முதலீடு செய்ய ஆரம்பித்தனர் அதற்கும் வச்சண்டா ஆப்பு லாபத்திற்கு 10 சதம் வரியாம் Foreign institutional investor போன்றவர்களால் தான் sensex 36000 புள்ளிகள் கடந்து சாதனை படைக்கிறது என்று பாஜக அடிமைகள் முழங்கினார்... இனி இதுவும் சரிவடையும்... சாமானியர்கள் மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் உழைப்பை சேமிக்கவே வழியில்லாமல் செலவழிக்க வைக்கிறது அப்போதுதான் வெளிநாட்டினர் இங்கே திறந்துள்ள சந்தைக்கு பணம் செல்லும். நம் பொருளாதாரம் சேமிப்பு முறையில் இருந்தது.. இப்போது செலவழிக்கும் பொருளாதாரம் நோக்கி நகர்கிறது அப்படி மாற்றினால் வரிவருமானமாக அரசுக்கு நிறைய கிடைத்து கவர்னர், குடியரசு தலைவர், MP MLA சம்பளம், அரசு ஊழியர்கள் அவர்கள் சம்பளம் என்று அவர்கள் செலவுகளை சமாளிக்க முடியும் கார்பொரேட் நிறுவனங்களின் லாபம் உயரும்... இந்த முறை யை தான் அமெரிக்கா போன்ற நாடுகள் செய்கின்றன அதனால் 2008 ஆண்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடைத்த போது அமெரிக்கர்களிடம் காசு இல்லை கடன் மட்டுமே இருந்தது அரசால் ஒன்றும் செய்யமுடியவில்லை வங்கிகள் திவாலானது அந்த நாடு குடிமக்கள் பலர் நடுத்தெருவில் இருந்தனர்... அப்போது சேமிப்பு பொருளாதாரம் நம்மிடம் இருந்ததால் நாம் நாடு தப்பித்தது... மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் வருங்காலத்தில் இன்னமும் கஷ்டப்படவேண்டியதுவரும்..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
02-பிப்-201814:27:15 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்நிஃப்டி 500 புள்ளிகள் சரிவு. இப்போ எப்படி லாபம் சம்பாதிப்பீங்க? இப்போ 10% வரி கட்ட வேணாமே.. எப்பூடி.. மத்திய வர்க்க குடும்பத்துக்கு எப்படி விதவிதமா ஆப்பு பார்த்தீங்களா....

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-பிப்-201822:47:53 IST Report Abuse

Rafi ஒன்றுமில்லா பட்ஜெட்டிற்கு மிக அபாரம் என்ற முழக்கத்துடன் எப்படி இவர்களால் கூற முடிகின்றது என்று புரியவில்லை. அடித்தட்டு மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று புரியவில்லை.

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201822:14:13 IST Report Abuse

Tamilanபொருளாதார கவர்ச்சிகள் படித்தவர்களையும் அன்னியர்களை தவிர மற்றவர்களிடம் எடுபடவில்லை. தோல்வி பயம் தொற்றிக்கொண்டதால், மூன்றாண்டுகள் கிடப்பில் போட்ட ராமர் கோவில் பிரச்சினையை சமீப காலமாக முன்னிறுத்தியது. இப்போது பாமர மக்களை கவர, சென்றடைய, ஓட்டுக்காக அவர்களை சென்றடைய ஒரு கவர்ச்சிகரமான திட்டம். அரசியல் சட்ட வரலாற்றில், கவர்ச்சிகளை விட்டால் ஓட்டுக்களை பெற வேறு வழியில்லை என்றாகிவிட்டது. காலத்தின் கோலம்.

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201822:08:45 IST Report Abuse

Tamilanஇந்தியாவை மற்றநாடுகளைப்போல் முற்றிலும் மாற்றிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது. இன்று, விஞ்சான உலகில் இதுதான் அனைவரும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. செந்தமிழ், கலை, கச்சேரிகளை விட உலகில் உள்ள அனைவரும் ரசிக்கும் ஒன்று.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
01-பிப்-201820:41:01 IST Report Abuse

K.Sugavanamஎன்னதான் சொல்லுங்க,பட்ஜெட்டை விட ஜெட்டி லீ கைல இருக்குற பிரீஃப் கேசு சூப்பரா இருக்கு. .என்ன brand னு தெரியலை..அருமையா இருக்கு..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
01-பிப்-201823:11:15 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மோடிக்கு கிஃப்டா வந்தது....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-பிப்-201819:44:47 IST Report Abuse

மலரின் மகள்வழக்கம் போல உருப்படியாக சிறப்பாக பட்ஜெட் தயாரிக்க தெரியவில்லை என்று தெரிகிறது. கங்கை தூய்மை படுத்தும் திட்டமும், கக்கூஸ் திட்டமும் மட்டும் செயல்படும். அதிலும் கங்கை தூய்மை திட்டம் மட்டுமே பி ஜே பி யின் சிறப்பான திட்டமாக இருக்கும். மற்றவையெல்லாம் சரியான திசையில் திட்டமிட்டதாக தெரியவில்லை. டிஜிட்டல் போர்டு பள்ளிகளுக்கு என்பது தனியாருக்கு உதவுவதற்காக திட்டமாக தெரிகிது. டிஜிட்டல் போர்ட் விற்பனைக்கு மட்டும் தான் அவர்களின் கொள்ளை லாபத்திற்கு மட்டும் தான் உதவும். கரும்பலகையை மேம்படுத்தி ஆய்வகத்தை மேம்படுத்தலாம். விளையாட்டு மைதானங்களை சிறப்பிக்கலாம். டிஜிட்டல் போர்டிற்கு தொய்வில்லாமல் பள்ளி நடப்பதற்கு மின்சாரம் தேவை. பராமரிப்பு தேவை. வெட்டியாக தெரிகிறது. விவசாயக்கடனுக்கு 11 லட்சம் கோடி அதற்க்கு அரசு நான்கு சதவீத வட்டி மானியம் தரும் என்பதால் வங்கிகளுக்கும் மேலாளர்களுக்கும் லாபம். தங்க நகை வைத்து நிலமே இல்லாதவனும் குறைந்த வட்டியில் வாங்க போகிறார்கள். மற்றபடி விவசாயத்திற்கு நேரடியாக சென்றடைய போவதில்லை. பழைய அனுபவம் அப்படித்தான். உர சாலைகள், தானிய கிடங்குகளை மேம்படுத்தி இருக்கலாம். அதற்கு ஏறும் 25 ஆயிரம் கோடி தருகிறார்கள். விவசாய கடவுனுக்கு தரும் வட்டி மானியத்தை பயன் படுத்தி விவசாயத்திற்கு தேவையான பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய ஊக்கு விக்கும் திட்டத்தை கொணர்ந்திருக்கலாம். தனியார் துறை ஆசிரியர்களுக்கும் அரசே ஊதியம் கொடுத்திருக்கலாம். வெறும் ஏட்டளவிலேயே பேசி கொண்டிருக்கிறார்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக. மொத்தத்தில் ஒய்யார கொண்டையாக கூட இல்லை. வெட்டி பேச்சுக்கு மட்டும் தான் இடம் இருக்கும் போல.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
01-பிப்-201819:22:47 IST Report Abuse

Karuthukirukkanமக்களுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்ய நினைக்கிறோம் ... தமிழகத்தில் 2006 இல் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று எல்லா மருத்துவமனையிலும் இருக்கிறது .. எல்லா கிராமத்துக்கும் மின்சாரம் கொடுப்போம் .. கருணாநிதி இதை செய்து 20 வருடம் ஆச்சு .. நாடு முழுக்க உழவர் சந்தை அமைப்போம் .. இதையும் தமிழ்நாட்டுல செஞ்சு 20 வருஷம் ஆச்சு .. 3 மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை .. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி இருக்கு .. ஆனா திராவிட கட்சிகள் ஒழியனும் டாவ்வ் .. வளர்ச்சி இல்ல டாவ்வ் .. அருமை அருமை .. இப்போ தான் அங்கே நினைக்கவே செய்யுறாங்க .. இங்க திராவிடம் செஞ்சு முடிச்சிருச்சு ..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
01-பிப்-201823:12:31 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்கருணாநிதியை மோடி சந்திச்சப்போ இதை பத்தி பேசினாங்களோ?...

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement