| அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!| Dinamalar

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தலைப்பு என்னவோ உண்மை தான். ஆனால், அதை எல்லாம் தாண்டி அசாதாரணமானது, தி.மு.க., - பா.ம.க., உறவு. "துரோகம்... துரோகம்... பச்சைத் துரோகம்' என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய், இன்று, "மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை தமிழக முதல்வராக வருவார் கருணாநிதி' என்கிறது. இரு தரப்பு விமர்சனங்கள் ஏராளம். அவற்றில், நினைவில் நின்றவை மட்டும் இங்கே.


* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். - ராமதாஸ், 25.3.2009


* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், "மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்' என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, "இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை' என்கிறார். - ராமதாஸ், 11.4.2009


* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். - கருணாநிதி, 16.4.2009


* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. - அன்புமணி, 22.4.2009


* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். - ராமதாஸ், 27.4.2009


* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். - ராமதாஸ், 3.5.2009


* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். - ஸ்டாலின், 7.5.2009


* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். - ராமதாஸ், 9.1.2010


* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. - ராமதாஸ், 9.1.2010


* தி.மு.க., - அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். - ஸ்டாலின், 19.1.2010


* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். - ராமதாஸ், 27.2.2010


* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். - ராமதாஸ், கடிதம்


* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். - தி.மு.க., தீர்மானம், 30.5.2010


* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. - ராமதாஸ், 26.8.2010


* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். - கருணாநிதி, 5.9.2010


* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். - ராமதாஸ், 8.1.2011


* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. - கருணாநிதி, 30.1.2011


* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. - ராமதாஸ், 30.1.2011


* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. - கருணாநிதி, 1.2.2011


* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், "எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்றார். - கருணாநிதி, 3.2.2011


* தி.மு.க., - பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். - ராமதாஸ், 17.2.2011


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (78)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balu natarajan - Bangalore,இந்தியா
21-மார்-201116:46:09 IST Report Abuse
balu natarajan அம்மா வந்து ஆப்பு வெச்சா தான் தமிழ்நாடு தப்பிக்கும் .. இல்லை என்றால் தமிழ் நாட்டை ஏப்பம் போட்டுவிடுவார் தன் மன தமிழ் தலைவர்
Rate this:
Share this comment
Cancel
rajasekar - Kovai,இந்தியா
04-மார்-201116:03:20 IST Report Abuse
rajasekar பாவி பசங்க 17,6௦,௦௦,௦௦,௦௦,000 கோடி ரூபாய் சொல்லிருந்தா நா நிச்சயமா தி.மு.க சண்டை போட்டு இருக்க மாட்டேன் - - - ராமதாஸ் வருத்தாம்.........
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Jubail,சவுதி அரேபியா
03-மார்-201122:03:44 IST Report Abuse
Nallavan Nallavan அரசியல் செய்திகளுக்கு கருத்துக் கொத்தாக எழுதுபவர்கள் சமூகச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். வங்கியில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத முன்னாள் எம்பி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல் எத்தனை எத்தனை அரசியல் வியாதிகள் கடன் vaangi piragu emaatriyullanar.
Rate this:
Share this comment
Cancel
A.Subramani kandan - chennai,இந்தியா
02-மார்-201114:48:45 IST Report Abuse
A.Subramani kandan அசிங்கங்களின் கூடாரமாகி விட்டது அரசியல். வெற்றி என்கிற பெயரில் "அசிங்கத்தை" மட்டும் இந்திய அரசியலில் பதிவு செய்கிறார்கள்,வீணாய் போன அரசியல்வாதிகள்... இப்போது ,அரசியல் புரட்சி நாட்டிற்குத் தேவைப்படுகிறது..
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
04-மார்-201106:40:26 IST Report Abuse
 nicolethomsonமனிதர்களிடத்தில் உண்மை என்பது எள்ளளவும் இல்லை என்பதை உணர்த்த இந்த இரு கயவர்கள் போதுமே....
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
04-மார்-201106:41:42 IST Report Abuse
 nicolethomsonபக்கா திருடர்கள் - கதை திரைக்கதை வசனம், இயக்கி நடிப்பவர்கள் கருணாநிதி,அன்புமணி தந்தை....
Rate this:
Share this comment
Cancel
pandiyarajan kpsspandian - Sivakasi,இந்தியா
02-மார்-201111:03:20 IST Report Abuse
pandiyarajan kpsspandian போன தடவ எந்த பட்டன அமுக்குனாலும் D.M.K ஒட்டு விழும், இப்ப பாமக வுக்கு விழுமோ.? தேர்தல் கமிசன் கவனிக்கவும்..
Rate this:
Share this comment
Cancel
Kris Kris Kannan - Karur,இந்தியா
02-மார்-201105:19:01 IST Report Abuse
Kris Kris Kannan விடுதலை புலிகளுக்கு நேரடியாக அதரவு, கடும் சிறைவாசம் - இது வைகோ அவர்களின் சிறப்பு. இவரோடு ஜெயலலிதா கூட்டு வைக்கவில்லையா. ஊழலை ஒழிப்பேன் என்று சபதம் எடுத்துள்ள விஜயகாந்த் அவர்கள் ஊழலின் முன்னோடி ஜெயலலிதா உடன் கூட்டணி வைக்கவில்லையா. ஏன் ராமதாசுடன் திரைமறைவாக பேச்சு வார்த்தை நடக்கவில்லையா ? இதல்லாம் பார்க்கும்போது " யாருக்கும் வெட்கமில்லை"
Rate this:
Share this comment
Cancel
பரமந்த் - Delhi,இந்தியா
01-மார்-201123:32:06 IST Report Abuse
பரமந்த் ராமதாஸ் ஐயாவுக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது....அவருக்கு தேவை அவருடைய மகன் அன்புமணியை கொல்லைப்புறமாக பர்லிமெண்டுக்கு அனுப்பி சோனியாவின் காலை பிடித்து எப்படியாவது மீண்டும் மந்திரி பதவி வாங்கி மீண்டும் கஜானாவை நிரப்ப வேண்டும்....வன்னியர்களை அவர் வீட்டு வேலைகாரர்கள் என்று நினைக்கிறார்...இனி நடக்காது.....போனதடவை வைத்தார்களே ஆப்பு...மீண்டும் அடுத்த ஆப்புக்கு காத்திருக்கிறார்....2 G பற்றி வாயே திறக்காத ஒரே தமிழக தலைவர் ராமதாஸ் தான்...ராசாவுக்கு அடுத்த ஆப்பு அன்புமணிக்கும் பாயலாம்....
Rate this:
Share this comment
Cancel
Serankumar Seran - Salem,இந்தியா
01-மார்-201119:02:02 IST Report Abuse
Serankumar Seran இவர்கள்.......... எப்படி வேண்டுமானாலும்.......... பேசுவார்கள்....................
Rate this:
Share this comment
Cancel
Om Sara - Tirupur,இந்தியா
01-மார்-201116:07:53 IST Report Abuse
Om Sara நான் எல்லாரிடமும் ஒன்று கேட்கிறேன், தேர்தலில் நிற்பவர்களுக்கு ஒரு சட்டம் நிறைவேற்ற வேண்டும். அது என்னவென்றால் தேர்தலில் நிற்பவர்க்கள் தன்னுடை பதவிகாலத்தில் முழுவதுமாக பொது வாழ்வில் மட்டுமே ஈடுபடவேண்ம், எந்த ஒரு வியாபாரத்திலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபாடு இருக்க கூடாது. அப்படி இருந்தால் அவர்கள் பொது வாழ்வில் எடுபட அருகதையற்றவர்கள் என்று தீர்மானித்து அவரை பதவி நீக்கம் செய்து தண்டனையும் நிறைவேற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
senthil kumaran - madurai,இந்தியா
01-மார்-201114:01:03 IST Report Abuse
senthil kumaran ராமதாசு , தமிழின துரோகி கருணாநிதியின் முகத்திரையை கிழித்த தினமலர் நிருபர் மற்றும் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதே நேரத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான கட்டண திட்டத்தில் யார் யார் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதையும் தைரியம் இருந்தால் எழுதுங்கள்.திட்டத்தை ஏன் செயல்படுத்த முடியவில்லை ? மைனாரிட்டிகளின் வோட்டு போயிரும் என்பதாலா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.