| தென் மாவட்ட ஜாதி கட்சிகளை வளைக்கும் அ.தி.மு.க.,: தி.மு.க., வும் பதிலடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்ட ஜாதி கட்சிகளை வளைக்கும் அ.தி.மு.க.,: தி.மு.க., வும் பதிலடி

Updated : பிப் 28, 2011 | Added : பிப் 26, 2011 | கருத்துகள் (36)
Advertisement

தென் மாவட்ட தொகுதிகளை அள்ளும் வகையில், எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், ஜாதி கட்சிகளை அ.தி.மு.க., வளைத்து போட்டு வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க.,வும் களம் இறங்கி உள்ளது, ஜாதி கட்சி தலைவர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தென் மாவட்டத்தில் உள்ள, 88 தொகுதிகளில், 70 சதவீத தொகுதிகளை தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அள்ளி வருவார் என, தி.மு.க., மேலிடம் கருதியது. ஆனால், அழகிரியின் தேர்தல் வியூகத்தை முறியடிக்கும் வகையில் தென் மாவட்ட ஜாதிக் கட்சிகளை அ.தி.மு.க., வளைத்து போட்டுள்ளது. குறிப்பாக, மாயத்தேவரின் பார்வர்டு பிளாக், சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிகளுக்கு, அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு வழங்கப்பட்டு விட்டது. நாட்டாண்மை நடிகர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அ.தி.மு.க.,வின் ஜாதி கட்சிகளை இணைக்கும் முயற்சிக்கு, தற்போது தி.மு.க., தடை போடத் துவங்கி உள்ளது. குறிப்பாக தென் மாவட்டத்தில் கிரீயும், பாம்புமாக இருந்த தேவர், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, ஒரே கூட்டணியில் இருப்பதை விரும்பாத தி.மு.க., கிருஷ்ணசாமிக்கு மீண்டும் தூது விட்டுள்ளது. தென் மாவட்டத்தில் பெரும்பான்மை கொண்ட இரண்டு ஜாதி கட்சிகளுடன் நாடார் ஓட்டுக்களை கவர, நாட்டாண்மை நடிகரின் கட்சியை வளைத்து போட அ.தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது தி.மு.க.,வும், நாட்டாண்மை நடிகரின், நடிகை மனைவி மூலமாக பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளது.


மீதமுள்ள யாதவர் ஓட்டுக்களை பெரும் வகையில், யாதவர் மகாசபைத் தலைவர் தேவநாதனை இழுப்பதில் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. தி.மு.க., சார்பில் அமைச்சர் பெரிய கருப்பனும், அ.தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன், கோகுல இந்திரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், "பா' ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், "யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு' என, கூறி வருகிறார். "தி.மு.க.,,வுக்கு ஆதரவு வேண்டும் என்றால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் எனில் தேர்தல் அறிக்கையில், யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவிக்க வேண்டும்' என, தெரிவித்து வருகிறார். அத்துடன் தென் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஜான்பாண்டியனை இழுத்து போடவும் இரு கட்சிகளும் தூது அனுப்பி உள்ளன. ஆனால், அவர், மதுரையில் நடக்கும், கட்சி மாநாட்டுக்கு பின்னரே கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை துவக்குவதாக அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் அதிகப்படியான கூட்டத்தை காண்பிப்பதன் மூலம், திராவிட கட்சிகளிடம் தொகுதியை அதிகரித்து வாங்க முடியும் என்பது தான் அவரின் திட்டம். முஸ்லிம் ஓட்டுக்களை கவர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாகி விட்டது.


தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி, அ.தி.மு.க., அணியில் சேர்ந்து விட்ட நிலையில், இந்திய தவ்ஹித் ஜமாத்தை கூட்டணியில் சேர்ப்பதில் இரண்டு கட்சிகளிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் பாக்கரிடம் இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென் மண்டல ஜாதி கட்சிகளை அ.தி.மு.க., வளைத்து போட்டுள்ள நிலையில், கொங்கு மண்டல கட்சிகளை தி.மு.க., வளைத்து போடத் துவங்கி விட்டது. கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமியிடம், அ.தி.மு.க., சார்பில் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு ஐந்து தொகுதிகள் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலைக்கு வந்த நிலையில், தி.மு.க., அவரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தை வளைத்துள்ளது. இது, அ.தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டம், கொங்கு மண்டல ஜாதிக் கட்சிகளை வளைத்து போடுவதில் தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜாதி ஓட்டுகளை நம்பி களம் இறங்கி உள்ள அரசியல் கட்சிகளால், ஜாதி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagaraj Komarasamy - Perundurai,இந்தியா
03-மார்-201122:56:13 IST Report Abuse
Nagaraj Komarasamy கொ.மு.க எப்படி கொங்கு மக்களிடம் ஓட்டு கேட்பார்கள்? அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை தி மு க நிறைவேற்றி விட்டது என்றா? கள் இறக்க உரிமம் தி மு க அளித்தது என்றா? பால் கொள்முதல் விலையை கேட்டதும் உயர்த்தி பெறப்பட்டது என்று சொல்லியா? கொங்கு பகுதி போன 10 வருடத்தில் வளம் பெற்றது என்றா? ராசாவும் ராஜாவும்(erode) ரொம்ப நல்லவங்க என்று சொல்லியா? spectrum, கம்மேன்வேல்த், S-பேண்ட் உழல்கள் நடக்கவில்லை என்றா? தி மு க - காங்கிரஸ் அணி சேர்ந்து ஈழத்தை நாசமாக்கவில்லை என்றா? கொங்கு மக்கள் முட்டாள்கள் என்று கோ மு க தலைமை நினைக்கிறதா? கொங்கு மக்கள் அறிவாளிகள். தி மு க அணிக்கு ஓட்டு போட மாட்டார்கள். கொ மு க தயவு செய்து தி மு கவுடன் உறவு வைக்க கூடாது. இதுவே கொங்கு மக்களின் விருப்பம். கொ மு க தலைமை கொங்கு மக்களின் என்னத்துக்கு மாறாக செயல்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Raj gokul - Gobichettipalayam,இந்தியா
01-மார்-201115:45:43 IST Report Abuse
Raj gokul கோ.மு. க. அண்ணா.தி.மு. க,விடம் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
28-பிப்-201120:07:25 IST Report Abuse
RAMASWAMY S IN TAMIL NADU THE SO CALLED FORWARD COMMUNITY PEOPLE ARE SEPARATED. NO EDUCATION , NO POWER IN POLITICS NO BODY CARES FOR THE POOR FORWARD COMMUNITY PEOPLE. POLITICAL LEADERS JUST CARE FOR THE FORWARD COMMUNITY PEOPLES WELFARE. THEIR VOTE IS ALSO VERY IMPORTANT
Rate this:
Share this comment
Cancel
- tirunelveli,இந்தியா
28-பிப்-201100:28:29 IST Report Abuse
 எந்த கட்சி விஸ்வகர்மா சமுதாயத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து தர முன்வருகிறதோ அவர்களுக்கு தான் என் சமுதய வோட்டு.
Rate this:
Share this comment
Cancel
Gurusamy Rgurusamy - coimbatore,இந்தியா
27-பிப்-201123:20:38 IST Report Abuse
Gurusamy Rgurusamy ஜாதி மக்களே உஸார்
Rate this:
Share this comment
Cancel
Moorthy - Chennai,இந்தியா
27-பிப்-201118:54:51 IST Report Abuse
Moorthy Great Politics King is Dr.Kalaignar - Father of Tamil His calculation never went wrong. He knows what to do. He is the one and only man who is living for Tamil and us (tamiliens). Please don't forgot!. Jayalalitha and her party will be vanished from Tamil nadu after this election. She can't do anything with small parties allience. People is Tamil side. That's our side. WE WILL WIN FOR SURE. CHALLANGING HERE TO EVERYONE IF YOU CAN STOP OUR DMK'S SUCCESS.
Rate this:
Share this comment
Cancel
Mahi - Yaounde,கேமரூன்
27-பிப்-201116:45:44 IST Report Abuse
Mahi என்னடா பண்றாங்க ஒன்னும் புரியல , ஒரு நாளைக்கு சீனா காரன், பாகிஸ்தான் காரன் சேர்ந்து இந்தியாவ தாக்க போறானுக, அப்போ ஸ்ரீலங்கா காரன் அவனோட சுயநலத்துக்காக சப்போர்ட் பண்ணுவா, அப்புறம் சீனா காரன் சௌத்ல வந்து அட்டாக் பண்ணுவா , அப்போ தெரியும்டா உங்க ஜாதி என்ன பண்ணும்னு, நாடே நாசமா போய்கிட்டு இருக்கு, சீனா காரன், பாகிஸ்தான் காரன், ஸ்ரீலங்கா காரன் சேர்ந்து நம்மல கொல்றதுக்கு முன்னாடி இந்த அரசியல் சாக்கடைய மறந்துட்டு சந்தோசமா வாழ கத்துகாங்க அன்பு சகோதர்களே... மஹி, கமேரூண் , சென்ட்ரல் ஆபிரிக்கா
Rate this:
Share this comment
Indian Patriots - Bangalore,இந்தியா
28-பிப்-201116:36:05 IST Report Abuse
Indian Patriotsஹலோ மகி, சீனாகாரனும் சிங்களனும் நம் தமிழ்நாட்டை பிடித்தாலும், காங்கிரஸ் ,தி.மு.க.,அ.தி.மு.க.,போன்ற கட்சிகள் எட்டப்பன் போல் நம்மை காட்டிகொடுத்து , இருக்கும் ஆட்சியை தக்கவைக்கதான் நினைப்பார்கள். உண்மையைசொன்னால், நாட்டுபற்று நம் சராசரி இந்தியர்களிடம் மிகவும் குறைவு.தன் கட்சி தலைவனுக்காக தீ குளிப்பான்.ஆனால் நாட்டுக்காக எதையும் செய்யமாட்டான் சராசரி இந்தியன்.(சராசரி இந்தியன் என்று சொன்னது உண்மையான நாட்டுபற்று இல்லாதவனை)....
Rate this:
Share this comment
Cancel
Saravana Kumar - Coimbatore,இந்தோனேசியா
27-பிப்-201116:27:33 IST Report Abuse
Saravana Kumar கொங்கு நாடு முன்னேற்ற கழகம் ..... அதிமுக உடன் கூட்டணி வைத்தால் நல்லது ... திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க முடியும் ... கொமுக வெற்றி பெற அதிமுக உடன் கூட்டணி வைக்கவும் ....
Rate this:
Share this comment
Cancel
kunjumani - Chennai ,இந்தியா
27-பிப்-201113:04:39 IST Report Abuse
kunjumani கொ.மு.க வை மட்டும் யாரும் வளைத்து போடக்கூடாது அதனால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு மிகப்பெரும் கேடு காத்திருக்கிறது
Rate this:
Share this comment
elangovan - ஈரோடு,இந்தியா
28-பிப்-201114:31:04 IST Report Abuse
elangovanகொமுக சாயக்கழிவு பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது சுற்று புற சூழலுக்கு நல்லதே ஆகும் ....
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
27-பிப்-201112:51:19 IST Report Abuse
christ தமிழகம் நல்ல இருக்க வேண்டும் என்றல் திமுக ,அதிமுக என்ற இருன்டு கட்சிகள்ளுக்கும் ஒட்டு போட கூடாது !!! இரண்டும் ஊழல் கட்சிகள் !!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை