கிருஷ்ணதேவராயர் பற்றிய சிறப்பு கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணதேவராயர் பற்றிய சிறப்பு கருத்தரங்கு

Added : பிப் 27, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : இலக்கியம், கலாசாரத்தில் கிருஷ்ணதேவராயர் ஆற்றிய பங்கு குறித்து, இரண்டு நாள் நடந்த பன்னாட்டு கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று சென்னையில் நடந்தது.சென்னை பல்கலையின், தெலுங்கு துறை சார்பில், "இலக்கியம், கலாசாரம் மற்றும் சமூகத்தில் கிருஷ்ண தேவராயரின்பங்கு' என்ற தலைப்பில், இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.கடந்த 16ம் நூற்றாண்டில் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளை, மன்னன் கிருஷ்ண தேவராயர் ஆண்டார்.அவர் ஆட்சி புரிந்து, 500 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் நடந்த இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கின் நிறைவு விழா, சென்னையில் நடந்தது.கருத்தரங்கில், பன்னாட்டு அளவில் திபெத், தென் கொரியா ஆகிய நாடுகளிலுள்ள பல்கலை பேராசிரியர்கள், உள்நாட்டில் பல பல்கலை பேராசிரியர்கள், 40 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X