பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் இளைஞர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் இளைஞர்

Added : மார் 07, 2011 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் இளைஞர்

விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்த சிவகுமாருக்கும், பிலிப்பைன்ஸ் மரியா மெர்சிடஸ்க்கும் துபாயில் கனிந்த காதல், விருதுநகரில் திருமணத்தில் முடிந்தது.


விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி, தாமரை தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சிவகுமார்(29). பி.எஸ்சி., விஷûவல் கம்யூனிகேஷன் படித்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், துபாயில் எலக்ட்ரிக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். இதே கடையில் பிலிப்பைன்சின் மணிலா நகரைச் சேர்ந்த மரியா மெர்சிடஸ் என்பவரும் வேலை செய்தார். அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது சிவகுமார், துபாயில் வேறு நிறுவனத்தில் முதன்மை கட்டுப்பாட்டாளராகவும், மரியா மெர்சிடஸ், அங்குள்ள தனியார் விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முதுநிலை அலுவலராகவும் பணி புரிகின்றனர்.


சமீபத்தில் அங்கு பதிவு திருமணம் செய்த இருவரும், இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். பெற்றோரின் சம்மதம் கிடைத்தது. இவர்களது திருமணம், விருதுநகரில் நேற்று நடந்தது. மஞ்சள் நிறத்தை இயற்கையாகவே பூசிக் கொண்ட, மரியா மெர்சிடஸ் கூறியதாவது:இந்தியா மீது எனக்கு நல்ல எண்ணம் உண்டு. தமிழகத்தை பற்றி சிவகுமாரை காதலித்த பின், அதிகம் தெரிந்து கொண்டேன். நட்போடு பழகிய போது, இவரது தமிழர் குணம் என்னை கவர்ந்தது. பெற்றோர், என் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர்.


ஆனால், இதய நோயாளிகளான அவர்கள், திருமணத்திற்கு வரவில்லை. இருப்பினும், உறவினர்களை அனுப்பி வைத்தனர். இரு நாட்டிற்கும், பண்டைய காலத்திலேயே நல்ல உறவு இருந்தது என்பதை கேள்விபட்டேன். இது போல எங்கள் உறவும் இறுதி மூச்சு வரை இருக்கும்.இவ்வாறு மரியா மெர்சிடஸ் கூறினார்.சிவகுமாரிடம் கேட்ட போது, புன்னகையை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Sandal - singapore,சிங்கப்பூர்
08-மார்-201119:44:18 IST Report Abuse
Muthu Sandal வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
08-மார்-201101:01:31 IST Report Abuse
appu நீ நல்ல பிலிப்பைனி பெண்ணாக இருப்பாய் என்று நினைக்கிறேன்..இந்தியர்களை அதிலும் குறிப்பாக தமிழர்களை விரும்பாதவர்கள் என்று நண்பர்கள் மூலம் கேள்வி பட்டதை பொய்யாகிய இந்த நிகழ்ச்சி காதலின் மேல் உள்ள பற்றை நன்றாக காண்பித்திருக்கிறது.....என்றும் பிரியாமல் நன்று வாழ அப்புவின் வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை