வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்| Dinamalar

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

சென்னை: வடபழனி முருகன் கோவில் கொடி மரத்தில், மயில் வடிவத்தில் வந்து அமர்ந்த தேனீக்களை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். வடபழனி கோவிலில் நேற்று மதியம் உச்சி காலம் முடிந்து, கதவுகள் மூடப்பட்டன. அப்போது, கோவிலில் மூலவருக்கு எதிரே அமைந்துள்ள கொடி மரத்தை தேனீக்கள் பல சுற்றி வலம் வந்தன. மாலை 3 மணியளவில் கோவிலுக்குள் சென்ற ஊழியர்கள், கொடி மரத்தில் மயில் போன்ற வடிவத்தில் தேனீக்கள் அமர்ந்து இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம் மயில் தோற்றம் அமைந்திருந்தது. மயில் தோற்றத்தில் தேனீக்கள் கூடு கட்டத் தயாரான தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்குள் சென்று மயில் வடிவத்தில் உள்ள தேனீக்களை கண்டு ரசித்தனர். அப்போது பரவசமடைந்த பக்தர்கள் சிலர், "அரோகரா' கோஷமிட்டு முருகனையும், தேனீக்களையும் வணங்கிச் சென்றனர். வடபழனி முருகன் கோவிலுக்குள் தேன்கூடு எங்கும் இல்லாத நிலையில், நேற்று திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள், மயில் தோற்றத்தில் வந்து அமர்ந்ததை கண்டு கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இன்னும் ஆச்சரியத்தில் இருந்து விலகாமல் உள்ளனர்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Jubail,சவுதி அரேபியா
09-மார்-201119:18:12 IST Report Abuse
Nallavan Nallavan நம்புபவர்கள் நம்பட்டும்! நம்பாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு போகலாமே? பகுத்தறிவுப் பகலவன்கள் போல கருத்து எழுதவேண்டாம். அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகள் உண்டு!
Rate this:
Share this comment
Cancel
Arulkumar Subramaniam - Bangalore,இந்தியா
09-மார்-201113:53:40 IST Report Abuse
Arulkumar Subramaniam முருகனுக்கு அரோகரா!!
Rate this:
Share this comment
Cancel
ksk - boston,ஆப்கானிஸ்தான்
09-மார்-201112:55:05 IST Report Abuse
ksk அந்த முருகனே நேரில் வந்து சொன்னாலும் மூட நம்பிக்கையின் அளவு நம் மக்களிடமிருந்து சிறிதும் குறையாது. சித்து வேலை லிங்கம் கக்குதல் ப்ளூ பிலிம் சாமியார் எல்லாம் நம் நாட்டின் கலாசாரம். சந்திரனுக்கு ராக்கெட் ஒரு பக்கம் நம்ம ஆளு விடுறான், இன்னொரு பக்கம் சந்திரனை பாம்பு விழுங்கி விட்டதுன்னு கிரகப் பெயர்ச்சி அப்படி இப்படின்னு சொல்லி ஒரு கூட்டம் போகுது. இதுல என்ன காமெடின்னா பாதி டாக்டருங்க பெரிய படத்தோட லிங்கம் கக்கும் சாமியாரோடது தான். அங்க போயி வைத்தியம் பாக்கவே பயமா இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
sri gowri - CTY,கேமரூன்
09-மார்-201112:29:22 IST Report Abuse
sri gowri ஒம் முருகா.. அரோகரா ............... வேல் வேல் வெற்றிவேல்.. வேலுண்டு விணை இல்லை மயிலுண்டு பயமில்லை
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
09-மார்-201112:16:13 IST Report Abuse
arabuthamilan நம்ம நாட்டு இந்து பக்தர்களுக்கு வேற வேலையே கிடையாதா? கையில எடுத்து மயிலுக்கு ஒரு முத்தம் கொடுப்பது தானே. எப்போதான் திருந்தப்போகுதோ ? உருளை கிழங்கிற்கு கால் முளைத்தாலும், பூசணிக்காய்க்கு கை போல உருவம் வந்திட்டாலோ மாரியாத்தா பொறந்திட்டா என்று பூசை வச்சி பொங்கல் வைக்க ஒரு கூட்டம் புறப்பட்டு விடும். அது தான் நவீன தமிழ்நாடு.
Rate this:
Share this comment
Cancel
sathya / ilangai - colombo,இலங்கை
09-மார்-201111:36:23 IST Report Abuse
sathya / ilangai இந்த ஆட்சி முடிவுக்கு வந்தாச்சு அப்பிடின்னு முருகர் ஜாடையா சொல்றாரு...
Rate this:
Share this comment
Cancel
Suresh Babu - Bangalore,இந்தியா
09-மார்-201111:30:09 IST Report Abuse
Suresh Babu என்னத்த சொல்றது. இன்னும் இவங்க திருந்தவே இல்லியா
Rate this:
Share this comment
Cancel
Tamizpithan - Chennai,இந்தியா
09-மார்-201111:28:42 IST Report Abuse
Tamizpithan ஓம் முருகா ஓம் சரவணா பவ
Rate this:
Share this comment
Cancel
veeratamilan - chennai,இந்தியா
09-மார்-201110:24:52 IST Report Abuse
veeratamilan வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தேனீக்களுக்கு இறைவன் மேல் இருக்கும் பக்தி மனிதர்களுக்கும் வர வேண்டும். வடபழனி முருகன் மகிமை உலகெங்கும் பரவ வேண்டும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. முருகனை சரணடைந்தோருக்கு என்றும் வெற்றியே, என்றும் நன்மையே, என்றும் மகிழ்ச்சியே. ருசித்து பார் தெரியும் முருகனின் சுவை.... இப்படிக்கு ருசித்தவன்
Rate this:
Share this comment
Cancel
B.Madhavan, N.G.O. WING, B.J.P. - chennai ,இந்தியா
09-மார்-201108:49:33 IST Report Abuse
B.Madhavan,   N.G.O. WING, B.J.P. முருகா! முத்து குமரா!! கந்தா!!! இந்தக் கொண்டுங்கோல் ஆட்சியிலிருந்து எங்களை காப்பாற்றி வாழ வைக்க வந்து விட்டாயா மயில் வடிவத்தில். என்னே உந்தன் கருனையப்பா!!! ப. மாதவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.