தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வேண்டும் : மள்ளர் இலக்கிய கழகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வேண்டும் : மள்ளர் இலக்கிய கழகம்

Added : ஜூன் 17, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தென்காசி : தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கு 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வேண்டும் என மள்ளர் இலக்கிய கழக நிறுவன தலைவர் சுப.அண்ணாலை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது: சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் மரபினரான மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் உண்மையான வரலாற்றை தமிழக அரசு கோயம்புத்தூரில் நடத்தும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் வெளியிட வேண்டும். குடும்பன், காலடி, பண்ணாடி என பல்வேறு உட்பிரிவுகளில் அழைக்கும் அனைத்து பிரிவினரையும் ஒன்றாக இணைத்து ஒரு பெயரில் தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்திட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அனைத்து சமூக மக்களுக்கும் நலவாரியம் அமைத்திருப்பது போன்று தேவேந்திர குல வேளாளர் நல வாரியம் அமைக்க அரசு உத்தரவிட வேண்டும். பட்டியல் இனத்தில் கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு தனி உள் இட ஒதுக்கீடு வேண்டும். இதற்காக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சமுதாய மாணவ, மாணவிகள் கல்வி, வேலைவாய்ப்பு பெற வழிசெய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழக அரசு செம்மொழி மாநாட்டிற்கு முன்பு அறிவிக்க வேண்டும். தவறினால் சமுதாய மக்களை திரட்டி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும். வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படும்.


தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் மோதிக் கொண்டதற்கு அரசியல் கட்சிகளின் தூண்டுதல் தான் காரணம். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற அரசியல் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு மள்ளர் இலக்கிய கழக தலைவர் சுப.அண்ணாமலை கூறினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர் நல்லசாமி, பொருளாளர் சோலை பழனிவேல்ராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தினமாணிக்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் முருகையாபாண்டியன், மாவட்ட செயலாளர் தண்டாயுதபாணி உடனிருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X