bride stop their marriage | தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் முரண்டு : அத்தை மகளை கரம் பிடித்தார் மணமகன்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் முரண்டு : அத்தை மகளை கரம் பிடித்தார் மணமகன்

Updated : ஜூன் 19, 2010 | Added : ஜூன் 18, 2010 | கருத்துகள் (60)
Advertisement
 bride,  marriage,தாலி,  மணப்பெண்,மணமகன்

தியாகதுருகம் : தாலிகட்டும் நேரத்தில் மணமகனை பிடிக்கவில்லை என்று, சினிமா பாணியில் தாலியை தட்டிவிட்டு நடையை கட்டினார் மணப்பெண். அதே மணமேடையில் அத்தை மகளை மணந்தார் மணமகன். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த சின்னதுரை- அன்னலட்சுமி தம்பதி மகள் சுதா(22). இவரது தாய் மாமன், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த அழகுவேல்- பாஞ்சாலை மகன் உத்திராபதி(27). இவர்களுக்கு தியாகதுருகம் ஸ்டார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமேடையில் மணமகன் உத்திராபதி, மணமகள் சுதா வந்து அமர்ந்தனர். சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேறின. முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்த காலை 7 மணிக்கு சுதா கழுத்தில் உத்திராபதி தாலிகட்டும் வேளையில், சினிமாவில் வரும் காட்சியைப்போல், தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார் மணப்பெண் சுதா. "எனக்கு மாமன் உத்திராபதியை பிடிக்கவில்லை; இன்னொரு மாமன் மகன் பாக்யராஜை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறிவிட்டு மணமகள் அறைக்கு சென்றுவிட்டார்.கலகலப்பாக இருந்த திருமண மண்டபத்தில் நிசப்தம் நிலவியது. மகளிடம் பெற்றோர் கெஞ்சினர். மாமன் மகன் பாக்யராஜை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுதா உறுதியாக கூறிவிட்டார். அதை பார்த்த உத்திராபதியின் உறவினர்கள், வேறொரு பெண்ணுக்கு அதே மேடையில் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.


மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த உத்திராபதியின் அத்தை தனம்- தண்டபாணி மகள் நிர்மலா (21) என்பவரை அவரின் சம்மதம் பெற்று திருமணம் செய்துவைக்க அழைத்து வந்தனர். காலை 9.15 மணிக்கு நிர்மலாவின் கழுத்தில் உத்திராபதி தாலிகட்டினார். கூடியிருந்த உறவினர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அதுவரை மணமகள் அறையில் இருந்த சுதா அவரின் உறவினர்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.மணமகன் உத்திராபதி கூறுகையில்,"சுதா எனது அக்கா மகள் தான். தன்னை பிடிக்கவில்லை என்று திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்பே, என்னிடம் கூறியிருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது. உறவினர்கள் மத்தியில் எனது திருமணம் நின்று, நான் பரிதவித்த நேரத்தில் எனது வாழ்க்கை துணையாக வந்த நிர்மலாவை, வரதட்சணை எதுவும் பெறாமல் திருமணம் செய்து கொண்டேன். கடைசி வரை இவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்வேன்' என்றார் நெகிழ்ச்சியுடன்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அமுதன் - puducherry,இந்தியா
23-ஜூன்-201014:34:31 IST Report Abuse
 அமுதன் திருமன்ந்தட்ட்கு முன் பெண் சம்மதம் கேட்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
அருள் - Chennai,இந்தியா
22-ஜூன்-201010:56:11 IST Report Abuse
 அருள் Dear All, i could see, how many useless peoples are around to discuss about this useless matter. Around us lot things happening everyday. Pls think/discuss about some good issues instead of waste matter like this.This is sort of personal matter let them manage it.
Rate this:
Share this comment
Cancel
வெங்கட் - Muscat,ஓமன்
21-ஜூன்-201021:16:12 IST Report Abuse
 வெங்கட் சுதா என்னவோ குற்றம் புரிந்ததைப்போல் எல்லோரும் இங்கே சாடி இருக்கிறார்கள். சுதாவின் நிலையில் இருந்துதான் கொஞ்சம் யோசிப்போமே.. அவள் தன் பெற்றோரிடம் கூறி இருக்கக் கூடும். அவர்கள் கண்டித்திருக்கலாம். ஆகவே பழி வாங்க நினைத்திருக்கலாம். காதலின் ஆழத்தை அறிந்து முடிவு எடுத்து இருக்கலாம். சரி பாக்யராஜ் என்ன தவறானவர் போல நினைக்கிறீர்கள்? அவர் நல்ல விதமாக இருக்கக் கூடாதா என்ன? என் கருத்து - சுதா திட்ட வட்டமாக கூறி இருக்கலாம். அவளின் பெற்றோர் காலம் கடந்து அறிந்திருப்பின், திருமணத்தை நிறுத்தி இருக்கலாம். எவ்வளவு பணம் செலவாகி இருக்கும் இந்த சம்பவம் வரை எடுத்து நடத்த? எப்படியும் நடக்கும் என்ற குருட்டு நம்பிக்கை ஏன்? திரு ராஜா- குவைத் - மணப்பெண்ணை ஏசி இருக்கிறார். முகத்தில் மட்டுமா இருக்கிறது வாழ்க்கை? அப்துல் ரஹீம் அவர்களுக்கு - வருந்த வேண்டாம். திருமணமான பிறகு இப்படி செய்திருந்தால் நன்றாயிருக்காது அல்லவா? அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுங்கள். புது மணத்தம்பதிகளுக்கு நல் வாழ்த்துக்கள். பெற்றோர்களே..தயவு செய்து மனம் அறிந்து மணம் செய்யுங்கள். வெங்கட் ஓமன் நாட்டில் இருந்து.
Rate this:
Share this comment
Cancel
சரண்யா - tirupur,இந்தியா
21-ஜூன்-201014:28:17 IST Report Abuse
 சரண்யா சுதா தாலி கட்டும் வரை என்ன செய்து கொண்டு இருந்தாய் , முதலில் நீ அந்த பையனை வேண்டாம் என்று சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது , நான் கடுமையாய் உன்னை கண்டிகேறேன், நானும் ஒரு பெண்தான் ஆனால் நீ செய்தது தவறு உனக்கும் உன் குடும்பத்துக்கும் அறிவு இருகிறதா , உங்கள் சுய நலத்துக்காக இன்னுரு ஆணின் வாழ்கையில் விளைடுவாத , இனியாவது யோசித்து செயல்படு, இல்லையேல் சுதா உன் வாழ்கை காணல் நீர் போல் ஆகிவிடும் , உத்திராபதி இஸ் வெரி குட் பையன் , தேங்க்ஸ் நிர்மலா ஆல் தி பெஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201007:09:22 IST Report Abuse
 ஸ்டீபன் கார்த்திக் .c சுதா கண்ணு.........! நிச்சியத்துக்கு முன்பே உன் வீட்டில் உன் காதலை சொல்லி சம்மதம் கேட்டு இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201007:03:08 IST Report Abuse
 ஸ்டீபன் கார்த்திக்.c உமாவதி நிர்மலா தம்பதிக்கு திருமண நல்வாழ்த்துக்கள் ..........!
Rate this:
Share this comment
Cancel
நல்லதம்பி - oman,இந்தியா
19-ஜூன்-201023:36:01 IST Report Abuse
 நல்லதம்பி she is crazy or what before why not say parents.now he is how many getting shame pls ladies tell Ur parents.and new couple all the best in feature.
Rate this:
Share this comment
Cancel
பாலாஜி - tirupur,இந்தியா
19-ஜூன்-201023:34:16 IST Report Abuse
 பாலாஜி நிர்மலாவை பார்த்து பழைய மணப் பெண், பெண்ணாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆணை பெற்றவர்கள் மனதை கொஞ்சம் நினைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
karthick - aruppukottai,இந்தியா
19-ஜூன்-201022:11:58 IST Report Abuse
 karthick இதுபோன்று மணமகனை கேவலபடுத்தும் மணமகள் மற்றும் அவரது பெற்றோகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே மணமகன் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள் . சட்டத்தின் முன் யாவரும் சமம்....கலயாணத்துக்கு முன்னமே சொல்றதுக்கு என்ன...கண்டிப்பாக பெண்ணின் பெற்றோருக்கு இந்த விசயம் தெரிந்திருக்கும். வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிப்பதும் சரி, ஒரு பெண் ஒரு நிமிடம் இப்படி முரண்டு பிடிப்பதும் சரி ரெண்டும் ஒரே வேதனையே தருகிறது. தன்னுடைய சுயநலத்திற்க்காகவும், எப்படியாவது தான் நினைத்ததை சாதிக்க வேண்டி கடைசி முயற்சியாக இப்படி ஒரு நெஞ்சழுத்தமான முடிவை எடுத்திருக்கிறாள் இந்த பெண். என்னதான் ஆணாக இருந்தாலும் மாப்பிள்ளையாக இருந்தவர் சில மணி நேரம் துடித்துத்தான் போயிருப்பார். பெண் இனத்திற்க்கு களங்கமடையச் செய்தாள் ஒரு பெண், அதை துடைத்தாள் மற்றொரு பெண். மாப்பிள்ளை நடவடிக்கை சரி இல்லை என்று எழுந்திருந்தால், அவள்தான் புதுமை பெண், இவள் ஒரு புதைப் பெண்.....
Rate this:
Share this comment
Cancel
sheik தாவூத் - uae,இந்தியா
19-ஜூன்-201021:32:56 IST Report Abuse
 sheik தாவூத்  ரொம்ப கேவலம். பெற்றோருக்கு அவமானம். இந்த மாதிரி யாரும் ப்ளீஸ் பண்ண வேண்டாம். நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை