இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் : இரண்டாம் கட்ட ஆய்வு முடிவு| Dinamalar

தமிழ்நாடு

இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் : இரண்டாம் கட்ட ஆய்வு முடிவு

Added : ஏப் 14, 2011 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம் : தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்காக, ராமேஸ்வரம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிந்தது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்காக பாக். ஜலசந்தி கடல் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தால் கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம், கடல் பகுதியில் நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட பணி, இந்திய கடல் எல்லைப்பகுதியில் நடந்து வந்தது. மத்திய அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ரவீந்திரன் தலைமையில் 10 விஞ்ஞானிகள் உள்ளிட்ட குழுவினர் கடலுக்குள் நடத்திய ஆய்வுப்பணி நேற்று முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து கடலின் நிலத்தடி மட்டத்தில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மண் மாதிரிகள், கடல் நீர் உள்ளிட்ட பொருட்களுடன் படகில் நேற்று மாலை ராமேஸ்வரம் திரும்பியவர்கள் இவற்றை வேனில் ஏற்றிசென்றனர். இதை தொடர்ந்து மூன்றாவது கட்டமாகவும் கடலுக்குள் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அறிக்கைக்கு பின், கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
17-ஏப்-201106:15:33 IST Report Abuse
ஆரூர் ரங ஆயுதம் கொடுத்து தமிழினத்தை அழித்தாகி விட்டது! அது போதாதென்று இப்போது மின்சாரம் கொடுத்து, இங்கே விவசாயத்தைப் பாழ் பண்ணி பட்டினிச்சாவுகளைத் துவக்கப்போகிறார்களா ? காங்கிரஸ்,திமுக வுக்கு ஓட்டுப் போட்டால் இதுவும் நடக்கும்.இதற்கு மேலேயும் நடக்கும்! இத்தனையையும் பெற்றுக்கொண்டு, வழக்கம்போல் இலங்கை அரசு சீனா, பாகிஸ்தானின் அடிவருடியாய், உளவாளியாய், எட்டப்பனாய் சிறந்து விளங்கும்!
Rate this:
Share this comment
Cancel
karunakaran - dallas,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201101:37:43 IST Report Abuse
karunakaran டேய் கொய்யாலே தமிழ் நாட்டுல கரண்ட் இல்லை, ஸ்ரீலங்கா விற்கு தேவையா ?மானம் கெட்ட இந்திய அரசாங்கத்திற்கு என் அனுதாபங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Sak Raja - wembley,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201100:58:36 IST Report Abuse
Sak Raja எங்க வீட்டுக்கு ஒழுங்கா மின்சாரம் வரமாட்டேங்குது. நாங்க வரியெல்லாம் சரியாய் கட்டுறோம் சாமி. நாங்க சம்பதிக்கிரதிலே முக்காவாசி அரசுக்கே எல்லா வழியிலேயும் போகுது.. எங்க வீடு தமிழ் நாட்டு எல்லைகுள்ளாதாங்க இருக்குது சாமி. அதானால தமிழ் நாட்டு அரசு தான் மின்சாரம் தரனும். முதல்ல எங்க வீட்டுக்கு கொடுத்துட்டு வெளிநாட்டுக்கு வியாபாரம் பண்ணுங்கோ, இலவசமா வேணாலும் குடுங்கோ. என்ன நாங்க கட்டுற வரியிலே தானே நீங்களா அரசியல் வியாபாரம் நடத்தி சொத்து குவித்து தொப்பை வளர்த்து கொழுப்பெடுத்து திரியிறீங்க. அப்படி முடியாதுன்ன சொல்லுங்க சாமி...
Rate this:
Share this comment
Cancel
ganeshkumar - tirunelveli,இந்தியா
17-ஏப்-201100:43:27 IST Report Abuse
ganeshkumar for the last three years and till we r not getting the proper power supply by saying power shortage .power cut last for six hours to half day most of the villagers forget tier tv and radios so how u can give it to srilanka . if it happen why u power cut last 3 years and till
Rate this:
Share this comment
Cancel
Panaikulam - tamilnadu,இந்தியா
16-ஏப்-201114:16:19 IST Report Abuse
Panaikulam தமிழ்நாட்டிலே சரியான முறையில் மின்சாரம் கிடைக்கவில்லை தற்சமயம் அது பெரும் பிரச்சனையாக உள்ளது அப்படி இருக்க இலங்கைக்கு மட்டும் எப்படி கொடுக்க முடியும் இது பெரும் பின்விளைவை ஏற்படுத்தும்.
Rate this:
Share this comment
Cancel
Imthias Ahmed - jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201110:09:33 IST Report Abuse
Imthias Ahmed டேய் கொய்யாலே தமிழ் நாட்டுல கரண்ட் இல்லை, ஸ்ரீலங்கா விற்கு தேவையா ?
Rate this:
Share this comment
Cancel
bubanesh - chennai,இந்தியா
15-ஏப்-201113:45:36 IST Report Abuse
bubanesh தமிழர் வாழ்வினை இருட்டடிப்பு செய்த ஸ்ரீலங்காவுக்கு ஒளியேற்ற துடிக்கும் மானம் கெட்ட இந்திய அரசாங்கத்திற்கு என் அனுதாபங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
ismail - alain,இந்தியா
15-ஏப்-201113:30:02 IST Report Abuse
ismail first u give 24 hrs electric our people . atleast RAMANATHAPURAM DIST . THEN U GIVE LANKA. USE LESS POLITIC PEOPLE.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை