காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் மீது வழக்குப் பதிவு| Dinamalar

காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் மீது வழக்குப் பதிவு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருவெண்ணெய்நல்லூர் : காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடப்பாளையத்தை சேர்ந்தவர்கள் அல்லாபக்ஷி மகள் மும்தாஜ்(21), ஈசா மகன் அல்லாபக்ஷி(25). இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வெளிநாடு சென்று கடந்த வாரம் அல்லாபக்ஷி சொந்த ஊருக்கு திரும்பினார்.


அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க முற்பட்டதால், மும்தாஜ் தன் உறவினருடன் சென்று அல்லாபக்ஷியிடம் தன்னை திருமணம் செய்யாதது குறித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது அல்லாபக்ஷி, அவரது தந்தைய ஈசா, குடுமாபீ, தில்ஷாத், இஸ்மாயில் ஆகியோர் சேர்ந்து மும்தாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மும்தாஜ் கடந்த 3ம் தேதி எஸ்.பி., பகலவனை சந்தித்து புகார் கொடுத்தார்.எஸ்.பி., உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அல்லாபக்ஷி உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.