நெல், கரும்பு, வாழை பயிர்களை பாதுகாக்க கொடிங்கால் வடிகாலை தூர்வார கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல், கரும்பு, வாழை பயிர்களை பாதுகாக்க கொடிங்கால் வடிகாலை தூர்வார கோரிக்கை

Added : ஏப் 21, 2011

குளித்தலை: வரும் மழைக்காலங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, கோரை பயிர்கள் மழைநீரில் இருந்து பாதுகாக்க, பொதுப் பணித்துறையினர், பரளியில் இருந்து பெட்டவாய்த்தலை வரையுள்ள கொடிங்கால் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை அருகே கே.பேட்டை பஞ்சாயத்து, வீரவள்ளியில் இருந்து கட்டளை மேட்டுவாய்க்காலில் இருந்து கோட்டமேடு, வதியம், வாலாந்தூர், பரளி, மேட்டுமருதூர், குமாரமங்கலம், மேல ஆரியம்பட்டி வழியாக பெட்டவாய்த்தலை தேவஸ்தானம், தோகைக்கரையில் தென்கரை பாசன வாய்க்காலுடன் இணைந்து காவிரி ஆற்றில் ஒன்று சேருகிறது. கொடிங்கால் வடிகால் வாய்க்கால் 150 கிராமங்களில் உள்ள பிரிவு பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால் தண்ணீர் அனைத்தும் கொடிங்கால் வடிகால் வாய்க்காலில் இணைகிறது. கண்டியூர், கோட்டமேடு, வாலாந்தூர், பரளி, தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மேட்டுமருதூர், குமாரமங்கலம் ஆகிய முக்கிய விவசாய பகுதிகளில் பயன்படுத்தப்படும் பாசனம், வடிவு கண்ணாறு (வாய்க்கால்கள்) சரிவர தூர்வாரப்படாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் பாசன வாய்க்காலில் இடையூறாக இருந்து வருகிறது. விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சவும், தண்ணீர் வடிய முடியாமலும் இருக்கிறது. இதனால் விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் மற்றும் அதிகளவு விளைச்சல் பெற முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் கொடிங்கால் வாய்க்கால் பரளி, மேட்டுமருதூர், குமாரமங்கலம், பெட்டவாய்த்தலை வரை, வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் வடியமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் மழைக்காலங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, கோரை பயிர்கள் மழைநீரில் இருந்து பாதுகாக்க பொதுப் பணித்துறையினர், பரளியில் இருந்து பெட்டவாய்த்தலை வரையுள்ள கொடிங்கால் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும். பரளி, மேட்டுமருதூர், ராஜேந்திரம், கூடலூர் பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் பாசனம், வடிகால் வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X