தேப்பெருமாநல்லூர் கோவிலில் அதிசயம்:அம்பாள் சன்னதியில் அணைந்து அணைந்து எரியும் தீபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேப்பெருமாநல்லூர் கோவிலில் அதிசயம்:அம்பாள் சன்னதியில் அணைந்து அணைந்து எரியும் தீபம்

Added : ஏப் 21, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில் நல்லபாம்பு அர்ச்சனை செய்த விஸ்வநாதசுவாமி கோவிலில் அம்பாள் சன்னதியில் அணைந்து, அணைந்து தானாக மீண்டும் எரிந்த தீபத்தை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு விஸ்வநாதசுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. விசுவநாதசுவாமியை வழிபடுவதால் மறுபிறவி கிடையாது என புராணம் கூறுகிறது.கடந்தாண்டு ஜனவரி 15ம் தேதி சூரிய கங்கண கிரகணம் நடக்கும் முன் காலை 10.30 மணிக்கு நல்லபாம்பு விசுவநாதசுவாமியின் மேல் இருப்பதை கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு சுவாமியின் மேலிருந்து இறங்கி நேராக தலவிருட்சம் வில்வமரத்துக்கு சென்றது. அங்கு மரத்தில் ஏறி வில்வஇலையை பறித்துக்கொண்டு மீண்டும் சுவாமி சன்னதிக்குள் வந்தது. பின்னால் வந்தவர்களை பார்த்து சீறியது. பின் நேராக சுவாமியின் மேல் ஏறி தலையில் அமர்ந்து படம் எடுத்தவாறு சுவாமியின் மீது வில்வ இலையை இட்டது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.இதுபோல் இரண்டு, மூன்று முறை இவ்வாறாக செய்தது. இத்தகவல் பரவியதும் கிராமமக்கள் முழுவதும் கோவிலுக்கு வந்து நல்லபாம்பை பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதுபற்றி கோவில் சிவாச்சாரியார் சதீஷ்குருக்கள் மற்றும் பிரகாஷ் குருக்கள் அப்போது கூறுகையில், ""ஒவ்வொரு கிரகணத்தின் போதும் தன் சாபத்தை போக்கிக்கொள்ள பாம்பு வந்து வில்வத்தால் விசுவநாதசுவாமியை அர்ச்சித்து வருகிறது. இதுவரை நம் கண்ணில் படவில்லை. இன்று தான் நேரில் கண்டுள்ளோம்,'' என்றனர்.இந்நிலையில், கோவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இக்கோவிலின் திருப்பணி உபயதாரர் கனடாவை சேர்ந்த ஜெனித்தா, அம்பாள் சன்னதியில் 11 சுமங்கலிகள், ஏழு கன்னிப்பெண்களை வரவழைத்து வேதாந்தநாயகி அம்பாள் சன்னதியில் சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை செய்தார். முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பலங்காரம் நடந்தது.பின், சுமங்கலிகள், கன்னிப்பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். மதியம் உணவு வழங்கப்பட்டது. நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர் அம்பாள் வேதாந்தநாயகி சன்னதியில் தீபம் அணைவதும், பின் தானாக எரிவதுமான நிகழ்வை கண்டு ஆச்சர்யமடைந்தார். கோவில் அர்ச்சகர் சதீஷ் சிவாச்சாரியாரை அழைத்து வந்து, ""எனக்கு தான் பார்வை சரியாக தெரியவில்லையா. நீங்கள் பாருங்கள்,'' என்றார். அப்போது தீபம் அணைவதும், மீண்டும் தானாக எரிவதுமாக இருந்துள்ளது.அதற்குள் அக்கம்பக்கம் தகவல் பரவியதும் தேப்பெருமாநல்லூர் மக்கள் திரளானோர் கோவிலுக்கு படை எடுத்தனர். அவர்களும் தீபம் அணைந்து எரிவதை பார்த்து அம்பாளை தரிசித்தனர். இந்நிகழ்வு காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை நடந்தது. இந்த அதிசயம் நடந்த கோவிலுக்கு அம்பாளை காண சுற்றுப்புற மக்களும் வந்த வண்ணம் உள்ளனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை