| முதுபெரும் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் காலமானார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதுபெரும் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் காலமானார்

Updated : ஏப் 21, 2011 | Added : ஏப் 21, 2011 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருநெல்வேலி : நெல்லையை சேர்ந்த முதுபெரும் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்தவர் ர.சு.நல்லபெருமாள்(81). வக்கீலாக தொழில் செய்து வந்த அவர் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். அவரது "கல்லுக்குள் ஈரம்' நாவலைப் படித்துத் தான் நான் போராளி ஆனேன் என்று விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கிறார். அந்த நூலுக்கு 1966ல் கல்கி பொன்விழா ஆண்டில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அவரது "நம்பிக்கைகள்' நாவலுக்கு 1983 ல் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது கிடைத்தது. 1991ல் "உணர்வுகள் உறங்குவதில்லை' என்ற நூலை எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளையினர் சிறந்த நூலாகத் தேர்வு செய்து பரிசுவழங்கினர். அவரது சிறுகதை ஒன்று தமிழக அரசின் பத்தாம் வகுப்பு துணைப் பாடநூலில் இடம்பெற்றது. ர.சு.நல்ல பெருமாள், கடந்த 20ம்தேதி இரவில் பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் தெருவில் உள்ள தமது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு பாப்பா என்ற மனைவியும் சிவஞானம், அலமேலு மங்கை என்று இரு மகள்களும் பாலசுப்பிரமணியம் வெங்கடேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும் பேரன் பேத்திகளும் உள்ளனர். 1965 ஆண்டு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் சார்பாக வரலாற்று நூல் வெளியிடப் பட்டது.
மேலும் போராட்டங்கள், மாயமான்கள், மயக்கங்கள், மருக்கொழுந்து, மங்கை, திருடர்கள், நம்பிக்கைகள், தூங்கும் எரிமலைகள், எண்ணங்கள் மாற்றலாம் சங்கராபரணம், பாரதம் வளர்ந்த கதை, இந்தியச் சிந்தனை மரபு உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். அவரது இறுதிசடங்குகள் இன்று 22ம் தேதி பகலில் பாளையங்கோட்டையில் நடக்கிறது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aron seka - morgan hill,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201121:29:29 IST Report Abuse
aron seka திரு.நல்லபெருமாள் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' இன்றைய அரசியல் குழ் நிலைக்கும் மிகவும் பொருந்தும். உயர்ந்த லட்சிய எழுத்தாளர். இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான கருத்துக்கள் அவர் நூல்களில் மிகவும் உண்டு. தமிழ் இலக்கியம் ஒரு நல்ல படைப்பாளியை இழந்து விட்டது. அருண் சேகர் usa
Rate this:
Share this comment
Cancel
Sathanar Perunthalai - erode,இந்தியா
21-ஏப்-201114:51:28 IST Report Abuse
Sathanar Perunthalai நல்ல எழுத்தாளர்.படிக்க கொடுத்து வைத்திருக்கணும்
Rate this:
Share this comment
Cancel
senthilkumar - bangalore ,இந்தியா
21-ஏப்-201113:35:42 IST Report Abuse
senthilkumar அன்னாரின் மறைவு தமிழுலகத்திற்கு பேரிழப்பு. தினமலருக்கு ஒரு வேண்டுகோள். பத்திரிக்கைகள் கூட எழுத்தாளர்களின் புகைப்படத்தோடு செய்தியை வெளியிடா விட்டால் எப்படி? அவ்வாறு செய்வது அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் தருவதாக இருக்கும். நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X