cadalur harbur | கடலூர் துறைமுகத்தில் கோட்டியா கட்டும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் துறைமுகத்தில் கோட்டியா கட்டும் பணி தீவிரம்

Added : ஏப் 27, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முதுநகர் : கடலூர் துறைமுகத்தில் சிறிய அளவிலான கோட்டியா கட்டும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியா என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன. கடலூரில் மீன்பிடித்துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு கோட்டியா கட்டுவது, பழுது பார்ப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வகை கோட்டியா தயாரிப்பதற்கு கோழிக்கோடு, மங்களூர் பகுதியிலிருந்தே பெரும்பாலான ஆர்டர்கள் பெறப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கோட்டியாக்கள் பெரும்பாலானவை லட்சத்தீவுகளுக்கு உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன.


கடலூர் துறைமுக அலுவலரிடமிருந்து உரிய அனுமதி பெற்று சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. கடலூர் துறைமுகத்திலிருந்து லட்சத்தீவுகளுக்குச் செல்லும் கோட்டியாக்கள் பாம்பன் பாலம் வழியாக கோழிக்கோடு, மங்களூர் சென்று லட்சத்தீவுகளுக்குச் செல்கின்றன. அரபிக்கடலில் மே 15ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை அதிகளவில் புயல் தாக்கக்கூடும் என்பதால் இக்காலங்களில் அரபிக்கடலில் கோட்டியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது கடலூர் பகுதிகளில் பழுது பார்க்க கொண்டு வரும் கோட்டியாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் புதிய கோட்டியா மற்றும் பழுது நீக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X