வினாத்தாள் லீக்: விலை ரூ.6 லட்சம் : 12 லட்சம் மாணவர் தவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : நாடு முழுவதும் நேற்று நடக்கவிருந்த, இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது தொடர்பாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரும், பீகாரை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வினாத்தாள் ஆறு லட்ச ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. வினாத்தாள் லீக் காரணமாக தேர்வு நேரம் மாற்றப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, அகில இந்திய நுழைவுத் தேர்வு நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 26 ஆயிரத்து 816 இடங்களுக்கு, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆன்-லைனில் தேர்வு எழுதவும் விண்ணப்பித்திருந்தனர்.

நாடு முழுவதும் 1,600 தேர்வு மையங்களில், அந்த மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு, அதிகாலையிலேயே ஏராளமான மாணவ, மாணவியர் குவிந்தனர். காலை 9.30 மணிக்கு பி.இ., - பி.டெக்., முதல்தாளும், மதியம் 2 மணிக்கு பி.ஆர்க்., - பி.பிளான் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள் தலா ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து லக்னோ, மீரட், கான்பூரில் உள்ள பயிற்சி மையங்களில் அதிரடிப் படையினர் சோதனையிட்டனர். லக்னோ மற்றும் கான்பூரில் உள்ள பயிற்சி மையங்களில் வினாத்தாள்களை அதிரடிபடையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வினாத்தாள்களை சி.பி.எஸ்.இ.,யிடம் போலீசார் ஒப்படைத்தனர். லீக் ஆன வினாத்தாள், "ஒரிஜினல்' என்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக உ.பி., மற்றும் பீகார் பயிற்சி மையங்களை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் நேற்று புதிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் தவிப்பு: தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், சென்னையில், அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, மயிலாப்பூரில் பி.எஸ். பள்ளி உட்பட ஐந்து இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

அதிகாலையிலேயே தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்கள், தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக ஒட்டப்பட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காலை 9.30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு, பிற்பகல் 12 மணிக்கு துவங்கும் என்று நோட்டீஸ் பலகை மட்டும் வைக்கப்பட்டது. இந்நிலையில், லீக் விஷயம் தெரியவந்தது. இதையடுத்து தேர்வு நடக்கும் மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின், காலையில் நடக்கவிருந்த முதல் தாள் மதியம் 12 மணிக்கும், மதியம் துவங்கும் தேர்வு இரவு 7 மணிக்கும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புனே ராணுவ ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான, அகில இந்திய நுழைவுத் தேர்வும், நேற்று மதியம் 2.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த மாணவர்கள், ஏதாவது ஒரு தேர்வை மட்டும் எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சிலர் இன்ஜினியரிங் தேர்வை புறக்கணித்துவிட்டு, ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை வளாகத்தில் நடந்த, மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதச் சென்றனர். இந்தக் குழப்பங்கள் பலரையும் நோகடித்தது.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்