Respected Chief Minister... | அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதுவது ...| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதுவது ...

Added : மே 10, 2011 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Respected Chief Minister...

10.05.2011 : ஐயா, வணக்கம்! ஆத்தூரை அடுத்துள்ள தலைவாசல் கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த, 104 வயதான உரைநூல் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு, மத்திய அரசு தொல்காப்பியர் விருதும், பணமுடிப்பும் அறிவித்து, அதன்படியே கொடுத்தும் விட்டது; சந்தோஷம்! இதுபற்றி தாங்கள் அடைந்த புளகாங்கிதத்தையும், பகிர்ந்து கொண்டீர்கள்; ரொம்ப சந்தோஷம்!

ஆனால், 2000வது ஆண்டில், நீங்கள் அறிவித்த, திருவள்ளுவர் விருது, பணம், இன்னமும் பலருக்கு வரவில்லையே ஐயா! மிக நீண்ட இடைவெளி காரணமாக, இந்த விருது பற்றி கிடைத்தவர்கள் கூட மறந்து இருக்கலாம்; ஆகவே, ஞாபகப்படுத்துகிறேன்.

கன்னியாகுமரியில், 2000வது புத்தாண்டு தொடக்கத்தில், 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை, முதல்வராக இருந்து, திறந்து வைத்தீர்கள். அந்த விழாவில், பள்ளி சிறுவர், சிறுமியர் பலர் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்ததுடன், குறளின் கடைசி வரியை சொல்லி, அக்குறளை சொல்லச் சொன்னால் கூட, முழுக் குறளையும் சொல்லி, பொருளும் கூறினர். 133 அதிகாரத்தில், எந்த இடத்தில், அந்த குறள் இடம் பெறுகிறது என்றும் சொல்லி வியக்க வைத்தனர்.

இப்படி குறளை கரைத்து குடித்த, அந்த சிறுவர், சிறுமியரால், சபை மட்டுமல்ல, நீங்களும் சந்தோஷமடைந்தீர்கள். இந்த குழந்தைகள் படித்து முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து, கைத்தட்டலையும் அள்ளினீர்கள். அந்த குழந்தைகளும், மாதம் ஆயிரம் ரூபாய் சன்மானம், இந்த மாதம் வரும், அடுத்த மாதம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து கிட்டத்தட்ட, 12 வருடமாகிறது; இன்னும் தொகை வந்தபாடில்லை. குழந்தைகள் வளர்ந்தும் விட்டனர்; பலர், இதை மறந்தும் விட்டனர்!

ஆனால், இன்னமும் மறக்காத, அப்பாவி அப்பா ஒருவர், இதை ஞாபகப்படுத்தி, இப்போது அரசுக்கு கடிதம் போட்டார். மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருமளவிற்கு அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது? மொத்தத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை, பத்தாயிரமோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தருவதற்கு ஆலோசனை நடந்துகொண்டு இருக்கிறது. ஆலோசனை முடிந்ததும், சொல்லி அனுப்புகிறோம் என்ற ரீதியில் பதில் அனுப்பியுள்ளார்கள்.

அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது, மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதற்கு என்று காட்டமாக எழுதிய கடிதத்தின் மை உலர்வதற்கு முன், யாரும் கேட்காமல், எவரும் வற்புறுத்தாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு நான்கு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்தை விட, கோடி சிறிதா அல்லது திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை விட, கிரிக்கெட் வீரர்கள் சிரமத்தில் இருக்கின்றனரா? தெரியவில்லை... அனேகமாக, கடிதம் கிடைக்கப்பெற்ற, அந்த அப்பாவி அப்பா, மகனிடம், "இனி, திருக்குறளை விழுந்து, விழுந்து படிப்பே...' என, கேட்டு புளிய விளாறால் விளாசி இருக்கலாம்.

இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவதற்கு காட்டிய அக்கறையை, ஏன் இதில் காட்டவில்லை என, சம்பந்தபட்ட அதிகாரிகளை, நீங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமே ஐயா!

அதென்ன ஆட்சிப்பணியாளர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, 65 லட்சத்திற்கு கொடுக்கின்றனர் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்... "அப்பழுக்கற்ற சமூக சேவையாளர்கள்' என்ற அமைச்சர் சிபாரிசோடு, கடிதம் கொண்டுவரும் கரைவேட்டி கட்டியவர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும், முன் தேதியிட்டு வீடுகளை ஒதுக்கிக்கொடுத்த ஆட்சிப்பணியாளர்களுக்கு நாமும், நமக்காக ஏதாவது செய்துகொள்ளவேண்டும் என்று யோசித்ததன் விளைவே இந்த வீடு கட்டும் திட்டம்.

எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், "எங்களுக்கு சம்பளம் போதவில்லை' என்று தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கான சம்பளத்தையும் தாங்களே நிர்ணயம் செய்து, அதையும் முன்தேதியிட்டு பெற்றுக்கொண்டனரோ, அதே போல வீடு வாங்குவது என்று முடிவானதும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்குவற்கான விதிமுறைகளையும், இவர்களுக்கு ஏற்ப இவர்களே, வளைத்துக்கொண்டனர்.

தமிழகத்தின் எந்த மூலையிலும் தன் பெயரிலோ, குடும்பத்தார் பெயரிலோ வீடோ , நிலமோ இருந்தால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் வாங்க முடியாது என்பது அடிப்படை விதி, ஆனால் இவர்களுக்கு அந்த விதி கிடையாது.

இதனால் அண்ணா நகரில் ஒரு வீடும், முகப்பேரில் மூன்று வீடும் வைத்திருக்கும் அதிகாரிகள் கூட, இந்த இரண்டரை கோடி ரூபாய் பெறுமான வீட்டிற்கு விண்ணப்பித்தனர். சந்தன வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டதற்காக, விலை மதிக்கமுடியாத நிலத்தை இலவசமாக வாங்கியவர்கள் கூட, இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். ஒரே தகுதி, தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்., ஆக இருக்க வேண்டும். "இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவது முறையாகத் தெரியவில்லையே' என்று, இவர்கள் யோசித்து, "வேண்டாம்' என்று சொல்லவில்லை.

டில்லியில் சமூக நல அமைப்பு ஒன்று, ஒரு கோடி ரூபாயும், தாகூர் விருதும் வழங்க முன்வந்தபோது, "அதைப்பெறும் தகுதி எனக்கில்லை, இதற்காக பணம் பெறுவதும் முறையுமில்லை' என்று சொல்லி, ஒரு கோடியையும், விருதையும் வேண்டாம் என்ற அன்னா ஹசாரேவைப் போல எல்லாரும் இருக்கமுடியாதுதானே!

நன்றி!

இப்படிக்கு, ஆனந்தி


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shankar - chennai,இந்தியா
31-மே-201114:02:44 IST Report Abuse
shankar அன்புள்ள ஆனந்தி அம்மா... என்னிடம் உள்ளது ஒரே ஒரு கேள்வி ! (அதற்காக நன் தி.மு.க என்று என்ன வேணாம்) ஆட்சி மாற்றம் வந்த பின்பு இப்படி ஒரு "ஆனந்தி யாக " வந்து உள்ளீர்கள் ! ஏன் ? ௨,௩,௪ அல்லது ௫ வருடங்களுக்குள் முன் வர வேண்டியது தானே ? யார் தன ஊழல் பண்ண வில்லை ? இப்போ ஆட்சியல் இருக்கும் அரசுக்கு நீதி மன்றத்தில் எத்தனை வழக்குகள் உள்ளது தெரயுமா? நண்பர்களே நாம் ஒன்னும் பெரிய மற்றதை ஏற்படுத்த வில்லை.. ஒரு "நல்ல தலைமையை" பெரும் வரியல்....1 --> தி.மு.க அல்லது 2 .--> அ.தி.மு.க.... தயவு செய்து நீங்க என்ன வேணும்னாலும் செய்து கொள்ளுங்கள்.. மக்களை நிம்மதியாகவும்...அன்போடும்... வாழ விடுங்கள்....ப்ளீஸ்....நன்றி.
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
22-மே-201109:05:42 IST Report Abuse
P. Kannan ஆனந்தி நீடுடி வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Abdul Muthlaif - Tuas,சிங்கப்பூர்
13-மே-201105:39:28 IST Report Abuse
Abdul Muthlaif நான்கலளெல்லாம் வாய் சொல் வீரர்தான் செயல் ??? விடும்மா மறந்து வருசமாச்சு இப்ப பழைய கஞ்சி கிளறாத
Rate this:
Share this comment
velu - tholudur,இந்தியா
18-மே-201114:50:51 IST Report Abuse
veluகூடிய சீக்கிரம் நல்ல காலம் வரும். ஏன்னா அம்மா அரியணை வந்தாச்சி...
Rate this:
Share this comment
goppynath - coimbatore,இந்தியா
19-மே-201111:46:23 IST Report Abuse
goppynath2000- கு பிறகு, 5 ஆண்டுகள் அம்மா தானே ஆண்டாங்க. அப்போ என்ன ஆச்சி?...
Rate this:
Share this comment
TWOR - Chennai,இந்தோனேசியா
26-மே-201120:25:09 IST Report Abuse
TWORஒன்றும் வராது ஒன்னு வரும்...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-மே-201101:15:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி நான் இதற்கு ஒரு மாற்றுக் கருத்து சொல்ல விரும்புகிறேன்.. களை எடுக்கணும் என்றால், எல்லாக் களையையும் பிடுங்கி எறிய வேண்டும்... தப்பு யார் செஞ்சிருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும்..!!! அதான் சரி .. இப்படி எழுதியிருக்கிறேன் என்பதற்காக, என்னை திமுக சொம்புன்னு சொல்லியிறாதீங்க..!!! .மாத்தி யோசிங்க !!! At the first glance, the article gets the intended political impact quickly. It was targeted with a compassionate story, and hence immediately scored lot of positive comments.. If you say the author has good intentions, may be, but I doubt. !!! The article covers a time-line from 2000 picks some administrative atrocities over a period of 12 years. We all should not forget that the initial 5 of those years were in ADMK rule.. !! சகோதரி ஆனந்திக்கு, இந்த கடிதத்தை நீங்கள் 2001 லிருந்து, 2006 க்குள் அப்போது இருந்த முதல்வருக்கும் எழுதியிருக்கலாம்.. எழுதி, ஏன், இந்த 5 வருடங்களில் இந்த ஆணையை நிறைவேற்றவில்லை என்று ஒரு வரியில் கேட்டிருந்திருக்கலாம்...!!! இந்த கடிதத்தில் அதை ஒரு வரியில் கடிந்து கொண்டிருக்கலாம் !!! இல்லை, இப்போதைய கடிதத்தின் பிரதியை எடுத்து, நம் தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, எதிரான கட்சி, மற்றும் எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் ஏன் தங்களின் ஊதிய உயர்வை மறுக்கவில்லை என்றும், எவ்வாறு முன் தேதியிட்டு பெற்றுக் கொண்டார்கள் என்றும் கேட்டிருக்கலாம்..!! அதற்கு ஏன் எந்த போராடமும் நடத்தவில்லை என்று கூட கேட்டிருக்கலாம்.!!! கேட்கவில்லை !!! கொள்ளை அடிப்பதிலும், மக்களை ஏமாற்றுவதிலும் கட்சி சார்பற்று கை கோர்த்துக் கொள்வார்கள் இந்த எம்.எல்.ஏ -களும், அரசு நிர்வாக அதிகாரிகளும், தலைவர்களும்....!!!. ஒவ்வொரு அரசிலும் இது போன்ற வீணான பல திட்டங்கள், நிர்வாகத்தில் இருப்பவரின் நலன்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன..இந்த கடைசி 5 வருடங்களில் நடந்தவைகள் நினைவில் இருந்தாலும், அதற்கு முன் அரங்கேறியவைகள், அரசியல் ஆதாயத்திற்காகவும், அரசியல் பிரசங்கத்திற்காகவும், இன்னும் போனால் சிலரது பிழைப்பிற்காகவும், மறைக்கப்படுகின்றன, மறக்கடிக்கப்படுகின்றன.. உங்கள் எண்ணம் உண்மையிலேயே கட்சிக்கு அப்பாற்பட்டது என்றால், இதே கடிதத்தை இன்னும் ஒரு மாதமோ, அல்லது இரண்டு மாதங்களோ கழித்து, நான் எழுதியவைகளில், உண்மையிருந்தால், அவைகளையும் சேர்த்து எழுதுவீர்களா?
Rate this:
Share this comment
Cancel
BharathKumar - Karur,இந்தியா
10-மே-201115:51:26 IST Report Abuse
BharathKumar என்னென்ன பிரச்சினைக்கு இன்னும் எத்தனை ஆனந்திகள் கடிதம் எழுதக் காத்துக்கிடக்கின்றனரோ? பிரச்சினைகளை சுவாரஸ்யமாய் சொல்வதற்கு வசதியாய் ஆனந்தி கான்செப்டை அறிமுகப்படுத்திய நிறுவனத்திற்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
vasudevan - muscat,ஓமன்
10-மே-201115:12:27 IST Report Abuse
vasudevan நல்லதொரு குடும்பம் ப(க)ல்கொலை கழகம்
Rate this:
Share this comment
Cancel
வெங்கடே& - Massawa,எரிட்ரியா
10-மே-201114:24:37 IST Report Abuse
வெங்கடே& idhu kalaingarin 12 andu sadanai
Rate this:
Share this comment
Cancel
Babu Muttam - Paris,பிரான்ஸ்
10-மே-201113:10:55 IST Report Abuse
Babu Muttam என் அன்புக்குரிய தினமலர் ஆசிரியருக்கு வணக்கம் .. டீ கடை பெஞ்ச் போல ஆனந்தி கடிதம் எழுதுவது தொடர அன்பான வேண்டுகோள் ..ஆட்சி செய்பவர்களுக்கு இது ஒரு சவுக்கடி இல்லை. செருப்படி போல இருக்கு. நன்றி
Rate this:
Share this comment
Cancel
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
10-மே-201112:33:43 IST Report Abuse
N.Purush Bharatwaj ஆனந்தி இன்னொரு விளக்கம் தேவை. இந்த 2G வழக்கில் ஆகும் செலவு அரசாங்கத்துடையதா என்பதை யாரேனும் விளக்கினால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Rajkumar Veeraiah - New Delhi,இந்தியா
10-மே-201112:21:08 IST Report Abuse
Rajkumar Veeraiah ஆனந்தி சொன்னது எனக்கு வேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இன்று அரசு அலுவலர்கள் முதல் ஆட்சியில் இருப்பவர்கள் வரை கிடைத்தவரை சுருட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இருந்தும் அவர்களை ஏனோ சில விசயங்களுக்காக பொதுமக்களும் (அரசிடம் கிடைக்கும் சில இலவசங்களுக்காக ), அரசும் (அரசு ஊழியர்களின் ஓட்டுக்காக ) கண்டுகொள்வதில்லை .............இந்த இல்லை மாற வேண்டும் என்பதே எனது விருப்பமும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை