E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்: சின்னத்தை இழக்கிறது பா.ம.க.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 மே
2011
00:11
பதிவு செய்த நாள்
மே 18,2011 23:29

சட்டசபை தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதங்களின் அடிப்படையில், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் பா.ம.க., இழக்க உள்ளது.

தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.


இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்துள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (99)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palvannan Ezhiloviyan Ezhiloviyan - Jayankondam,இந்தியா
19-மே-201123:31:18 IST Report Abuse
Palvannan Ezhiloviyan Ezhiloviyan அட போங்கப்பா டாக்டர் எவ்ளோம் அடிச்சாலும் thangauvaru..அவரு எப்பவோ அரசியல காச pathutaru..கட்சி ஆவது மன்னக்கட்டியவது..என்னக்கு தெரிஞ்சு நன்கொடை வாங்கி வளர்ந்த அரசியல் தலைவர் இவர்தான்..தமிழ் தமிழ் என்று சொல்லியே..பல கோடிகளே அள்ளியவரும் இவர்தான்..அப்பதான் இவங்க வீட்ல பேசற இங்கிலீஷ் கட்சிகார தொண்டனுக்கு புரியாது... அட பாட்டாளி அடி பொடிகளே டாக்டர் ச்விச்ஸ் பேங்க் கருப்பு panam மத்தி மட்டும் பேச மாட்டாரு..ஏன் தெரியுமா? பெரும பட்டுக்க டாக்டர் பாட்டாளி மக்களின் நன்கொடையே எல்லாம் ச்விச்ஸ் பேங்க் lan தான் வச்சி இருக்காரு..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Punniya kotti - chennai ,இந்தியா
19-மே-201123:02:17 IST Report Abuse
Punniya kotti இந்த தேர்தலில் மக்கள் ஜாதி எதிர்ப்பு போராட்டத்தை மறைமுகமாக நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். கேப்டன் அவர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-201123:01:06 IST Report Abuse
Ramesh மாம்பழம் போய் ஆப்பு வரும் டும் டும் டும் டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vengadassalame - Paris ,பிரான்ஸ்
19-மே-201122:26:48 IST Report Abuse
vengadassalame தே. மு .தி .க விற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் அளித்துள்ளது பாராட்டுக்குரியது .விஜய காந்திற்கு மனமார்ந்த பாராட்டுகள் .எதிகால நல்லாட்சியை நோக்கி வெற்றிநடை போடும் என நம்புகிறேன் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
thanigai vel - maduranthagam,இந்தியா
19-மே-201122:03:15 IST Report Abuse
thanigai vel people are not fools, people are watching every movement of every party. just few months before election ramdoss was crying like anything to close the wine shops (but i still wonder it is an act for coalition) but after the alliance with DMK what happened to all those cry...??????// PMK is just like a camelion. in my opinion they are worse than the DMK , DMK atleast done something good to people. so i hope PMK should vanish asap. as for DMDK they look promising and but only these coming five years can tell what they really are....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Manikandan K - Chennai,இந்தியா
19-மே-201119:40:56 IST Report Abuse
Manikandan K If this happens, then hats off to EC.... Even request EC to take necessary steps on other useless parties also...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
siva - karur,இந்தியா
19-மே-201118:59:27 IST Report Abuse
siva சந்துரு, கொஞ்சம் காத்திருங்கள் கொங்கு என்றால் என்ன என்பதை நிருபிப்போம். இந்த வெற்றி ஜெ வுக்கோ dmdk கம்கோ கிடைத்த வொட்டே அல்ல. மின் வெட்டு 2g போன்ற அதிர்ப்தி ஏ ஆகும். கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும். சிவா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
M.S. Rajasekaran - Chennai,இந்தியா
19-மே-201118:07:04 IST Report Abuse
M.S. Rajasekaran அழுகிய மாம்பழம் போனால் போகட்டும். இப்போது எந்த கட்சியுடன் கூடினால் ஒரு ராஜ்ய சபா சீட் கிடைக்கும்? பொழப்புக்கு ஒரு வழி சொல்லுவீங்களா, அதை விட்டு விட்டு,சின்ன பிள்ளை தனமாக கட்சி, சின்னம் என்று எனக்கு புரியாத விஷயங்களை எழுதி கிட்டு ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
T. Meenakshi Sundaram - Kuwait,குவைத்
19-மே-201116:59:21 IST Report Abuse
T. Meenakshi Sundaram தமிழ் குடி தாங்கி, மரம் வெட்டி, கட்சி மாறி, சின்னமும் போச்சா? ஐயோ, வட போச்சே!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
19-மே-201116:28:54 IST Report Abuse
adithyan வன்னியர் சம்பு ரிஷி மூலம் வந்தவர்கள் என்றும் கூறி பெரிய யாகம் நடத்தினார்கள். வன்னியர்களுக்கு ஆள தகுதி இல்லையா என்று கலைஞர் காலத்தில் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். தமிழர்கள் யாரும் ரிஷி வழி வந்தவர்கள் அல்ல. ஆகவே வன்னியர் தமிழர் அல்ல என்பது நிரூபணம் ஆகிறது. ரிஷி மூலம் வந்தவர்கள் என்றால் உயர்த்த சாதியினர். ஆனால் இவர் ஏன் தங்கள் மிகவும் பிற்படுதபட்டவர் என்று பீற்றிகொள்கிறார் என்று புரிய வில்லை. இதுவே இவரது ரெட்டை வேஷம் என்று புரிகிறது. இவர்களுக்கும் பல்லவர்களுக்கும் எந்த தொடபும் கிடையாது. இவர்கள் படை வீரர்களாகவும் இருந்தது கிடையாது. எல்லாம் பீற்றல் தான். தமிழர்கள் ஏமாற்று பேர்வழிகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்பது தெளிவாகி விட்டது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.