dinamalar tirupur news | கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி| Dinamalar

தமிழ்நாடு

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Added : மே 21, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை : உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு நாளை, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடை பிடிக்கப் படுகிறது. உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கோட்டாட்சியர் ஜெயமணி தலைமை வகித்தார். தாசில்தார் சபாபதி முன்னிலையில் அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்."இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்; எல்லா மக்களிடத்தும் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சின்னச்சாமி தலைமையில், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை