சங்ககால நாணயபெயரில் மோசடி 7 பேர்கைது: டாக்டர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்ககால நாணயபெயரில் மோசடி 7 பேர்கைது: டாக்டர் மீது வழக்கு

Added : ஜூன் 23, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி:பழநியில் சங்க கால நாணயம் இருப்பதாக கூறி, திருப்பூர் வியாபாரியிடம் மோசடியாக பணம் பறித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகேசன்(48). வியாபாரியான இவர், பழநியை சேர்ந்த சித்தா டாக்டர் பாக்கியநாதனிடம் விலைமதிப்பற்ற சங்ககால நாணயம் இருப்பதாகவும், வெளிநாட்டில் விற்றால் அதிக பணம் கிடைக்கும் என இவரிடம் இவரது நண்பர் சுலைமான் கூறியுள்ளார்.


இதைநம்பி முருகேசன்,சுலைமான் உட்பட7 பேரும் பழநி வந்தனர். பாக்கியநாதனை பார்த்தனர். சங்க கால நாணயம் என நாணயம் ஒன்றை காட்டப்பட்டுள்ளது. ரூ. பல லட்சம் பேரம் பேசப்பட்டது. அட்வான்சாக ரூ. 5 ஆயிரம் தந்த முருகேசன் முழு தொகையையும் தர அவகாசம் கேட்டுள்ளார். அதற்கு ஒத்துக்கொள்ளாமல் அவரிடம் இருந்த ஒன்றரை பவுன் மோதிரத்தை இவர்கள் வாங்கியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகேசன், பழநி போலீசில் புகார் செய்தார்.


டாக்டர் மீது வழக்கு: எஸ்.ஐ., சீமான் தலைமையிலான போலீசார் சுலைமான், துரைசாமி, மாணிக்கவாசகம், செல்வம், தனிக்கோடி, ராஜகோபால் மற்றும் பாபுவை கைது செய்தனர். பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர் பாக்கியநாதன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை