Jeyalalitha writes letter to kiran kumar reddy | சென்னைக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு ஜெ., கடிதம்

Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சென்னைக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு ஜெ., கடிதம்

சென்னை : "சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க, கண்டலேறு அணையில் இருந்து, வரும் அக்டோபர் வரை, 1,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு அனுப்பியுள்ள கடிதம்:இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, ஒரு ஆண்டுக்கு ஆந்திர அரசு, தமிழகத்திற்கு, 12 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். 2010-11ம் ஆண்டில், 4.6 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது. கிருஷ்ணா குடிநீர் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து அணைகளிலும், போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதாக நம்புகிறேன்.
எனவே, சென்னை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, கண்டலேறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்துவிடுவதில் ஆந்திர அரசுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. எனவே, கண்டலேறு அணையில் இருந்து, உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்.சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வரும் அக்டோபர் வரை, தொடர்ந்து, 1,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-201100:51:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி கத்தி போயி, வாலு வந்தது, டும், டும், டும்...!!!
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
05-ஜூன்-201122:37:00 IST Report Abuse
Ayathuray Rajasingam வேற்றுமையில் ஒற்றுமை இருக்க வேண்டுமாயின், இந்த விடயம் சமஸ்டி அரசின் பொறுப்பாகும். ஆந்திர அரசும் சமஸ்டி அரசுக்கு நீர் வழங்கும் விடயத்தில் ஆதரவை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
siva - chennai,இந்தியா
05-ஜூன்-201120:50:17 IST Report Abuse
siva ஆமா இப்ப எல்லாம் சாதாரண மனுஷன் கூட செல் போனில் எங்கே வேணுன்னா பேசி விடுகிறார்கள்.. நம்ம தலைவர்கள் மட்டும் நிதானமா கடுதாசி போடுராங்கோ எவ்வளவு முக்கியமான விசியமா இருந்தாலும்..
Rate this:
Share this comment
Cancel
kamal kan - Chennai,இந்தியா
05-ஜூன்-201117:27:51 IST Report Abuse
kamal kan இது போன அரசின் திட்டம், amma nenga innoru kudu neer thittam plan pannuga.. வாழ்க அம்மா
Rate this:
Share this comment
Cancel
john - tirunelveli,இந்தியா
05-ஜூன்-201116:33:25 IST Report Abuse
john ஏற்க்கனவே இப்படி கடிதம் பல எழுதிதான் ஒருத்தர் எங்கள ஏமாத்துனாரு.இப்ப நீங்களுமா ....எல்லாருமே ஒரே மாதிரிதான் இருக்கீங்க ..நீங்கள்லாம் திருந்தவே மாட்டிங்களா ?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
05-ஜூன்-201113:03:36 IST Report Abuse
sundaram நீங்க கடுதாசு எழுதுனது தப்பு இல்லை. ஆனா, இந்த கடுதாசு எழுதுறதுன்னு சொன்னாலே நம்ம ஊரு மக்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுடறாங்க. எனக்கென்னவோ நீங்க ஒரு அமைச்சரை ஆந்திராவுக்கு அனுப்பி உங்க கடுதாசியையும் கொடுத்துட்டு நேருலேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வர சொல்லி இருக்கலாம் போல தோணுது. ஏன்னா, அடுத்து கர்நாடகா தண்ணி பிரச்சினையும் இருக்கு. அவ்வளவு சுலபமா அவங்க தண்ணி விடமாட்டாங்க. அப்படியே அவங்க திறக்கலாம்னு மனசுக்குள்ள நினைச்சாலும் நம்ம ஊருலேந்து ஒருத்தரு "ஏனய்யா,அனாவசியமான வேலை எல்லாம் செய்யுரீரு"ன்னு அவருக்கு போன் போடுவாரு. அப்போ நீங்களோ இல்லாட்டி ஒரு மந்திரியோ தான் நேருல போக வேண்டி இருக்கும். கர்நாடகாவுக்கு (பி.ஜே. பி ஆளும் மாநிலம்) நேருல போறவங்க ஆந்திராவுக்கு (காங்கிரசு ஆளும் மாநிலம்) ஏன் போகலைன்னு ஒரு பிரச்சினையை கிளப்புவாங்க. என் மனசுல பட்டதை சொல்லி புட்டேன். தப்புன்னா விட்டுடுங்க.
Rate this:
Share this comment
Cancel
M.Vijayasekaran - Udumalpet,இந்தியா
05-ஜூன்-201112:23:46 IST Report Abuse
M.Vijayasekaran கடிதம் எழுதுவது என்பதுபற்றி ஏதாவது சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி '' கலைஞர் ''
Rate this:
Share this comment
Cancel
tamil veriyan - chennai,இந்தியா
05-ஜூன்-201110:14:45 IST Report Abuse
tamil veriyan உன் ஆட்சியில் ஒன்றும் உருப்படியாக நடக்க போவது இல்லை. இது எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Kumaran - chennai,இந்தியா
05-ஜூன்-201109:15:49 IST Report Abuse
Kumaran மற்றவர் கடிதம் எழுதினால் மட்டும் திட்டி தீர்க்கும் அம்மையார் ஆதரவாளர்கள், அம்மையாரும் கடிதப்போக்குவரத்தை பின்பற்றும்போளுது மட்டும் இதுதான் ஞாயம் என்று கூறுவார்களே.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-201100:53:35 IST Report Abuse
மதுரை விருமாண்டிபோறான் வர்றான் தோட்டத்திலே, ஒருத்தன் வச்சான் வெள்ளரிக்கா..!!! காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி, கருதாசி போட்டன் வெள்ளைக்காரன்..!!!...
Rate this:
Share this comment
Cancel
H Narayanan - Hyderabad,இந்தியா
05-ஜூன்-201107:42:37 IST Report Abuse
H Narayanan அடப் போம்மா.. எங்க முனால் முதல்வர்.. முன்னாள் மஞ்சள் துண்டார்.. இந்நாள் வெள்ளைத் துண்டாராக இருந்திருந்தால் பிரதமருக்கே கடிதம் எழுதி இருந்திருப்பார்.. அப்போதான் வருடக் கணக்கில் இந்தக் கடிதம் பைலிலேயே தூங்கிக் கொண்டு இருந்திருக்கும்.. இவரும் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று ஒரு 10-15 கேள்வி பதில் எழுதி பத்திரிகைக்கு கொடுத்து இருந்திருப்பார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை