உள்ளாட்சி தேர்தலிலும் ஜனநாயகம் வெல்லுமா? வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு : "சட்டசபைத் தேர்தலைப் போல, உள்ளாட்சி தேர்தலிலும் ஜனநாயகம் வெல்ல நடுநிலையைக் கடைபிடிக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், 2006-11 தி.மு.க., ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில், "பணநாயகம்' என்ற கலாசாரம் தலைதூக்கியது. 2011 சட்டசபைத் தேர்தலில், "காசில்லாமல்; ஓட்டில்லை என்ற நிலையில் மக்கள் உள்ளனர்' என்ற பேச்சு ஓங்கி ஒலித்தது. ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக காசுக்கு மயங்காதவர் தமிழக மக்கள் என்பதை நிரூபித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.இடைத்தேர்தல்களில் வலுவாக வேரூன்றிய, "பணநாயகம்' பொதுத் தேர்தலில் தோற்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தேர்தல் கமிஷனின் அதிரடியான செயல்பாடு. இதே செயல்பாடு வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டுமென்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. ஆனால், இது சாத்தியமாவது சற்று கடினமென முந்தைய வரலாறுகள் கூறுகிறது. ஏனெனில், சட்டசபைத் தேர்தலை நடத்தியது மத்திய தேர்தல் கமிஷன். உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போவது மாநில தேர்தல் கமிஷன்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, மாநில தேர்தல் கமிஷனராக இருந்த சந்திரசேகரன் முழுக்க, முழுக்க தி.மு.க.,வுக்கே சாதகமாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, ஒரு தலைபட்ச செயல்பாட்டை கலைந்து, உள்ளாட்சித் தேர்தலிலும் நடுநிலையை கடைபிடிக்க தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு கவனம் செலுத்த வேண்டும்.மாநில தேர்தல் கமிஷனராக இருந்த சையத் முனீர் ஹோடா பதவி விலகியதைத் தொடர்ந்து, மே 27ம் தேதி முதல் இரண்டாண்டுக்கு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோ.அய்யர், மாநில தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலை சிறப்புடன் நடத்திய, மத்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைப் படி செயல்பட்டு, உள்ளாட்சித் தேர்தலில் பணம் அதிகம் புழங்கும் என்ற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இத்தேர்தலிலும் ஜனநாயகம் வெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - tirunelveli,இந்தியா
05-ஜூன்-201115:59:57 IST Report Abuse
john "ஜனநாயகம் ஜெயிக்குமென்றால் திமுக ,ஆதிமுக இரண்டுமே தோற்க்கவேண்டும்,ஏனென்றால் திமுகவுக்கு இணையாக ஆதிமுகவும் பல தொகுதிகளில் பணபட்டுவாடா செய்ததாக தினமலரிலியே செய்தி வந்துள்ளது ." மக்களுக்காக உழைக்கும் உண்மை அரசியல்வாதி வைகோ வெற்றிபெற வேண்டும் ."
Rate this:
Share this comment
Cancel
P Siddharthan - Doha,கத்தார்
05-ஜூன்-201109:10:07 IST Report Abuse
P Siddharthan மக்கள் எதிர்பார்ப்பது நல்லாட்சியை . 3 வாரங்களில் மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் சீரளிக்கபட்டுள்ளது என்பது நன்றாக தெரிகிறது. 1200 கோடி சட்டசபை கட்டிடடம் , 500 கோடி சமசீர் கல்வி , 12000 கோடி மெட்ரோ ரயில் என மக்களின் வைதெரிச்சலை கொட்டி கொள்ளும் இந்த ஆட்சி நீடிக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்